லைவ் அப்டேட்ஸ்: 256 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்
18.05.2022 18:00: ஐரோபிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாடுகளின் தூதர்களை ரஷியா வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் 34 தூதரக அதிகாரிகளையும், இத்தாலியின் 24 தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றுகிறது. 16:30: உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ரஷிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு, இந்த செயல்முறையைத் தொடர முழு விருப்பம் இல்லை எனவும் அவர் கூறினார். … Read more