ரஷ்யாவிற்கு எதிரான போரில் சிறை கைதிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள்! உக்ரைன் அதிபர் தகவல்…

கீவ்: ரஷ்யாவிற்கு எதிரான போரில்  இராணுவ அனுபவமுள்ள கைதிகளை ஈடுபட விரும்பினால், அவர்களையும் உக்ரைன் அரசு விடுவிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது இன்று 5வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா இன்று சற்று தாக்குதலை குறைத்துள்ளது. அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் இன்று பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷியா ராணுவ மும் அறிவித்து … Read more

மேயர், துணைமேயர் உள்பட மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும்! உயர் நீதிமன்றம்

சென்னை: நகர்பபுற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து, மேயர், துணைமேயர் உள்பட தலைவர்கள் தேர்தல் ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த  மறைமுக தேர்தலும் அமைதியா நடக்கனும், சிசிடிவி நடைமுறை தொடரணும்  என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பெரும்பாலான வெற்றிகளை திமுக  பெற்றுள்ளதால், மேயர், துணைமேயர் உள்பட தலைவர்களின் பதவிக்களுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ந்தேதி நடைபெற உள்ளது. … Read more

உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது! ரஷியா ஒப்புதல்..

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு காயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. உக்ரைன் மீது இன்று 5வது நாளாக ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே ஊடகம் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை … Read more

மாறன் ட்ரெய்லர் இன்று ரிலீஸ்…

தனுஷ் – மாளவிகா மோகனன் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் திரைப்படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக இருக்கிறது மாறன். #MaaranTrailer From Today! #Maaran streaming soon on @disneyplusHSTam #MaaranOnHotstar@dhanushkraja @SathyaJyothi@karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @smruthi_venkat @Actor_Mahendran @KK_actoroffl @RIAZtheboss pic.twitter.com/uWmRJ2iVU6 — Diamond Babu (@idiamondbabu) February 28, 2022 இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் : இன்று ஐநா பொதுச்சபை அவசரக் கூட்டம்

நியூயார்க் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் தொடர்பாக விவாதிக்க இன்று ஐநா பொதுச்சபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யப்படைகள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் தொடர்கிறது.  இதனால் உலக நாடுகள் மிகவும் கவலை அடைந்துள்ளன.  ரஷ்ய விமானப் படைகள் குண்டு வீசி உக்ரைன் நாட்டில் உள்ள விமான நிலையங்களை அழித்துள்ளனர்.  இதனால் அந்நாட்டில் விமான போக்கு வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. தினசரி பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  பல வெளிநாட்டவர் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப முடியாததால் அண்டை … Read more

பெலாரஸில் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை  நடத்த உக்ரைன் ஒப்புதல்?

கீவ் பெலாரஸில் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக அமைதியின்மை நிலவி வந்தது.   உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.  இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனில் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.  ரஷ்யாவின் விமானப்படை தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அழிக்கப்பட்டன  இதனால் அங்குள்ள வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேற … Read more

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் புதிய பொலிவு பெறுகிறது

2011 உலக கோப்பை போட்டியின் போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்த மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டிடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு அதனை இடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஐ, ஜெ, கே ஆகிய காலரிகள் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி பார்வையாளர்களை அனுமதிக்க அரசு தடை விதித்தது. இதனால் பல சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சென்னை இழந்தது. … Read more

வரும் ஜூன் மாதம் மீண்டும் கொரோனா அலை  : கான்பூர் ஐஐடி கணிப்பு

கான்பூர் வரும் ஜூன் மாதம் அடுத்த கொரோனா அலை தாக்குதல் ஏற்படலாம் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.   தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.   மத்திய மாநில அரசுகளின் கடும் உழைப்பாலும் கொரோனா தடுப்பூசியாலும் இதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. விரைவில் கொரோனா நான்காம் அலை தாக்குதல் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.   அதற்கேற்ப கான்பூர் ஐஐடி ஆய்வாளர்கள், ”வரும் … Read more

தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  27/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 60,304 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,43,42,340 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,003 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,209 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,04,611 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வெளிநாட்டினரின் வசதிக்காக இலவச ரயில்களை உக்ரைன் அரசு இயக்கி வருகிறது அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு வந்து சேரும் இந்தியர்கள் … Read more