வலுக்கட்டாயமாக மது ஊற்றி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த காதலனின் நண்பர்கள் 2 பேர் கைது

திருப்பதி: ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கரிக்கபாடு பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். குண்டூரை சேர்ந்தவர் கிரேஸ் பாபு (வயது 19). இவர் குண்டூரில் அங்கு உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ்பாபுவும், சிறுமியும் நட்பாக பழகி வந்தனர். இவர்களின் நட்பு காதலாக மாறியது. கிரேஸ் பாபுவுடன் படிக்கும் அவரது நண்பர்கள் ரிக்கி (19), மணிகண்டா (19). … Read more

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தந்த எலான் மஸ்க்? – பரபரப்பு குற்றச்சாட்டு

வாஷிங்டன்: உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை … Read more

சென்னை மாநகராட்சி கூட்டம் 30-ந்தேதி மீண்டும் கூடுகிறது

சென்னை: சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் ஆர்.பிரியா அறிவிக்கை செய்துள்ளார். சென்னை மாநகராட்சி முதல் மன்ற கூட்டம் கடந்த மாதம் 4-ந்தேதி நடைபெற்றது. புதிய பெண் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேயர், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் மண்டல தலைவர்கள், நிலைக்குழு … Read more

கேரளாவில் தொடர் மழைக்கு குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

திருவனந்தபுரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழை நீடிப்பதால் மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுபோல மலை கிராமங்களில் மழையால் மண்சரிவு … Read more

இலங்கையில் ஆகஸ்டு மாதம் முதல் உணவு தட்டுப்பாடு அபாயம்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை

கொழும்பு: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் பொதுமக்கள் பாடாதபாடு பட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள். இதனால் அவர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்காக பொதுமக்கள் நீண்ட தூரம் கால் கடுக்க காத்து கிடக்கின்றனர் . இதையடுத்து நேற்று மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தை ஓடுக்க போலீசார் மாணவர்கள் … Read more

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: காங்கிரஸ் கட்சி இரட்டை நிலைப்பாட்டில் தவிப்பது ஏன்? ஜி.கே.வாசன் கேள்வி

சென்னை: பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:- முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவத்தில் அவருடன் சேர்த்து 17 பேர்கள், குறிப்பாக காவல்துறை அதிகாரிகளும், காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரின் உணர்வுகளை, மனநிலையை தமிழகத்தை ஆளும், ஆட்சியும், கட்சியும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகளும் உணர்ந்து செயல்படவேண்டும். காரணம் சிறையில் உள்ள மற்ற 6 பேர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளும் … Read more

தென்மேற்கு பருவமழை 23ந்தேதியே தொடங்குகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

திருவனந்தபுரம்: இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும். அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும். இந்திய வானிலை ஆய்வு மையம் இதனை கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிந்தன. இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை … Read more

பாகிஸ்தான் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை

வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் கூறியதாவது:- கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது. இந்தியாவின் அணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகிறது.  இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது ராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது. மேலும் … Read more

ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு: லாலு பிரசாத்- மகள் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது 2004ம் ஆண்டு லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தார். அப்போது ரெயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ரெயில்வே வேலை பெற முயற்சித்தவர்களிடம் இருந்து அவர் நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் புதிய லஞ்ச வழக்கு ஒன்றை … Read more

சவுதிஅரேபியாவில் ஓட்டகம் மீது கார் மோதி கேரள தொழிலாளி பலி

திருவனந்தபுரம்: சவுதிஅரேபியாவில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளிகள் வேலை பார்த்து வருகிறார்கள். திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வினோஜ் கில்பர்ட் ஜாண் (வயது42) என்பவர் சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தொழில் நிமித்தமாக இவர் காரில் சென்றார். பாலைவன சாலையில் சென்ற போது அங்கு ஏராளமான ஓட்டகங்கள் சென்றன. வினோஜ் கில்பர்ட் ஜாண் சென்ற கார் எதிர்பாராத விதமாக ஓட்டகங்கள் மீது மோதியது. இதில் கார் நிலைதடுமாறி கவிழ்ந்தது. காரில் … Read more