பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு 8 மணிநேரம் ஆகிறது

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இலவச தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். திருப்பதி நேற்று 74,389 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 38,007 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் … Read more

சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்

டோக்கியோ : ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி சுனாமி தாக்கியபோது உலகிலேயே பாதுகாப்பான அணு உலையாகக் கருதப்பட்ட புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதில் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்து உலைகளை குளிர்விக்க மின்சாரம் இல்லாமல் போனது. இதனால் 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதம் அடைந்தன. இதனால் சுற்றியுள்ள பகுதிகளில் கதிர்வீச்சு தாக்கியது. 10 ஆண்டுகள் கடந்தும் மக்கள் வசிக்க முடியாத அளவிற்கு கதிர்வீச்சின் தாக்கத்தை இன்னமும் … Read more

நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்- பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சிலர் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போது கடும் வாக்குவாதம் செய்துகொண்டே வந்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் அதிகமாகி அவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக தாக்கினார். கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு அடித்துக் கொண்டனர். பின்பு இரும்பு கதவுகளில் தலையை கொண்டு மோத செய்து சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதை அந்த வழியாக … Read more

கேரளாவில் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழை 22ந் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அதிக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ள கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு … Read more

வங்கதேசம்- இந்தியா நாடுகளுக்கு இடையே மீண்டும் ரெயில் சேவை

புது டெல்லி: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை மே 29 முதல் மீண்டும் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தில் உள்ள நகரங்களுக்கு இடையேயான ரெயில் சேவைகள் மார்ச் 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டன.  இந்த சேவை நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவல் இந்தியா, வங்கதேசம் இரு நாடுகளிலும் குறைந்துள்ளதால் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ரெயில் சேவை … Read more

தொடர் மழை- கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பகலில் வெயிலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக பலத்த மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மலையில் இருந்து வந்த தண்ணீரில், அப்பகுதி இளைஞர்கள் மீன்களை பிடித்தனர். மேலும், கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 2ந் தேதி நீர்வரத்து 12 … Read more

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,569 ஆக இருந்தது. நேற்று 1,829 ஆக அதிகரித்த நிலையில், இன்று பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 596, டெல்லியில் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு 307 ஆக உயர்ந்தது. அரியானாவில் … Read more

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்: தலிபான்கள் உத்தரவு

காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் … Read more

பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை… 31 வருட வழக்கின் பாதை…

சென்னை: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழ்க்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் நேற்று தீர்ப்பு வழங்கினர். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். சுப்ரீம் கோர்ட் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய … Read more

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை: உமர் அப்துல்லா

ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி துணை தலைவருமான ரஜோரி மாவட்டத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ நீக்கப்பட்ட பின் காஷ்மீர் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஒன்றன்பின் … Read more