குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி வாழ்த்து..

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள  சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  துணை ஜனாதிபதிக்கான தேர்தல்  நேற்று நடைபெற்று, உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட கோவையைச் சேர்ந்த  சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். துணைஜனாதிபதி தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த  ராதாகிருஷ்ணனுக்கு திமுக உள்பட தமிழக எம்.பி.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இது சலசலப்பை … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ….

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்று (செப். 9 ஆம் தேதி)  திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பில்,   செப்டம்பர் 09 (செவ்வாய் கிழமை) நண்பகல் 12.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி … Read more

தமிழ்நாட்டில் 86% அணைகள் நிரம்பி உள்ளன! தமிழ்நாடு அரசு தகவல்…

சேலம்: தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 86% அணைகள் நிரம்பிய நிலையில் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. நடப்பாண்டு, தென்கிழக்கு பருவமழை காலத்திலும் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், 86 சதவிகித அணைகள் முழு கொள்அளவை எட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மேட்டூர் அணையும் நடப்பாண்டில் 7வது முறையாக நிரம்பி உள்ளது. தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும்.  இந்த காலகட்டம்,  தமிழ்நாட்டிற்கும், கரையோர … Read more

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தில் கீறல்! மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விளக்கம்

கன்னியாகுமரி: விவேகானந்தர் பாறையில் இருந்து  திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் கண்ணாடி பாலத்தில் கீறல் விழுந்துள்ள நிலையில், அதுகுறித்து  நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், ஆட்சியர் அழகுமீனா விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் வலிமையாக உள்ளதாகவும்,   கீறல் விழுந்த இடத்தில் மட்டும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக … Read more

செப்டம்பர் 11 பள்ளிகளுக்கு விடுமுறை – இரண்டு நாட்கள் டாஸ்மாக்கு லீவு….

ராமநாதபுரம்: தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை ஒட்டி ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய  இரண்டு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 11  பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனின் 68வது நினைவு நாள் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் … Read more

நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா

இணையதள தடைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இரண்டாவது நாளாக இன்றும் நேபாளத்தில் கட்டுக்கடங்காத வன்முறை ஏற்பட்டுள்ளது. நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் நேற்று பதவி விலகிய நிலையில் பிரதமர் சர்மா ஒலி இன்று ராஜினாமா.

AI மூலம் தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது புகைப்படத்தை பல்வேறு நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறி டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (செப்டம்பர் 09) வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராய் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சந்தீப் சேத்தி, நீதிபதி தேஜாஸ் காரியாவிடம், தனது வாடிக்கையாளர் தனது விளம்பரம் மற்றும் தனி உரிமைகளைப் பாதுகாக்கக் கோருவதாக மனு அளித்தார். காபி மக், டி-சர்ட், வால்பேப்பர் உள்ளிட்ட பல பொருட்களில் அவரின் புகைப்படத்தை பயன்படுத்துவதாகவும் அவற்றில் சில உண்மைக்குப் புறம்பாக … Read more

சிம்பொனி இசை: தமிழக அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா!

சென்னை; தமிழ்நாடு அரசு சார்பில், இளைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  அவரது சிம்பொனி இசையை கவுரவிக்கும் வகையில், வரும் 13ந்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. இசையமைப்பாளா் இசைஞானி  இளையராஜா மேற்கத்திய – கர்நாடக இசை கலந்த ‘வேலியண்ட்’ பாரம்பரிய சிம்பொனி இசை நிகழ்ச்சியை லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் 2025ம் ஆண்டு  மார்ச் 8-ஆம் தேதி அரங்கேற்றினார். அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் … Read more

அதிமுக ஐசியுக்கு போய் விடுமா? உதயநிதியின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி…

சென்னை: அதிமுக ஐசியுக்கு போய் விடுமா? உதயநிதியின் விமர்சனத்துக்கு எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.  ’’நான் கையை நீட்டி பேசுகிறேன்… என் விரல் ஆடுகிறதா..?’’ ஆனால், சில பேருடைய விரல்கள் ஆடுகின்றன என காட்டமாக விமர்சித்துள்ளார். அஇஅதிமுக விரைவில்,  க ஐசியூவில் போய்விடும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு  பதில் அளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, … Read more

தமிழகத்தில் ரூ. 489 கோடியில் 48 புதிய திட்டங்கள் மூலம் நீர் மேலாண்மை திட்டங்கள்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹489 கோடியில் 48 புதிய திட்டங்கள் – திருக்கோவிலூரில் ₹130 கோடி செலவில் அணைக்கட்டு மறுகட்டுமானம்  என பல பணிகள் நடைபெற்று வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தமிழக அரசு, நீர்வள மேலாண்மை மற்றும் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் (Integrated Water Resources Management – IWRM) கீழ்  ரூ. 489 கோடி மதிப்பீட்டில் 48 புதிய பணிகளை … Read more