இலங்கை வன்முறை தொடர்பாக 3 எம்.பிக்கள் கைது

கொழும்பு:  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசுக்கு எதிராக அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மீது கடந்த மே 9-ஆம் தேதி முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளா்கள் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது.  இதில் ஆளும்கட்சி எம்.பி. ஒருவா் உள்பட 10 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக 1,059 பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்திருந்த நிலையில், தற்போது வன்முறையை ஊக்குவித்ததாக ஆளும் … Read more

மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: இந்தியாவில் உள்ள மலை வாசஸ்தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் … Read more

கொரோனா வடு மறைவதற்குள் புதியதாக பரவும் குரங்கு அம்மை வைரஸ்

வாஷிங்டன்: கடந்த 2019-ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரசில் இருந்தே உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில், குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து … Read more

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி கோர்ட்டு தீர்ப்பு

புதுடெல்லி : காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் முகமது யாசின் மாலிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் பயங்கரவாத , பிரிவினைவாத குற்றச்சாட்டுகளுடன் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டப்படி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் யாசின் மாலிக் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் யாசின் மாலிக் குற்றவாளி என என்.ஐ.ஏ. கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. … Read more

உக்ரைனுக்கு 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி – ஜி7 நாடுகள் அறிவிப்பு

ஜெர்மனி: உக்ரைன் மீது ரஷியா 3 மாதங்களுக்கும் மேலாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதனால், உக்ரைன் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்நாட்டு மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.  உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தேவையான நிதி, ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுக்கு உதவி ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு முன்வந்துள்ளன. ஜி7 கூட்டமைப்பு நாடுகள் 18.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 1.4 லட்சம் கோடி) நிதி உதவியாக வழங்கவுள்ளன. … Read more

காஷ்மீரில் விரைவில் தேர்தலை நடத்த மக்கள் விருப்பம்: உமர் அப்துல்லா

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறு வரையறை செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது தொகுதி மறு வரையறை பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான உமர் அப்துல்லா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பான முடிவை நாங்கள் எடுக்க முடியாது. ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவது தொடர்பான … Read more

விடுதலைப்புலிகளுடனான போரில் பழிவாங்கும் உணர்வு இல்லை: கோத்தபய ராஜபக்சே

இலங்கை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போர், கடந்த 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி முடிவடைந்தது. அந்த தேதி, போரில் உயிர்நீத்த இலங்கை ராணுவ வீரர்களை நினைவுகூரும்வகையில், போர் வீரர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ராணுவ மந்திரியாகவும் இருக்கும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த ராணுவ படைகளை எந்த சூழ்நிலையிலும் மறக்க முடியாது. நமது படைகள், மனிதாபிமான நடவடிக்கை மூலம் … Read more

பேய் பிடித்திருப்பதாக கூறி பெண்ணை எரியும் தீக்குழியில் நிற்க வைத்த கொடூரம்

ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் விக்ராபாத் மாவட்டத்தில் உள்ள கல்லூரி பயின்று வருபவர் 19 வயதான இளம்பெண். அந்த இளம் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த இளம் பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகவும், மாந்தீரிகவாதியிடம் அழைந்து சென்று பேய் ஓட்டும்படியும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், பெற்றோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண்ணை மாந்தீரிகம் செய்யும் ஒரு நபரிடம் அழைத்து சென்றுள்ளனர். அந்த மாந்தீரிகவாதி உங்கள் பெண்ணுக்கு பேய் … Read more

பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடு இந்தியா – ஐ.நா. கணிப்பு

நியூயார்க்: ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு: உக்ரைன் போரால் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு தெற்காசிய … Read more

தோடர் இன பெண்களுடன் நடனம் ஆடி அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது மலர் கண்காட்சி, ஊட்டி உருவாகி 200-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் இருந்து புறப்பட்டு வேன் மூலம் ஊட்டிக்கு வந்தார். அப்போது மேட்டுப்பாளையம் அருகே நீலகிரி மாவட்ட எல்லையில் கலெக்டர் அம்ரித் அவரை வரவேற்றார். இதைத்தொடர்ந்து குன்னூர் லெவல் கிராஸ் பகுதியில் தி.மு.க.வினர் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். குன்னூரில் … Read more