கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  10.22 லட்சம் சோதனை- பாதிப்பு 10,273

டில்லி இந்தியாவில் 10,22,204 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 10,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,273 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,16,117 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 243 அதிகரித்து மொத்தம் 5,13,724 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 20,439 பேர் குணமடைந்து இதுவரை 4,22,90,921 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,11,472 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 24,05,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பயணம்

லாகூர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24  ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள். 3 ஒரு ருநாள் தொடர் மற்றும் ஒரு டி 20 போட்டியில் விளையாடச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது.   இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.  இதையொட்டி தற்போது பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தது.   … Read more

ஆந்திரா, திரிபுராந்தகம், அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில்

ஆந்திரா, திரிபுராந்தகம் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில் இந்த அற்புதமான திருக்கோவில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா 150 கி.மீ. மார்கபூர் 40 கி.மீ. வினுகொண்டா 40 கி.மீ.தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் ஶ்ரீ திரிபுராந்தகேஸ்வரசுவாமி இறைவி திருநாமம் ஶ்ரீ பார்வதி தேதி (அ) ஶ்ரீ பாலதிரிபுரசுந்தரி திரிபுராந்தகேஸ்வர சுவாமி கோவில் மற்றும் பாலா திரிபுரசுந்தரி கோவில் ஆகியவை ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், மார்கபூர், திரிபுராந்தகத்தில் அமைந்துள்ளது. … Read more

மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து! தனியார் கல்லூரி விழாவில் முதலமைச்சர் உரை…

சென்னை: மாணவர்கள் தான் நாட்டினுடைய மிகப்பெரிய சொத்து; உயர்கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதே இலக்கு என்று சென்னை தனியர் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரியில் சமூக மேம்பாட்டிற்கான புத்தாக்கம் திட்டத்தொடக்க விழா இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் உன் அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள்  மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கிய நவீன … Read more

திமுகவிடம் மேயர் பதவி கேட்டு தொல்லை கொடுக்கும் காங்கிரஸ், விசிக…! முதலமைச்சர் ஸ்டாலின் அப்செட்

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், திமுகவிடம் மேயர் பதவி கேட்டு காங்கிரஸ், விசிக தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அப்செட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை சத்திய மூர்த்தி பவனில் இன்று (பிப்ரவரி 26) செய்தியாளரைச் சந்தித்த மாநிலகாங்கிரஸ் கட்சி அப்போது பேசிய அவர், மாநகராட்சியில் அதிக இடங்களில் மேயர் பதவி கேட்க இருப்பதாகத் தெரிவித்தார். … Read more

உக்ரைனில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்படும் மாணவர்களில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்…!

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இன்று அங்கிருந்து 219 பேருடன் இந்தியா வரும் விமானத்தில் 16 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரஷியா உக்ரைன் மீது இன்று 3வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன் வான்வெளியை ரஷியா தடுத்துள்ளதால், அங்குள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. ஏற்கனவே ஏராளமானோர் உக்ரைனை விட்டு சாலை … Read more

26/02/2022 8 PM: தமிழ்நாட்டில் இன்று 480 பேருக்கு கொரோனா பாதிப்பு, 2 பேர் மட்டுமே உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 480 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு ஐநூறுக்கும்  கீழே குறைந்துள்ளது மக்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அதிக பட்சமாக சென்னையில் 126 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8.0 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 63,263  மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,42,81,633 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக மேலும் … Read more

சென்னையில் நாளை 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! ககன்தீப் சிங் பேடி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 1,647 மையங்களில் 6.68 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். போலியோவை ஒழிக்க வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்தியாவில் 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா கருதபடுகிறது. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக, வருடத்துக்கு ஒரு முறை போலியோ சொட்டு … Read more

உக்ரைன் நெருக்கடி: 219 இந்தியர்களுடன் முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது – அமைச்சர் தகவல்

புதுடெல்லி: 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் (இஏஎம்) எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா நெருக்கடிக்கு மத்தியில், கியேவில் உள்ள இந்தியத் தூதரகம், எல்லைச் சாவடிகளில் அரசு அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எல்லை சோதனைச் சாவடிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும், இந்திய அரசு அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரகத்தின் அவசர எண்களை பயன்படுத்தி … Read more

உக்ரைன் – ரஷ்ய போர் : கட்டுப்பாட்டை இழந்தது ?

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்களை ஆதரித்து சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த புடின் ரஷ்ய ராணுவத்தை உக்ரைனில் களமிறக்கினார். மூன்றாவது நாளாக தொடரும் இந்த சிறப்பு நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாண மக்களை உக்ரைன் ராணுவதத்திடம் இருந்து காப்பற்றப்போவதாக கூறிய ரஷ்யா தனது ராணுவத்தை இவ்விரு மாகாணங்களை தாண்டி உக்ரைன் முழுவதும் தரையிறக்கியது. ராணுவ நிலைகளை நிலைகுலையைச் செய்ததை அடுத்து உக்ரைன் தலைநகர் … Read more