அரியானாவில் சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி மோதி விபத்து- 3 பேர் பலி

சண்டிகர்: அரியானா மாநிலம் ஜாஜ்ஜார் மாவட்டத்தில் பாலம் கட்டுமான பணிக்காக உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த 18 தொழிலாளர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

வாயில் வெள்ளை துணி- கையில் கருப்பு கொடியுடன் ராஜீவ் சிலை முன்பு காங்கிரஸ் போராட்டம்

சென்னை: பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் கோர்ட்டு தீர்ப்பை விமர்சிக்க விரும்பாவிட்டாலும் அவர் நிரபராதி அல்ல, குற்றவாளியே என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து தங்கள் வேதனையையும், எதிர்ப்பையும் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று காலை 10 மணிக்கு வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சைதாப்பேட்டையில் உள்ள ராஜீவ் காந்தி சிலை … Read more

வீடு புகுந்து திருட முயன்ற வடமாநில வாலிபர் மரத்தில் கட்டி அடித்துக்கொலை

திருப்பதி: திருப்பதி மாவட்டம் கூடூர் அடுத்த திலக்நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். நேற்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் சதீசின் வீட்டுக்கு புகுந்தார். அங்குள்ள பொருட்களை திருட முயன்றார். இதனை கண்டு திடுக்கிட்ட சதீஷ் அலறி கூச்சலிட்டார். வீட்டில் இருந்த தடி மற்றும் இரும்புக்கம்பியால் அந்த வாலிபரை தாக்கினார். சதீசின் அலறல் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியினர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் அந்த வாலிபரை பிடித்து அங்குள்ள ஒரு மரத்தில் கட்டிப்போட்டு சரமாரியாகத் … Read more

உற்பத்தி, ஏற்றுமதி-பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

கோவை: கோவையில் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட தொழில்முனைவோருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: தொன்மையான பாரம்பரியமும் தொழில் வளமும் மிகுந்த இந்த கோவையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த தமிழக தொழில்துறைக்கு நன்றி. தொழில்துறையை தேர்ந்தெடுத்து அதில் உணர்வு பூர்வமாக ஈடுபட்டு, கடும் உழைப்பையே முதலீடாக வழங்கி இன்று தொழில் அதிபர்களாக பல ஆயிரம் நபர்களுக்கு வேலை வழங்கி, இப்பகுதி செழிக்க சிறப்பான பங்களிப்பு வழங்கி … Read more

மருத்துவர்கள் மீது தாக்குதல்- வேலை நிறுத்தம் அறிவிப்பு

புது டெல்லி: டெல்லியில் உள்ள லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்து  அடுத்தத்த நாட்களில் உயிரிழந்தன. இதனால் ஆத்திரமடைந்த குழந்தைகளின் உறவினர்கள் பணியில் இருந்த ஒரு பெண் மருத்துவர் உட்பட பல மருத்துவர்கள் மீது  தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதையடுத்து மருத்துவர்கள் பணிக்கு செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லி ஹார்டிங் மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உயிரை காக்கும் மருத்துவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் மனித தன்மையற்ற, வன்மையான தாக்குதலானது ஏற்றுக்கொள்ள முடியாதது.  … Read more

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சீபுரம், வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வரதராஜ பெருமாள் தினந்தோறும் தங்க சப்பரம், சேஷ வாகனம், யானை வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியாக 7ம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவில் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் நீலம் மற்றும் ரோஜா நிற பட்டு உடுத்தி … Read more

அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு

கவுகாத்தி: அசாமில் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றிலும் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது. இந்த வெள்ளத்தில் மூழ்கி பல கிராமங்கள் நீரில் மிதக்கின்றன.  இந்நிலையில் இந்த வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 மாவட்டங்களில் 6.62 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், … Read more

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்மழை- பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று வீசி வருவதால் இதமான சூழ்நிலை நிலவுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்வதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக மெயினருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் அதிக அளவு கொட்டி வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக … Read more

பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்- சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

புதுடெல்லி: பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை தடுக்க விசாகா கமிட்டி வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது போல் பள்ளிகளிலும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, பள்ளி குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம். அனைத்து பள்ளிகளிலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று அறிவுறுத்தினர். இந்த மனு மீது பதிலளிக்க … Read more

குமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை அணை நிரம்புகிறது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் இரவும் மழை நீடித்தது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த நிலையில் காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்தது. கொட்டாரம், … Read more