மத்தியஅரசு அலுவலகங்களில் 30% பணியிடங்கள் காலி: பணியாளர் துறை அலுவலகம் முன்பு மத்திய செயலகம் அதிகாரிகள் தர்ணா…

டெல்லி: மத்தியஅரசு அலுவலகளில் 30 பணியிடங்கள் காலி உள்ளது. அந்த பணியிடங்களை நிரப்ப மோடி தலைமையிலான பாஜக அரசு முன்வராததை கண்டித்து,  மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கின் அலுவலகத்திற்கு வெளியே மத்திய செயலகம் துறை அதிகாரிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல், மத்தியஅரசின் பல்வேறு துறைகளில் போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளாக மத்திய … Read more

சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 உடன் விருது! தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை: சிறந்த அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ. 25,000 மற்றும் விருது வழங்கப்படும் என  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான போட்டியில், அரசு அல்லது அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ சமுதாயத்தின் நலனுக்காக இன்றியமையாது பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களை கண்டறிந்து, அவர்களை அங்கீகரிக்கும் வகையில் “சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது” வழங்குவதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  … Read more

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 10ந்தேதி வரை சிறை!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரையும் மார்ச் 10ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தர  22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மடக்கி கைது செய்து இலங்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மயிலிட்டி துறைமுகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக மீனவர்கள் 22 பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்காவற்துறை … Read more

கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை : சீக்கியர்கள் தலைப்பாகை அகற்ற வலியுறுத்தல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து  சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என இந்துத்துவ மாணவர்கள் வலியுறுத்தினர்.   இதையொட்டி கர்நாடக அரசு மத ரீதியான உடைகளை அணிந்து கல்வி நிலையங்களுக்கு மாணாக்கர்கள் வரத் தடை விதித்தது.   இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இது குறித்து முடிவுக்கு வரும் வரை மதரீதியான உடைகளை மாணவர்கள் கல்வி நிலையத்துக்கு அணிந்து … Read more

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

லக்னோ: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது. இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி … Read more

ரஷ்யா- நேட்டோ இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் – பிரதமர் மோடி

PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin உக்ரைன்: ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேசினார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் புதின் … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஒரு பக்கம் படைக்குவிப்பில் அந்நாடு ஈடுபட்ட போதிலும், இன்னொரு பக்கம் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. கடைசியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புதினுடன் 105 நிமிடங்களாக போனில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் உக்ரைன் உடனான பிரச்னையை … Read more

இன்று ரஷ்ய அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை

டில்லி உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.  இதையொட்டி ரஷ்ய ராணுவத்தினர் தரை வழி மற்றும் வான் வழி மூலம் அந்நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   நாடெங்கும் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பெய்து வருகின்றன.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இரு தரப்பு … Read more

நேரடியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது : நேட்டோ அமைப்பு அறிவிப்பு

நியூயார்க் நேரடியாக உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ரஷ்ய போர் விமானங்களின் குண்டு வீச்சு தாக்குதலால் விமான நிலையங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டில் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   இதையொட்டி நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், “ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  இது ஐரோப்பியக் கண்டத்தில் … Read more

உக்ரைன் போர் எதிரொலி: தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடு உயர்வு, பங்கு சந்தைகள் சரிவு…

டெல்லி: உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.   இன்று ஒரேநாளில், இந்தியாவில் தங்கத்தின் விலை . ரூ.864 உயர்ந்து உயர்ந்து புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது, ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது.இந்த தாக்குதலாம் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் … Read more