@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வெளிநாட்டினரின் வசதிக்காக இலவச ரயில்களை உக்ரைன் அரசு இயக்கி வருகிறது அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு வந்து சேரும் இந்தியர்கள் … Read more

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக இருக்க பாதுகாப்பு அமைச்சர் ஷோய்ஜ் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் ஜெராசிமோவ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவ வரையறைப்படி அணு ஆயுதம் மற்றும் மரபு சார்ந்த பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்காக ஒரே மாதிரியாக பயன்படுத்த இந்த தடுப்புப் படையினருக்கு … Read more

தேர்தலில் தோல்வியுற்ற ம நீ ம வேட்பாளர் தற்கொலை : கமலஹாசன் ஆறுதல்

திருப்பூர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்று தற்கொலை செய்து கொண்ட ம நீ ம வேட்பாளர் குடும்பத்துக்கு கமலஹாசன் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள காலேஜ் ரோட் பகுதியைச் சேர்ந்த 55 வயதான மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார்.  இவர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட்டார்.   மணி ரூ.50000 கடன் வாங்கி தேர்தல் செலவு செய்துள்ளார்.   ஆனால் தேர்தலில் அவரால் … Read more

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு கொரோனா

சென்னை: நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை பல ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும் பாடகியுமான நடிகை சுருதிஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதனை அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது – உக்ரைன்

கீவ்: ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் பெலாரசில் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்கி வருகின்றன. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான … Read more

பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது…

உக்ரைனுக்கு எதிரான போரில் இறங்கியுள்ள ரஷ்யா-வுக்கு பிட்காயின் மூலமாக நிதி கோரி பதிவு பாஜக தலைவர் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. சிறிது நேரம் கழித்து இந்த பதிவு நீக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தெரியவந்தது. ஹேக்கர்களிடம் இருந்து தற்போது இந்த கணக்கை மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் ஜெ.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் தொடர்பான தகவல் இடம்பெற்ற நிலையில் தற்போது … Read more

புதுவையில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு….

ஒயிட் ஏரியா என்று அழைக்கப்படும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டினர் அரவிந்தர் ஆசிரமம் வழியாக செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற இரண்டு வெளிநாட்டு பெண்களை விசாரித்த போலீசார் அரசு உத்தரவுப் படி செயல்படுவதாக கூறி அவர்களின் ஆடை குறித்து விமர்சித்தனர். புதுச்சேரியின் ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு கலாச்சார படி ஆடை அணிந்து செல்வது வழக்கமான ஒன்று என்ற … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  10.22 லட்சம் சோதனை- பாதிப்பு 10,273

டில்லி இந்தியாவில் 10,22,204 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 10,273 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,273 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,16,117 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 243 அதிகரித்து மொத்தம் 5,13,724 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 20,439 பேர் குணமடைந்து இதுவரை 4,22,90,921 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 1,11,472 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 24,05,049 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பயணம்

லாகூர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 24  ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தானில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள். 3 ஒரு ருநாள் தொடர் மற்றும் ஒரு டி 20 போட்டியில் விளையாடச் சுற்றுப்பயணம் சென்றுள்ளது.   இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 4 ஆம் தேதி தொடங்க உள்ளது.  இதையொட்டி தற்போது பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலிய அணி சென்றுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தது.   … Read more

ஆந்திரா, திரிபுராந்தகம், அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில்

ஆந்திரா, திரிபுராந்தகம் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் கோயில் இந்த அற்புதமான திருக்கோவில் ஆந்திர மாநில பிரகாசம் மாவட்டம் திரிபுராந்தகம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஓங்கோல் 93 கி.மீ. விஜயவாடா 150 கி.மீ. மார்கபூர் 40 கி.மீ. வினுகொண்டா 40 கி.மீ.தூரத்தில் உள்ளது. இறைவன் திருநாமம் ஶ்ரீ திரிபுராந்தகேஸ்வரசுவாமி இறைவி திருநாமம் ஶ்ரீ பார்வதி தேதி (அ) ஶ்ரீ பாலதிரிபுரசுந்தரி திரிபுராந்தகேஸ்வர சுவாமி கோவில் மற்றும் பாலா திரிபுரசுந்தரி கோவில் ஆகியவை ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம், மார்கபூர், திரிபுராந்தகத்தில் அமைந்துள்ளது. … Read more