உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராகும் ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில் போர் புரிந்து வருகிறது.   ரஷ்ய விமானப் படைகள் மற்றும் தரைப்படைகள் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   உக்ரைனில் விமான நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதால் அங்குள்ளவர்கள் தப்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியை நிலை நிறுத்துமாறு ரஷ்ய … Read more

மார்ச் 4 ஆம் தேதி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் தேர்தல் நடைபெறுகிறது

சென்னை தமிழகத்தில் மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வரும் மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது. தமிழக மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடந்து 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுள்ள்ன.  இந்த தேர்தல்களில் வெற்றி … Read more

தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  25/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்   இன்று தமிழகத்தில் 66,366 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,42,18,370 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இன்று 507 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,48,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 38,000 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,794 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,01,938 பேர் குணம் … Read more

ரூ. 5 கோடி மதிப்பு தொழிற்சாலை அபகரிப்பு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதிவு

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரூ..5 கோடி மதிப்பிலான தொழிற்சாலையை அபகரித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது திமுக நிர்வாகியை அடித்து அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற காட்சி இணையத்தில் வைரலானது.   இதில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் மீது 8 … Read more

தேசிய பங்கு சந்தை ஊழல் : சித்ரா ராமகிருஷ்ணன் – ஆனந்த் சுப்பிரமணியன் இடையேயான ஈ-மெயில் தகவல் குறித்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது

[email protected] என்ற ஈ-மெயில் முகவரியை உருவாக்கியவர் ஆனந்த் சுப்பிரமணியம் என்பது ஆதாரபூர்வமாக நிரூபணமானதாக சி.பி.ஐ. தகவல் 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச் சந்தை தலைமைச் செயல் அலுவலராக இருந்த சித்ரா ராமகிருஷ்ணன் 2013 ம் ஆண்டு பதவியேற்றவுடன் தனது ஆலோசகராகவும் தேசிய பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும் ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். இருவருக்கும் ரிக் யஜுர் சாம வேதங்களின் பெயரில் உருவாக்கப்பட்ட [email protected] என்ற ஈ-மெயில் முகவரில் இருந்து வந்த தகவல்கள் சர்ச்சையை … Read more

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை! ரஷியா அதிரடி

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டன் பதிவு விமானங்கள் ரஷிய வான்வெளியை பயன்படுத்த ரஷியா அதிரடியாக தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்த்துள்ளன. அதேநேரம் சில நாடுகள் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், ரஷியாவோ தனது போர் தாக்குதலுக்கு, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ அமைப்பின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவே நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறி வருகிறது. ரஷியா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதல்  சர்வதேச … Read more

கெய்னின் பாவத்தை நினைவுபடுத்துகிறது… சகோதர யுத்தத்தை உடனே நிறுத்துங்கள் புடினுக்கு உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சர்ச் கோரிக்கை

உக்ரைன் மீது ரஷ்யா முழு அளவிலான போரை துவங்கி இரண்டு நாட்கள் ஆன நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கைவைத்தால் அதற்கான விளைவை சந்திக்க வேண்டி வரும் என்று கொக்கரித்த நாடுகள் இப்போது மௌனம் காத்து வருகின்றன. போரை நிறுத்தக் கோரி இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட நடுநிலை நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் புடினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழக்கம் போல் பல கட்ட பொருளாதார தடை விதித்து வருகிறது, … Read more

மத்தியஅரசு அலுவலகங்களில் 30% பணியிடங்கள் காலி: பணியாளர் துறை அலுவலகம் முன்பு மத்திய செயலகம் அதிகாரிகள் தர்ணா…

டெல்லி: மத்தியஅரசு அலுவலகளில் 30 பணியிடங்கள் காலி உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலைமையிலான பாஜக அரசு முன்வராததை கண்டித்து,  மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகத்திற்கு வெளியே மத்திய செயலகம் துறை அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாக மத்திய … Read more

சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 உடன் விருது! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 மற்றும் விருது வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான போட்டியில், அரசு அல்லது அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது” வழங்குவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  … Read more

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 10ந்தேதி வரை சிறை!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரையும் மார்ச் 10ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தர  22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மடக்கி கைது செய்து இலங்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மயிலிட்டி துறைமுகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக மீனவர்கள் 22 பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்காவற்துறை … Read more