ஜெய்ஸ்வால், அஸ்வின் அபாரம் – 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பை: மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.  அதன்படி, முதலில் பேட்ட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. தனி ஆளாகப் போராடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 26 ரன்கள் எடுத்தார்.  ராஜஸ்தான் … Read more

ஸ்ரீகாளஹஸ்தியில் காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய பெண் கிராம செயலர்

திருப்பதி: திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி அடுத்த முச்சுவேல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் வந்தனா (வயது 20). இவர் தொட்டம்பேடு அடுத்த பொய் கிராமத்தில் கிராம செயலாளராக வேலை பார்த்து வந்தார். வந்தனாவும், ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள குமரத் தெருவைச் சேர்ந்த மோகனின் மகன் சந்தீப் (24) என்பவரும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்தனர். சந்தீப் உறவினர் என்பதால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். நேற்று முன்தினம் இரவு வந்தனா பணிக்கு சென்று … Read more

இலங்கையில் மேலும் 9 மந்திரிகள் பதவியேற்பு

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்க பதவியேற்றார். அவரை தொடர்ந்து, ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் 4 புதிய மந்திரிகளாக ஏற்கனவே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில், இலங்கை … Read more

லைவ் அப்டேட்ஸ்: டாலருக்கு நிகரான ரஷிய ரூபிளின் மதிப்பு உயர்வு

20.5.2022 04.00: பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், பிரிட்டனில் தொழிலதிபராக இருக்கிறார். பாகிஸ்தான் வம்சாவளி நபரான இவர் உக்ரைனில் வசித்துவந்தவர். உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட பலரை பத்திரமாக வெளியேற்ற உதவியவர். உக்ரைன் பாடகியான கமாலியாவின் கணவர். இப்படிப் பல்வேறு விதங்களில் உக்ரைனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கும் முகமது சஹூர், சமீபத்தில் தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் அந்நாட்டுக்கு இரண்டு போர் விமானங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.  00.20: பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. … Read more

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் சித்து

பாட்டியாலா: பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று மூத்த குடிமக்கள் மீது பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவும், அவரது நண்பர் சந்து என்பவரும் வாகன விபத்தை ஏற்படுத்தினர்.  இந்த விபத்து தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில் 34 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் சித்துவுக்கு … Read more

ஊட்டி மலர் கண்காட்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்- சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் காணப்படும், இயற்கை அழகினை ரசிக்கவும், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலம், வெளிநாடு என பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வருகின்றனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் தோட்டக்கலைத்துறை சார்பில் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக மலர் கண்காட்சி ஆன்லைன் வாயிலாக நடந்தது. … Read more

குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்- பிரசாந்த் கிஷோர் பரபரப்பு ட்வீட்

புது டெல்லி: குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க பிரசாந்த் கிஷோர் சில யுக்திகளை வகுத்து அக்கட்சியின் தலைமையிடம் கொடுத்தார். பின் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் பேசப்பட்டது. இறுதியில் அவர் காங்கிரஸில் இணையவில்லை என்பது உறுதியானது.  பிரசாந்த் கிஷோர் கொடுத்த பரிந்துரைகளை காங்கிரஸ் ஏற்கவிலை என்பதாலும், அவர் காங்கிரஸில் இணைவதில் சில தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

மும்பை: மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெற்று 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் ட்ரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெவோன் கான்வே 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.  ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மொயின் அலி ராஜஸ்தான் … Read more

வேலைக்கார பெண்ணை அடித்து துன்புறுத்திய டெல்லி தம்பதியினர்

புதுடெல்லி: மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி பகுதியைச் சேர்ந்த ரஜனி (வயது 48) என்ற பெண், ஒரு ஏஜென்சியின் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள ஒரு தம்பதியரின் வீட்டில், வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு ரஜனிக்கு மாத சம்பளமாக ரூ.7000 கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தம்பதியினரான அபினீத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, ரஜனி உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறார், அவரை வீட்டிற்கு அழைத்து … Read more

சென்னை குடிநீர் வழங்கல் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குங்கள்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும். என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களை ஒப்பந்த ஊழியர்களாக மாற்றுவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். இது மக்களை ஏமாற்றும் செயல். வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், அதற்கு … Read more