ஆளுநரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு

திருவனந்தபுரம் ஆளுநர் த்வறு செய்யும் போது அவரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. பல மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும்  இடையே தொடர்ந்து பணிப்போர் நிலவி வருகின்றது..   இந்த நிலை கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத பல மாவட்டஙளில் ஏற்பட்டுள்ளது.   சமீபத்தில் சத்ஹீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் அனுசுயா உயிகிக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு … Read more

பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்வதை மறந்து விட்டது : பிரியங்கா காந்தி

ரேபரேலி பாஜக அரசு மக்களுக்குச் சேவை  செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.  மொத்தம் உள்ள 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்டம் முடிந்துள்ளது.  மாநிலம் எங்கும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அவ்வகையில் ரேபரேலி ஜகத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு … Read more

காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : கோயம்பேட்டில் கடும் விலை சரிவு

சென்னை காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு அங்காடியில் விலை மிகவும் குறைந்துள்ளது. தினமும் 450 முதல் 500 லாரிகளில் கோயம்பேடு அங்காடிக்குக் காய்கறிகள் வருவது வழக்கம். தற்போது இது அதிகரித்து இன்று காலை 600 வாகனங்களில் காய்கறிகள் வந்து குவிந்தன. இதனால் கோயம்பேடு அங்காடியில் காய்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்ற நவீன தக்காளி இன்று விலை 15 ரூபாய்க்கு விற்றது. மேலும் 20 ரூபாய்க்கு … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறுகிறார் கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறப்போவதாக அவரே அறிவித்துள்ளார். வாரா வாரா ஒரு நட்சத்திரத்திற்கு பை பை சொல்லிவந்த கமல்ஹாசன் இந்த வாரம் அவர் வெளியேறப்போவதாக வந்திருக்கும் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு மனதிற்கு பிடித்த நிகழ்ச்சி என்ற போதும், விக்ரம் திரைப்படம் உள்ளிட்ட திரைத்துறை பணிகள் காத்திருக்கிறது. மேலும், விக்ரம் திரைப்படத்தில் பணிபுரியும் சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பை முடிக்க … Read more

கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகல் – காரணம் இதுதான்

சென்னை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகர் கமலஹாசன் அறிவித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் 5 சீசன்களாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்வுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.  நடிகர் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.   இந்த நிகழ்ச்சியின் புகழுக்கு அவரும் ஒரு காரண ஆவார்.  தற்போது பிக் பாஸ் அல்டிமேட் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது.  இதையும் அவர் தொகுத்து வழங்குகிறார்.. இந்நிலையில் கமலஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்த … Read more

சிறப்பு சேவை கட்டணங்களை உயர்த்திய திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி கோவில் சிறப்புச் சேவைக் கட்டணங்களைத் தேவஸ்தானம் உயர்த்தி உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கமான பக்தர்கள் தரிசனம் மட்டுமன்றி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.  இவை ஒவ்வொன்றுக்கும் பிரத்தியேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். கடந்த 17-ம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளைக் கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.  ,இதன்படி வஸ்திர அலங்கார சேவைக்கான கட்டணம் ரூ. 50,000 -இல் இருந்து ரூ. 1 லட்சமாக … Read more

தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 20/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,44,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 80,755 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,38,90,901 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,44,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,980 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 3,172 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,91,011 பேர் குணம் அடைந்து வீடு … Read more

‘வலிமை’ ஆல் ஷோ ஹவுஸ் புல்…. முன்பதிவு துவங்கிய இடமெல்லாம் தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம் வரும் 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சிறப்புக் காட்சிகள் ஒரு நாள் முன்னாதாக பிப். 23 அன்று வெளியாக இருக்கிறது. சென்னையில் பிப். 23 முதல் மார்ச் 3 வரையில் வலிமை படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. இரண்டரை ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகும் என்று … Read more

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிப்பு

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது, லேசான சளி அறிகுறி உள்ளதாகவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறியுள்ளது. 95 வயதாகும் ராணி எலிசபெத் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை மிக நீண்டகாலம் ஆட்சி செய்பவர் எனபது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இவர் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்தது. இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட … Read more

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கடமை என்று கூறி உள்ளார். தாங்கள் நேசிக்கும் கடவுளுக்காக பணிவுடன் ஹிஜாப் அணிவதாக குறிப்பிட்டுள்ள சைரா, குறிப்பிட்ட கொள்கையைப் பரப்புவதாக, பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது மோசமான நிகழ்வு என கூறியுள்ளார்.