முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- கிளிநொச்சியில் இன்று கடை அடைப்பு

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சில் ஏராளமான குழந்தைகளும் பலியானார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழ் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். போரில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று கடைபிடிக்கப்பட்டது. போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். வடமாகாண … Read more

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்- ஸ்ரீகாந்த் 2ம் சுற்றுக்கு முன்னேற்றம்

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். இவர், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் பிரைஸ் லெவர்டெசை, 18-21 21-10 21-16 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். அடுத்து அயர்லாந்து வீரர் நிகுயென்னை எதிர்கொள்கிறார் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்த் தலைமையிலான இந்திய ஆடவர் அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமஸ் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது. 14 முறை சாம்பியன் பட்டம் வெற்ற இந்தோனேசிய அணியை இறுதிச்சுற்றில் … Read more

காரில் ரூ.3 கோடி பறிமுதல்- ஹவாலா பணமா?

திருப்பதி: ஆந்திர மாநிலம் அனக்காபல்லி மாவட்டம் நாக்காபல்லி போலீசார் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை மறித்து சோதனை நடத்தினர். காரில் ஒரு பையில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது. அதனை போலீசார் எண்ணி கணக்கிட்டதில் ரூ.3 கோடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் காரில் வந்த சீனிவாச ராவ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பணம் கணக்கில் வராததது என்பது தெரியவந்தது. அவர் நிலம் … Read more

கொரோனா வைரஸ் பரவல்: சீனாவின் பிஜிங்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை

பிஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஒரு பகுதியில் கொரோனா கண்டறியப்பட்டால், அந்நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பூஜ்ய கொரோனா கொள்கையை கடை பிடிக்கும் சீன அரசு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஷாங்காய் நகரில் வைரஸ் பரவல் அதிகரித்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்கு வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை. அதேபோல் தலைநகர் பிஜிங்கில் சில … Read more

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நாளை அறப்போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பேரறிவாளன். மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதற்கிடையே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம்தான் கொலையாளிகள் … Read more

குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து 12 பேர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டம் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ளது சாகர் உப்பு தொழிற்சாலை. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று தொழிற்சாலையில், சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 20 முதல் 30 தொழிலாளர்கள் புதையுண்டு இருக்கலாம் என்றும், ஆனால் இதுவரை இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கக்கூடிய மற்றவர்களை … Read more

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடிவு- பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தகவல்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் பதவியை ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, நாட்டை சரிவில் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசு துறைகளில் எடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். இலங்கை அரசிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணையுடன் இலங்கை துறைமுகத்தில் இருக்கும் 3 கப்பல்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை வெளிச்சந்தையில் வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதமாக உயரும்- அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர்: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட்டில் 75 ஆண்டு பழமையான கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: 1947ல் தொடங்கப்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பில் இன்று … Read more

பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த மகத்தான வெற்றி- அதிமுக

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்:-   அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது. பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா … Read more

அற்புதம்மாளின் அயராத போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி- பேரறிவாளன் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்

திருப்பத்தூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை அதிரடியாக விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் தீர்ப்பை ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த விடுதலைக்கு பின்னால் ஒரு தாயின் பாசப்போராட்டம் நிரம்பி கிடக்கிறது. 1991ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே அற்புதம்மாளின் பாசப் போராட்டமும், நீதிக்கான போராட்டமும் தொடங்கியது. தனது மகன் பேரறிவாளன் நிரபராதி என்று கூறி வந்த … Read more