விராட் கோலி, மேக்ஸ்வெல் அதிரடி – குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. ஹர்திக் பாண்டியா 62 ரன்னும், டேவிட் மில்லர் 34 ரன்னும், விரித்திமான் சஹா 31 ரன்னும் எடுத்தனர். பெங்களூரு சார்பில் ஹேசிவுட் 2 … Read more

உலக மகளிர் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் நிகாத் சரீன்

உலக குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நிகாத் சரீன் தங்கப் பதக்கம் வென்றார். 52 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ஜித்போங்கை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி நிகாத் சாதனை படைத்துள்ளார். உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோமுக்கு பிறகு தங்கம் வென்று 25 வயதான நிகாத் சரீன் அசத்தியுள்ளார். இதையும் படியுங்கள்.. மாமல்லபுரத்தில் ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிக்கு கூடுதல் அரங்கம்- பணிகள் தீவிரம்

ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்து குஜராத்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை வாங்கடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 47 பந்துகளில் மூன்று 6, 4 பவுண்டரிகளுடன் 62 … Read more

பச்சிளம் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற கல்லூரி மாணவி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மலக்கப்பாரா அருகே உள்ள பெரும்பராவைச் சேர்ந்தவர் சிந்து (வயது 23), கல்லூரி மாணவியான இவர், திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் ஆகியுள்ளார். இந்தநிலையில் அவருக்கு வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் சுகாதார பணியாளர் ஒருவரின் உதவியை சிந்து நாடியுள்ளார். அவருக்கு சிந்துவின் உடல்நிலையில் சந்தேகம் ஏற்பட்டது. திருமணமாகாத அவருக்கு இப்படி ஏன் ஏற்பட்டது என சந்தேகம் கொண்ட அவர், போலீசில் புகார் செய்தார். போலீசார் … Read more

மத்திய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை – பழனிவேல் தியாகராஜன்

ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி விவகாரங்களில் சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் சம உரிமை உள்ளது. அப்படி செய்தால் அது கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும். இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளை கடந்து முடிவெடுக்க … Read more

டெல்லி தொழிற்சாலையில் தீ விபத்து- ஒருவர் பலி

புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்கு பகுதியில் முஸ்தபாபாத் பகுதியில் எலெக்ட்ரிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையின் முதல் தளத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் குறிப்பிட்ட பகுதிக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சுமார் அரைமணி நேரத்திற்கு பின்னர்  தீ  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார் என்று தீயணைப்புத் துறை இயக்குநர் அதுல் … Read more

ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாய்ப்பில்லை- மத்திய ரெயில்வே அமைச்சர்

இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறியதாவது:- நாட்டில் ரெயில் கட்டணம் இப்போதைக்கு உயர வாயப்ப்பில்லை. 2030-ம் ஆண்டு ஹைப்பர்லூப் ரெயில்வே திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 5 ரெயில்வே நிலையங்கள் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. வனவிலங்குகள் பாதிக்காத வகையில் ரெயில்வே சுரங்கப் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதையும் படியுங்கள்.. வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ

ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் … Read more

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபோது மீட்புப் பணியாளரின் முதுகில் ஏறிச் சென்ற பாஜக எம்எல்ஏ

கவுகாத்தி: பருவமழைக்கு முந்தைய கனமழையால் அசாமில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஒன்பது பேர் இறந்துள்ளனர் மற்றும் 6.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு காரணமாக, 48 ஆயிரம் மக்கள் 248 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  அதுமட்டுமல்லாமல், ஹோஜாய் மற்றும் கச்சார் மாவட்டங்களில் மழையின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் மூலம் ஹோஜாய் மாவட்டத்தில் … Read more

உலகில் அமைதியை நிலைநாட்டும் தேசத்தை உருவாக்க வேண்டும்- இளைஞர் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் சுவாமி நாராயண் கோவில் சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: சர்வதேச குழப்பங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில், உலகில் அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்ட தேசத்தை உருவாக்க வேண்டும். இன்று நாம் புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்க விரும்புகிறோம். அதை செய்து முடிக்க நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா, தனது பழமையான மரபுகளை கடைபிடிக்கும். அதே வேளையில் புதிய … Read more