தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

தி.மு.க. தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மிரட்டல், கலகம் செய்ய தூண்டுதல், தாக்குதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயக்குமார் மீது தண்டையார்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தி.மு.க. வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு : சர்ச்சை கார்ட்டூனால் பாஜ்க டிவிட்டர் பதிவு  நீக்கம்

அகமதாபாத் அகமதாபாத் குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த சர்ச்சைக்குரிய கார்ட்டுனால் குஜராத் பாஜக டிவிட்டர் பதிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு  நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில்  குற்றம்சாட்டப்பட்ட 38 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 11 பேருக்கு ஆயுள்  தண்டனையும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை பாராட்டி, குஜராத்தின் பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்டிருந்தது. இந்த கார்ட்டூன் நெட்டிசன்கள் இடையே கடும்  சர்ச்சையை ஏற்படுத்தியது.  பலரும் இந்த கார்ட்டூன் … Read more

கொரோனா: 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்

டில்லி இந்தியாவில் 12-18 வயதானோருக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தற்போது சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது   இதற்கு முக்கிய காரணம் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  எனவே தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  கடந்த மாதம் முதல் 15-18 வயதுடையோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் … Read more

அனில் அம்பானியின் மகன் திருமணம்… மும்பையில் கோலாகலமாக நடந்தது….

அம்பானி சகோதரர்களில் இளயவரான அனில் அம்பானி மகன் அன்மோல் அம்பானியின் திருமணம் மும்பையில் நேற்று நடந்தது. க்ரிஷா ஷா என்பவருடன் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இந்த திருமணம் நேற்று நடைபெற்றது. ஒருவார காலமாக நடைபெற்ற இந்த திருமண விழாவில் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் மற்றும் சுப்ரியா சூலே உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். க்ரிஷா ஷா-வின் தாயார் நீலம் ஷா ஆடை வடிவமைப்பாளராக உள்ளார், இவரது தந்தை நிக்கஞ் ஷா கடந்த … Read more

மெரினாவில் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகளைக் காணவந்த மாணவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்படும் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்த வருடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., வீரமங்கை வேலு நாச்சியார் உள்ளிட்டவர்களின் பெருமையைப் போற்றும் வகையில் தமிழ் நாட்டில் இருந்து அனுப்பிவைக்கப் பட்ட அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. மேலும், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளையும் நிராகரித்தது, அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து … Read more

“சர்கார்: செல்வமணி போர்ஜரி”!: கே.பாக்யராஜ் ஆவேசம்

வரும் 27ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடக்கிறது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. எதிர்த்தரப்பில் ஆர்.கே.செல்வமணி தரப்பினர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் நேற்று இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார். பின்னர் மேடையில் பேசிய அவர், “விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் கதை பிரச்சினைக்கு உள்ளானது. அந்தக் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜேந்தர் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார். … Read more

ஆளுநரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு

திருவனந்தபுரம் ஆளுநர் த்வறு செய்யும் போது அவரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. பல மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும்  இடையே தொடர்ந்து பணிப்போர் நிலவி வருகின்றது..   இந்த நிலை கேரளா, தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யாத பல மாவட்டஙளில் ஏற்பட்டுள்ளது.   சமீபத்தில் சத்ஹீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கும் அம்மாநில ஆளுநர் அனுசுயா உயிகிக்கும் மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகளுக்கு … Read more

பாஜக அரசு மக்களுக்குச் சேவை செய்வதை மறந்து விட்டது : பிரியங்கா காந்தி

ரேபரேலி பாஜக அரசு மக்களுக்குச் சேவை  செய்வதை மறந்து விட்டு பெரிய தொழிலதிபர்களுக்காகச் செயல்படுவதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடந்து வருகிறது.  மொத்தம் உள்ள 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்டம் முடிந்துள்ளது.  மாநிலம் எங்கும் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  அவ்வகையில் ரேபரேலி ஜகத்பூர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடந்த பேரணியில் அக்கட்சியின் பொது செயலர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு … Read more

காய்கறிகள் வரத்து அதிகரிப்பு : கோயம்பேட்டில் கடும் விலை சரிவு

சென்னை காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் கோயம்பேடு அங்காடியில் விலை மிகவும் குறைந்துள்ளது. தினமும் 450 முதல் 500 லாரிகளில் கோயம்பேடு அங்காடிக்குக் காய்கறிகள் வருவது வழக்கம். தற்போது இது அதிகரித்து இன்று காலை 600 வாகனங்களில் காய்கறிகள் வந்து குவிந்தன. இதனால் கோயம்பேடு அங்காடியில் காய்கறிகளின் விலைகள் மிகவும் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்ற நவீன தக்காளி இன்று விலை 15 ரூபாய்க்கு விற்றது. மேலும் 20 ரூபாய்க்கு … Read more

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறுகிறார் கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறப்போவதாக அவரே அறிவித்துள்ளார். வாரா வாரா ஒரு நட்சத்திரத்திற்கு பை பை சொல்லிவந்த கமல்ஹாசன் இந்த வாரம் அவர் வெளியேறப்போவதாக வந்திருக்கும் அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு மனதிற்கு பிடித்த நிகழ்ச்சி என்ற போதும், விக்ரம் திரைப்படம் உள்ளிட்ட திரைத்துறை பணிகள் காத்திருக்கிறது. மேலும், விக்ரம் திரைப்படத்தில் பணிபுரியும் சக கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படப்பிடிப்பை முடிக்க … Read more