உத்தரப்பிரதேச 4வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து  அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் … Read more

மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல்: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை.

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது. இதையடுத்து,. மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் குறித்து  திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்பட பல மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. … Read more

“மரியாதையை காப்பாத்திக்க..!” : ஆர்.கே.சுரேஷூக்கு பாலா அறிவுரை

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் சீனு … Read more

அநேகமாக 2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவுக்கு வாய்ப்பு

சென்னை அதிமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.  அதிமுக மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  இதனால் திமுக பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களைக் கைப்பற்றி உள்ளது.  தற்போதைய நிலையில் அதிமுக மற்ற கட்சிகளின் ஆதரவு இருந்தால் இரு நகராட்சிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியும் ஒன்றாகும்.  இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 24 … Read more

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய நாட்டுக்குச் சென்றுள்ளார்.  அவர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.  இம்ரான் கானிடம் ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளார்.   அப்போது அவரிடம் இந்தியாவுடனான உறவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இம்ரான் கான், “எங்களுக்கு இந்தியா … Read more

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

சென்னை திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மேலும் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என … Read more

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு

கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் இன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிந்துள்ள வாக்குகளை எண்ணும் பொது இந்திய்ரத்தின் திரையிடும் பகுதி பழுதின் காரணமாக மேற்படி கட்டுபாட்டுக் கருவியினை பெல் நிறுவனத்தை சார்ந்த பொறியாளர்கள் பழுது பார்த்தும் குறைவினை … Read more

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள, அவரது வரலாற்று நுாலான, ‘உங்களில் ஒருவன் பாகம் ௧’ நுால் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாவிடம் வழங்கினார். விழாவுக்கு வருமாறு, முதல்வர் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் கட்சி. 73 மாநகராட்சி, 151 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வாக்களித்த மக்களுக்கு எங்களது நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 61,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,40,22,749 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.   இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் இருவர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.  இதுவரை 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,989 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 2,375 பேர் குணம் … Read more