கபில்தேவின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா இன்று தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் முதல் இன்னிங்ஸ் முடிவில் 228 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். … Read more