டெல்லியில் ரோகினி நீதிமன்றத்தில் தீ விபத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தானது நீதிபதிகள் அறையின் அருகாமையில் உள்ள ஏர்கண்டிசனரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நிகழ்ந்துள்ளது.    தகவல் அறிந்தவுடன் ஐந்து  தீயணைப்பு வாகனங்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று தீயை அணைத்தன. இதுவரை பாதிப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று டெல்லி தீயணைப்பு துறை இயக்குநர் அதுல் கார்க் தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த விபத்தானது டெல்லியில் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட … Read more

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் அவதி

ரோம்: போப் ஆண்டவர் பிரான்சிஸ் சில நாட்களாக வலது முழங்கால் வலியால் அவதி அடைந்து வருகிறார். வலி நிவாரணத்துக்காக ஊசி மூலம் மருந்து செலுத்தி கொள்வதாக போப் ஆண்டவர் தெரிவித்தார். இதற்கிடையே 85 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மூட்டு வலியால் நடப்பதற்கு சிரமப்பட்டதால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்துமாறு டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். போப் ஆண்டவரின் முழங்கால் வலிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்காக … Read more

பேரறிவாளன் விடுதலை எனக்கு கிடைத்த வெற்றி- தாயார் அற்புதம்மாள் உருக்கம்

ஜோலார்பேட்டை: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியவில்லை என கூறி அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். எனது மகன் பேரறிவாளன் விடுதலையானது எனக்கு கிடைத்த வெற்றி. இது என்னுடையதல்ல எங்களுக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் நன்றி என்று கூறினார். பேட்டியை முடித்ததும் பேரறிவாளன் பறை கொட்டி தனது மகிழ்ச்சி ஆரவாரத்தை வெளிப்படுத்தினார். இதையும் படியுங்கள்…உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது- விடுதலைக்குப் … Read more

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் பங்குகளை விற்க முடிவு

புது டெல்லி : பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்’ நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக விற்க, மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், பி.பி.சி.எல்., நிறுவனத்தை முழுமையாக வாங்க, யாரும் முன்வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் 20 – 25 சதவீத பங்குகளை மட்டும் தற்போதைக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வேலைகள் தற்போது நடந்து வருவதாக, பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சியின் பொதுப்பங்குகள் சமீபத்தில் விற்கப்பட்ட நிலையில், தற்போது பி.பி.சி.எல் நிறுவனத்தையும் … Read more

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்- வக்கீல் புகழேந்தி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் புழல் ஜெயிலிலும் ரவிச்சந்திரன் மதுரை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் ஜெயிலில் உள்ள மற்ற 6 பேரும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார்.இது சம்பந்தமாக அவர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் … Read more

பிரதமர் மோடிக்கு எதிரான வீடியோ வெளியிட்ட காமெடியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை- டுவிட்டர் இந்தியாவுக்கு சம்மன்

புதுடெல்லி: இந்த மாதம் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அப்போது சிறுவன் ஒருவனுடன் மோடி உரையாடும் போது அந்த சிறுவன்  ‘ஜென்மபூமி பாரத்’ என்ற பாடலை பாடினான்.   இதனை, காமெடி நடிகர் குணால் கம்ரா  ‘ஜென்மபூமி பாரத்’ பாடலுக்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கான பாடலை மாற்றி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.  இதைத்தொடர்ந்து , சிறுவனின் தந்தை  அவரது டுவிட்டர் பதிவில் குணால் கம்ராவை சாடியதோடு மட்டுமல்லாமல் உங்கள் இழிவான அரசியலில் இருந்து என் மகனை தள்ளி … Read more

ரஷியாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்- பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்

மாஸ்கோ: கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷியாவிற்கு மெக்டோனல்ட்ஸ் உணவகம் வந்தது. இது அமெரிக்க முதலாளித்துவத்தின் அடையாளம் என பேசப்பட்டது.  1990-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி மத்திய மாஸ்கோவில் புஷ்கின் சதுக்கத்தில் இந்த உணவகம் தொடங்கப்பட்டபோது. இதில் விற்கப்படும் பிக் மேக் என்ற பர்க்கரை வாங்குவதற்கு 30,000 பேர் கூடியிருந்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த மெக்டோனால்ட்ஸ் உணவகங்கள் தற்போது ரஷியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக … Read more

மாசுக்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை- அன்புமணி ராமதாஸ்

சென்னை: பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 2019-ம் ஆண்டில் அனைத்து வகை மாசுக்களால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சம். இவர்களில் காற்று மாசுக்கு பலியானவர்கள் மட்டும் 17 லட்சம் பேர் என்று லான்செட் ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புள்ளி விவரம் அதிர்ச்சி அளிக்கிறது. உலக அளவில் மாசுக்களால் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 27 சதவீதம் இந்தியர்கள் என்பதிலிருந்தே இந்தியா எத்தகைய ஆபத்தில் … Read more

ஷீனா போரா கொலை வழக்கு- இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் … Read more

வரதட்சணை வாங்கி வராத ஆத்திரத்தில் மருமகள், பேரன் மீது தீ வைத்த மாமனார்- பேரன் பலி

உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள நாராயணத்தேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன்(60). இவர் திராட்சை தோட்டத்தில் கூலிதொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அருண்பாண்டியன்(29). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த சிவப்பிரியா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாகித்(2) என்ற ஆண்குழந்தை உள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் தனது மருமகளிடமிருந்து வரதட்சணை கிடைக்கவில்லை என்று அருண்பாண்டியன் குடும்பத்தினர் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். … Read more