தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் கூட வாய்ப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் பட்ஜெட் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க வரும் 5ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நடப்பாண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதில் 15 சட்ட … Read more

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது என்று ரஷ்யா கூறுவதை ஏற்க வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்தது. அந்த நிலையில், பிப்ரவரி 15 ம் தேதி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் இங்கு தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுபவர்கள் பதற்றமான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இந்தியா செல்லலாம். அவ்வாறு இந்தியா செல்ல … Read more

நாளை மீண்டும் ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை

மாஸ்கோ நாளை மீண்டும் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக ரஷ்யச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் உள்ள அனைவரும் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்கு வர வேண்டும் என மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.   சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தப்பட்டது.  இதற்கு ரஷ்யா ஒப்புதல் தெரிவித்தது இதையொட்டி பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைனுக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது.  இந்த … Read more

உக்ரைன் நாட்டில் உயிரிழந்த இந்திய மாணவரின் பெற்றோருக்குப் பிரதமர் மோடி ஆறுதல்

டில்லி உக்ரைன் நாட்டில் உயிர் இழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறி உள்ளார். ரஷ்ய தொடர்ந்து 6 ஆம் நாளாக உக்ரைன் மீது உக்கிரமாகப் போர் தொடுத்து வருகிறது. இதனால் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களைத் தாயகம் அழைத்து வர ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் … Read more

இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களிம் இந்திய அரசு வலியுறுத்தல்…

டெல்லி: இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என டெல்லியில் உள்ள உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களை நேரில் வரவழைத்து  இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் ரஷியா இடையேயான போர் இன்று 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ்வின் மீது ரஷிய படைகள் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்தியர்கள் அந்த நகரத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்து … Read more

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க! உக்ரைன் தமிழ் மாணவர்கள் – வீடியோ

ரயில்வே ஸ்டேஷனுக்கு போற வழியில பாம் வெடிச்சிருச்சி… எதாவது பண்ணுங்க என உக்ரைனில் உள்ள தமிழக மாணவர் ஒருவர் கூறும் வீடியோ வைரலாகி வருகிறது. https://patrikai.com/wp-content/uploads/2022/03/ukrina-tamll-video01-03-2021.mp4 உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று பெலாரசில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்தியஅரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தலைநகர் கீவ்-ல் … Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம்! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் செய்து  தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து நியாயவிலை (ரேசன்) கடைகளுக்கும் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்  செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது, நியாய விலை கடைகள் செயல்படும் நேரத்தை தமிழகஅரசு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் செயல்படும் நேரங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8:30 – 12:30 மணி … Read more

அமெரிக்க ராணுவ வீரர்களுக்காக வாதாடும் தமிழ் நடிகை

2021 ம் ஆண்டு வெளியான காதம்பரி என்ற தமிழ் படத்தில் நடித்தவர் அகிலா நாராயணன். அமெரிக்க வாழ் தமிழ் பெண்ணான அகிலா நாராயணன் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்து சென்னையில் பாட்டு படித்து வந்த போது மாடலிங் மற்றும் திரைத் துறையில் கால்பதித்தார். பின்னர், அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பிய அகிலா நாராயணன் பல மாத கடின பயிற்சிக்குப் பின் வெற்றிகரமாக பட்டம் பெற்று அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக சேர்ந்திருக்கிறார். அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்திருக்கும் முதல் தமிழ் … Read more

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கை கொடுக்கிறது இந்தியா! நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு….

டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு இந்தியா நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்து வருகிறது. அதுபோல உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்பதில் அதிக அக்கறை எடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை இன்று 6வது நாளாக தொடர்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ரஷ்யா போரை நிறுத்தி விட்டு, உடனே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியதாக கூறப்பட்டது. மேலும், உக்ரைன் அதிபர் நேட்டோ நாடுகளுக்கான அமைப்பிலும் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல்கள் … Read more

இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.105 உயர்வு

டில்லி இன்று முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.105 உயர்த்தப்பாட்டுள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று அந்த மாதத்துக்கான எரிவாயு சிலிண்டர் விலையை அறிவிக்கின்றன.  இந்த விலை சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய், மற்றும் டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அவ்வகையில் இந்த மாதம் 1 ஆம் தேதி முதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.105 … Read more