நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிய தமிழக அரசு

சென்னை தமிழக அரசு சட்டசபையில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. இன்று கடந்த 11 ஆண்டுகளில் 5 ஆம் முறையாகச் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது..   இன்றைய இந்த கூட்டத்தில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார். ஏற்கனவே இதே மசோதா கடந்த 1 ஆம் தேதி ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது.  அமைச்சர் ஆளுநரின் மதிப்பீடுகள் தவறானவை எனக் கூறியதுடன் பல முறை நீட் … Read more

தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 08/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 4,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,20,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,15,898 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,27,59,697 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 4,519 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 3 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை 34,20,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 37 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,809 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 20,237 பேர் குணம் … Read more

நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது.  இதை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன.  அப்போது இந்த நடவடிக்கை சற்று குறைந்து மீண்டும் தொடங்குவது அடிக்கடி நடைபெறுகிறது. இவ்வாறு  தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி  படகுகளைத் திரும்ப அவர்களிடம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு பலமுறை … Read more

டாஸ்மாக் கடைகள் பிப்ரவரி 17 முதல் 19 வரை மூடல்

சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. தமிழகம் எங்கும் வரும் 19 ஆம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  ஏற்கனவே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி விட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்குப் பதிவு நடைபெறும் நாட்களில் அசம்பாவிதத்தைத் … Read more

5 ஜி நெட் ஒர்க் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் 5 ஜி நெட் ஒர்க் பணிகள் இறுதிக்கட்டத்ஹை எட்டி உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இன்று டில்லியில் இந்தியத் தொலைத் தொடர்பு துறையின் சார்பில் இந்தியா டெலிகாம் 2022 என்னும் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடங்கியது.   இது இந்திய தொலைத் தொடர்பு துறையினர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்கா ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த கண்காட்சி இன்று முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை இன்று மத்திய … Read more

கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை: மாணாக்கர்கள் அமைதி காக்க கர்நாடக உயர் நீதிமன்றம் வேண்டுகோள்…

பெங்களூரு: கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரித்தகர்நாடக உயர் நீதிமன்றம்  மாணாக்கர்கள் அமைதி காக்க வேண்டுகோள் விடுத்தனர். சட்டம் ஒழுங்கை அனைவரும் ஒழுங்காக பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரிஒன்றில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த6 மாணவிகளும் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். … Read more

அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் 28 பேர் விடுவிப்பு! சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

அகமதாபாத்: அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி இந்த வழக்கில் 49 பேர் குற்றவாளிகள் என்றும் 28 பேர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகாததால், அவர்களை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் தலைநகர் அகமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி  தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரத்திற்குள் 21 இடங்களில் வெடித்த குண்டுவெடிப்பில், 51 பேர் பலியானார்கள். 200-க்கும் மேற்பட்டோர் … Read more

10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை நடைபெறுவதாக இருந்த 10,12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு தேதி மாற்றம் செய்து, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு வரும் 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு கடந்த ஜனவரி  19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. ஆனால், தொற்று பரவல் … Read more

நீட் விலக்கு மசோதா: சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம்…

சென்னை: நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டபேரவையில் அதிமுக, திமுக, காங்கிரஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. சென்னை கோட்டை  தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டப்பேரவையில்,  இன்று நீட் விலக்கு மசோதா நிறைவேற்றும் வகையில்  சிறப்புக் கூட்டம் நடைடிபெற்றது. இந்த கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் நடவடிக்கை குறித்து, விமர்சித்த சபாநாயகர், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். இதையடுத்து, நீட் … Read more

தலைமைச்செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது….

சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு ஆளுநர் திருப்பி அனுப்பிய கடிதம் குறித்து விளக்கி பேசினார். அப்போது நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக அல்ல என்று கூறினார். தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றபிறகு, கடந்த 2021ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் கோரி ஆளுநருக்கு அனுப்பி … Read more