கனகசபை தரிசனம்- போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்களுக்கு அனுமதி

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் சபாநாயகர் (நடராஜர்) கோவிலில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் சபாநாயகரை தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துகளை அரசு பரிசீலனை செய்து, கோவிலில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும், பக்தர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், … Read more

ராஜஸ்தானில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 5 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் கண்டெல்வாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று எதிரே வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், படுகாயமடைந்த 10 பேரை மீட்டு அல்வார் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர்கள் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், காயமடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து … Read more

போலி மருத்துவர் விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை: தி.மு.க. ஆட்சியில் போலி மருத்துவர் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- கடந்த 07-05-2022 அன்று கடலூர் மாவட்டம் வேப்பூர் தாரா மருந்தகத்தில் சிகிச்சை பெற்ற இரண்டு மணி நேரத்தில் 5-வயது பெண் குழந்தை உயிரிழந்து விடுகிறது. இது குறித்து கடலூர் மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், துணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் மீரா உத்தரவின் பேரில் நல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தமிழரசன் … Read more

சரத் பவாருக்கு எதிரான விமர்சனம்: மராத்தி நடிகை ஜெயிலில் அடைப்பு

மும்பை: மகாராஷ்டிரா நடிகை கேத்தகி சித்தலே. இவர் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை அளிக்கும் வகையில் கருத்தை பதிவிட்டார். “நீங்கள் பிராமணர்களை வெறுக்குறீர்கள். உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது” என்று சரத்பவாரை விமர்சிக்கும் விதமாக கேத்தகி சித்தலே சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். சரத்பவாரின் பெயரை முழுமையாக நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், பவார் என்றும் 80 வயதானவர் என்றும் அந்த பதிவு குறிப்பிடுகிறது. சரத்பவார் 81 வயதானவர். இந்த … Read more

பேரறிவாளன் விடுதலை தாமதம் ஆனதற்கு இவர்கள்தான் காரணம்- அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் தாக்கு

சென்னை: தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 31 வருடங்கள் சிறையிலிருந்த பேரறிவாளன் விடுதலையை “கேலிக் கூத்து” என்று கூறி – மனிதாபிமானமின்றி, மட்டரக அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட சிறைவாசத்திலிருந்து பேரறிவாளன் விடுதலை பெற அவரது தாய் அற்புதம்மாள் நடத்திய சட்டப் போராட்டமும் – அதற்குத் துணைநின்ற திமுக அரசும் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. … Read more

யானை மீது சவாரி… விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடத்திய சித்து

பாட்டியாலா: நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையானது உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பரவலாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.    இந்நிலையில்,  முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பஞ்சாப் காங்கிரசின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள பரபரப்பான மார்க்கர் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்து இன்று நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் யானை மீது அமர்ந்து பயணம் செய்து, பதாகையை … Read more

பேரறிவாளனை தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பூந்தமல்லியில் இன எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு: * இனப்படுகொலைக்கு உள்ளாகி, உயிர், உரிமை, உடமை, நிலம் என அனைத்தையும் இழந்து நிற்கும் எம் மக்களுக்கு தனித்தமிழீழம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து இந்திய ஒன்றிய அரசு பொதுவாக்கெடுப்பிற்கான முன்னெடுப்புகளைச் செய்ய பன்னாட்டுச்சமூகத்திற்கு அரசியல் நெருக்கடி தர வேண்டும் எனவும், அதற்கான உரிய அரசியல் அழுத்தங்களை ஒட்டுமொத்த … Read more

‘எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ – மந்திரி ரோஜாவிடம் முறையிட்ட முதியவர்

நகரி: ஆந்திர அரசின் நலத்திட்டங்கள் சென்றடைகிறதா என்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று கேட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.  இதையடுத்து சுற்றுலாத்துறை மந்திரியும், நடிகையுமான ரோஜா, புத்தூர் மண்டலம் ஒட்டிகுண்டல என்ற கிராமத்துக்கு அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றார். அங்கு ஒவ்வொரு வீடாக சென்று விசாரித்து வந்த அவர், முதியவர் ஒருவரின் வீட்டிற்கு சென்று ‘ அரசு வழங்கும் பென்சன் கிடைக்கிறதா?’ என்று கேட்டார். … Read more

இந்திய தொழில்நுட்பக் கழகம் நடத்த ஜமைக்கா ஆர்வம்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள், புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்) ஆகியவற்றில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் … Read more

பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை- உச்சநீதிமன்றம் அதிரடி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஷெரன்வாலா கேட் கிராசிங் அருகே 1988-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று மூத்த குடிமக்கள் மீது பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவும், சந்து என்பவரும் வாகன விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்த விபத்து தொடர்பான வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது.   தொடர்ந்து, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசரணைக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான அமர்வின் … Read more