ராஜஸ்தான் மற்றும்  டெல்லிக்கு சிறப்பு ரயில் சேவை

திருநெல்வேலி ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்ம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மதுரையில் இருந்து பகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் ராஜஸ்தான் பகத் கி கோதியில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) … Read more

நாங்குநேரி மாணவர் மீது தாக்குதல் : இருவர் கைது

நாங்குநேரி நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தியதாக இருவர் /கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கல்லூரியில் படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர்,  திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என … Read more

நேற்று முதல் கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி நேற்று முதல் கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலத்தில்  சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது/ கன்னியாகுமரியில் கடலின் நடுவே ஒரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. அண்மையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கடந்த 15-ந் தேதி தொடங்கினர். எனவே இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் … Read more

திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம். திருவிழா: திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு நாட்கள் மற்றும் குருப்பெயர்ச்சி. தல சிறப்பு: இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலமாம். இது வியாழன் தலமாகும். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்: பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். பிரார்த்தனை: … Read more

ஜூன் 15-ம் தேதி தேர்வு: முதுநிலை நீட் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: முதுநிலை நீட் தேர்வு 2025க்கு  இன்றுமுதல் ஆன்லைன் விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்துள்ள தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம், இந்த தேர்வானது   ஜூன் 15-ம் தேதி  (ஞாயிறு) நடைபெறும் என அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு மூலமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG 2025)  மே 4, 2025 அன்று பிற்பகல் 2:00 மணி முதல் … Read more

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் மக்கள் மருந்தகத்துக்கு போட்டியாக தமிழ்நாடு அரசு முதல்வர் மருந்தகத்தை திறந்துள்ளது.  அதன்படி தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்களை  2025 பிப்ரவரி 24ந்தேதி அன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த  மருந்தகங்களில் போதுமான மருந்துகள் கிடைப்பது இல்லை, பெரும்பாலான நோய்களுக்கு தேவையான மருந்துகளும் கிடைப்பது இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுபோல,  முதல்வர் மருந்தகங்களை நடத்தி வரும்,  … Read more

அதிகவட்டி மோசடி: நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகள் முடக்கியது அமலாக்கத் துறை….

சென்னை: அதிகவட்டி மோசடி என கூறி மக்களை ஏமாற்றிய பிரபலமான நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் கிளைகளைத் திறந்து, அதிக வட்டி தருவமாக பொதுமக்களை ஏமாறறி  ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக  மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்,  ‘நியோமேக்ஸ்’ நிறுவனம் மதுரை, … Read more

பெண்கள் குறித்து அவதூறு: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டம்…

சென்னை: பெண்கள் குறித்து அவதூறாக பேசிய, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான நாடு முழுவதும் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு, அ.தி.மு.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.  இதுதொடர்பாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், அமைச்சர் பொன்முடியை நடவடிக்கையை கண்டித்ததுடன், அவர்மீது புகார் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தலைவமை அவரிடம் … Read more

மேம்​பால கட்​டு​மான பணி: தேனாம்பேட்டை பகுதியில் 20ந்தேதி முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை:  மேம்​பால கட்​டு​மான பணிக்​காக  ஏப்ரல் 20ந்தேதி (நாளை)  முதல் 3 நாட்​களுக்கு  போக்​கு​வரத்து மாற்​றம் செய்துள்ளதாக சென்னை மாநகர போக்கு வரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தேனாம்பேட்டை  ஜிஎஸ்டி சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான நான்கு வழிசாலைக்கான மேம்பால கட்டுமான பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட உள்ளது.  இதன் காரணமாக அந்த பகுதியில்  நாளை (20-ம் தேதி) முதல் 22-ம் தேதி வரை 3 நாட்களுக்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக … Read more

குடியரசு தலைவருக்கு கெடு: ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் பதிலடி…

டெல்லி:  உச்சநீதிமன்றம், குடியரசு தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சில் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். “நாடாளுமன்றம் நிறைவேற்றும் மசோதாவை குடியரசுத் தலைவர் காலவரையின்றி தாமதப்படுத்த முடியுமா?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மசோதாக்களுக்கு 3 மாதத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு வழக்கில் உச்சநீதிமன்றம் குடியரசு தலைவருக்கு கெடு … Read more