வங்கதேசத்தினர் என நினைத்து இஸ்லாமிய குடும்பம் மீது தாக்குதல் – வெறியாட்டம் ஆடிய உ.பி இந்து அமைப்பு

காசியாபாத்: வங்கதேச நாட்டில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் இந்து ரக்ஷா தல் அமைப்பினர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என நினைத்து தவறுதலாக இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களிலும் வெளியாகியுள்ளது. வங்கதேச நாட்டின் அரசியல் அசாதாரண சூழ்நிலையால் தொடர்ந்து பதற்றம் நிலவிக் Source Link

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. தூக்குல போடுவேன்..கொதித்தெழுந்த மம்தா..

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும்கட்சியை கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள இந்த வழக்கில் முதல்வர் மம்தா தேவைப்பட்டால் கொலையாளிகளை தூக்கில் போடுவேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அப்பெண் Source Link

வங்கதேச விவகாரம்.. திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாகுமா?

டாக்கா: வங்கதேச உள்நாட்டுப் பிரச்னை மற்றும் அரசியல் அசாதாரண சூழல், திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு பின்னலாடை உற்பத்தியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தியாவில் இருந்தே பின்னலாடை வர்த்தகத்துக்கான மூலப்பொருள்கள் அனைத்தும் வங்கதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னை திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்துக்கு கைகொடுக்க வாய்ப்புள்ளதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Source Link

ஜஸ்ட் மிஸ்ஸில் பறிபோன பதக்கம்.. வினேஷ் போகத் மேல் முறையீடு! தீர்ப்பு குறித்து வெளியானது அப்டேட்

பாரீஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இறுதி சுற்றுவரை வினேஷ் போகத் முன்னேறியிருந்த நிலையில், திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை சர்வதேச தீர்ப்பாயம் ஏற்ற நிலையில், நேற்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இரவு 9 மணிக்குள் தீர்ப்பு வெளியாகும் Source Link

நாங்கள் விரட்டப்பட்டோம்! தாக்கப்பட்டோம்! கலங்க வைத்த வங்கதேச இந்துக்கள்.. வலிமிகுந்த வரலாறு

கொல்கத்தா: இந்திய சுதந்திரத்தில் இருந்தே வங்கதேசத்தில் நடக்கும் அரசியல் சிக்கல், பிரச்சனைகள் எல்லை கடந்து இந்தியாவையும் பாதித்தது உண்டு. முக்கியமாக வங்கதேச எல்லையில் இருக்கும் மேற்கு வங்கத்தை வங்கதேச அரசியல் பாதித்தது வெகுவாக உண்டு. சுதந்திரத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பிரிவினையின் போது பல லட்சம் மக்கள் வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்திற்கு இடம்பெயர்ந்தனர். முக்கியமாக வங்கதேசத்தில் மைனாரிட்டிகளாக Source Link

நீட் தேர்வு:கல்லாகட்டும் கோச்சிங் சென்டர்ஸ்..வஞ்சிக்கப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள்..ஆர்டிஐ அதிர்ச்சி

நீட் தேர்வுக்கான எதிர்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நீட் தேர்வு ஏன் வேண்டாம் என்பதற்கு எத்தனையோ புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நீட் தேர்வு வருகைக்கு பிறகு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சியூட்டும் ஆர்டிஐ தகவல் வெளியாகியுள்ளது. 2021-2022, 2022-2023, 2023-2024 கல்வி ஆண்டுகளில் அரசு, Source Link

ஒருவர் கூட பிழைக்கவில்லை.. 62 பேரும் உயிரிழப்பு.. பிரேசில் விமான விபத்து நடந்தது எப்படி?

ரியோ: பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 58 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்துகொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், சிப்பந்திகள், விமானிகள் என அனைவரும் உயிரிழந்தனர். விமானம் விபத்துக்குள்ளாகும் வீடியோவும் வெளியாகியுள்ளது. பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் இருந்து வியோபாஸ் Source Link

பிரேசிலில் 62 பேருடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்து சிதறி பெரும் விபத்து

ரியோ: பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில் 62 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது.. நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து வெடித்து சிதறிய காட்சிகள் வெளியாகி உள்ளது.  பிரேசிலின் சாவ் பாலோ மாநிலத்தில்  வியோபாஸ் விமானமான 2283 என்ற விமானம் 62 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.  வின்ஹெடோ Source Link

இந்த ராசிக்காரர்களுக்கு நோ வேலை.. கண்டிஷன் போட்ட நிறுவனம்.. அதுக்கு ஒரு காரணம் வேற! மிரண்ட இளைஞர்கள்

பெய்ஜிங்: எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் பல இடங்களில் மூட நம்பிக்கைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி தான் இங்கே ஒரு நிறுவனம் குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கக் கூடாது என அறிவித்துள்ளனர். மேலும், அதற்கு சில வினோதமான காரணங்களையும் கூட அவர்கள் கூறியுள்ளனர். பொதுவாக நம்மில் பெரும்பாலானோருக்குச் சிறு Source Link

நெகிழ வைத்த நீதிபதி ஆனந்த் வெங்கேடஷ் – சவுந்தர்! விஷச்சாராயத்தால் பெற்றோரை இழந்த 3 பேருக்கு உதவி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பெற்றோரை இழந்து தவிக்கும் ஒரு மாணவி  – 2 மாணவர்கள் என்று மொத்தம் 3 பேருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த் வெங்கேடஷ் மற்றும் சவுந்தார் ஆகியோர் நேரில் உதவி செய்து நெகிழ வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த ஜூன் மாதம் 18 ம்தேதி  கள்ளச்சாராயம்  (விஷச்சாராயம்) Source Link