டோக்கியோவில் 24-ம் தேதி குவாட் மாநாடு – பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் சேர்ந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. குவாட் தலைவர்களின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்றது. 2-வது மாநாடு செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாட்டு தலைவர்களும் நேரில் பங்கேற்றனர். இந்நிலையில், குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 24-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந் து கொள்கிறார். … Read more

மகாராஷ்டிராவில் சோகம் – அணையில் குளிக்கச் சென்ற இளம்பெண்கள் உள்பட 8 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தின் பொஹர் தாலுகா நரிஹான் என்ற கிராமத்தில் நேற்று நடந்த குடும்ப நிகழ்ச்சியில் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின் மாலை அப்பகுதியில் உள்ள பஹதர் அணையில் சில பெண்கள் குளிக்கச் சென்றனர். அணையில் குளித்துக் கொண்டிருந்தபோது 5 பெண்கள் தண்ணீரின் வேகத்தில் மூழ்கியும், இழுத்தும் செல்லப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அணை அமைந்துள்ள பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட பெண்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு … Read more

ஆப்கனில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூடவேண்டும் – தலிபான்கள் உத்தரவு

காபுல்: ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். ஆனால், தங்களின் முந்தைய ஆட்சிக்காலத்தைப் போன்று கடுமையான ஆட்சி இருக்காது என தலிபான்கள் உறுதி அளித்தனர்.  இதற்கிடையே, பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பில், பொது இடங்களில் பெண்கள் … Read more

விருதுநகர் மாவட்டத்தில் 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பேரியம் உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடி போன்ற பட்டாசுகளை தயாரித்தல், சேமித்து வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசு உற்பத்தி ஆலைகளை தொடர் ஆய்வு செய்ய வருவாய்த்துறை, போலீஸ் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கீவ் நகரத்தில் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு

19.05.2022 18:30: கடந்த மூன்று நாட்களில் மட்டும் மரியுபோல் நகரில் உக்ரைன் படையைச் சேர்ந்த 1730 வீரர்கள் சரண் அடைந்திருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால், இதுபற்றி உக்ரைன் தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. உருக்காலைக்குள் எத்தனை பேர் இருந்தார்கள்? வெளியேறியவர்கள் போக மீதமுள்ளவர்களின் நிலை என்ன? என்பது குறித்தும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.  16:30: உக்ரைனில் போர்க்குற்ற விசாரணையில் உள்ள முதல் ரஷிய வீரர், இன்றைய விசாரணையின்போது கீவ் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார். ரஷிய படையெடுப்பின் ஆரம்ப … Read more

பாமாயில் ஏற்றுமதிக்கான தடை நீக்கம் – இந்தோனேசியா அதிபர் அறிவிப்பு

ஜகார்த்தா:  உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் … Read more

வங்காளதேசம், இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது

சட்டோகிராம்: வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 397 ரன்னில் ஆல் அவுட்டானது. ஏஞ்சலோ மேத்யூஸ் இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 199 ரன்னில் ஆட்டமிழந்தார்.  வங்காளதேசம் சார்பில் நயீம் ஹசன் 6 விக்கெட், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, ஆடிய வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 465 … Read more

டோனிக்கு ரசிகர் எழுதிய உணர்ச்சிமிகு கடிதம்- இணையத்தில் வைரல்

சென்னை: நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி தொடரில் இருந்து வெளியேறியது. கடந்த ஆண்டு 4-வது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணி, இந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டனாக இந்த ஆண்டு பொறுப்பேற்ற ஜடேஜா தனது பதவியை துறந்தார். பின் அவர் தொடரில் இருந்தும் வெளியேறினார். முன்னாள் கேப்டன் டோனி மீண்டும் பொறுப்பை … Read more

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் ரஷியா ராணுவம் – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி விளக்கம்

20.5.2022 00.20: பிரிக்ஸ் கூட்டமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ், உக்ரைனில் நிலவும் சூழ்நிலையை எடுத்துரைத்தார். உக்ரைனில் ரஷியா ராணுவத்தின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினார்.

தமிழகத்தில் விரைவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பு- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

மதுரை: தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை மதுரை வந்தார். பின்னர் அவர் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், புதிய சாலை மேம்பாட்டு பணிகளுக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து எ.வ.வேலு மதுரை நத்தம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- … Read more