சட்டம் ஒழுங்கு? சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் ஏர்போர்ட் மூர்த்திமீது விசிகவினர் தாக்குதல்! வீடியோ…

சென்னை: டிஜிபி அலுவலகம் வந்த புரட்சி தமிழகம் கட்சி உறுப்பினரும், பிரபல யுடியூபருமான ஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவினர்  தாக்குதல் நடத்தியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சென்னையில்  புரட்சி தமிழகம் கட்சிஏர்போர்ட் மூர்த்தி மீது விசிகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தி முயற்சித்த சம்பவம்,  தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி உள்ளது என்பதற்காக சான்றாக உள்ளது. சென்னையில் பட்டப்பகலில் மதிய நேரத்தில்,   போலீஸ் தலைமை பதவியில்உள்ள சென்னையில் டிஜிபி அலுவலகம் வாயிலில் இந்த  சம்பவம் அரங்கேறி உள்ளது. … Read more

அடேயப்பா…..? தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்துதில் ரூ.1.80 கோடி வசூல்

சென்னை: தி.மு.க எம்.எல்.ஏ நடத்திய மொய் விருந்து! ரூ.1.80 கோடி வசூலாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழல் கருப்புபணம் வெள்ளையாக்கப்பட்டு உள்ளதா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மொய் விருந்து என்பது தமிழ்நாட்டின், குறிப்பாக கிராமப்புறங்களில் நடைபெறும் ஒரு சமூக மற்றும் பொருளாதாரக் கலாச்சார நிகழ்ச்சியாகும்.  இது தனிநபர்கள் அல்லது குடும்பங்கள், தங்கள் அவசர நிதி  தேவைகளுக்காக நிதி திரட்டுவதற்கான ஒரு வழிமுறை.  இதில் கலந்து கொள்பவர்களுக்கு அவர்களின் வசதிகளுக்கு ஏற்க … Read more

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்! ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன் என முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். அதுபோல ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம். அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார். அதிமுக மூத்த  உறுப்பினர்களில் ஒருவரான செங்கோட்டையன்,   இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது,  அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று … Read more

பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளதாக பாமக தலைவர் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பபடாமல் உள்ள தை சுட்டிக்காட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, திமுக ஆட்சியில்  பள்ளிக்கல்வித் துறை பாழடைந்த துறையாக மாறியுள்ளது என விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக  அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 24 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடங்களும், 29 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பள்ளிக்கல்வியின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் முதன்மைக்கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி … Read more

ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே! சசிகலா வீராவேச அறிக்கை…

சென்னை: ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்… நாளை நமதே!  என அதிமுகவில் இருந்த விலக்கப்பட்ட  மறைந்த ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா வீராவேசமாக அறிவிக்கை வெளியிட்டு உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும், இல்லையேல் அதற்கான பணிகளை நாங்கள் மேற்கொள்வோம் என அதிரடியாக அறிவித்துள்ள அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கூறியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஏற்கனவே ஓபிஸ், அவரது கருத்தை வரவேற்றுள்ள நிலையில், தற்போது சசிகலாவும், அவரது … Read more

வித்தவுட் பயணம்: சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல்…

சென்னை: டிக்கெட் இன்றி பயணம்  (வித்தவுட்) செய்தவர்களிடம் இருந்து, சென்னை மின்சார ரயில்களில் கடந்த 6 மாதங்களில் ரூ.8 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது. சென்னை கோட்டையில் நூற்றுக்கணக்கான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளான கும்மிடிப்பூண்டி,  அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பதி,  தாம்பரம், செங்கல்பட்டு, என பல பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.   சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் மின்சார ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் … Read more

“நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…” ரூ.500 கோடி தர வேண்டும்! பெண் நீதிபதிக்கு கொள்ளை கும்பல் மிரட்டல்…

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வரும் பெண் நீதிபதி ஒருவருக்கு “நீங்கள் உயிருடன் இருக்க விரும்பினால்…”? ரூ.500 கோடி தர வேண்டும் என மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது நீதித்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியபிரதேசம் என்றாலே சம்பல் கொள்ளையர்கள்தான் நினைவுக்கு வருவார்கள். ஒரு காலத்தில்,  இப்பகுதியின் புகழ் பெற்ற கொள்ளைக் கூட்டத் தலவைர்களில் பூலான் தேவி மற்றும் மான் சிங்  போன்றவர்கள் பிரபலமானவர்கள். சம்பல் பிரதேசத்தில் அரசியல் செல்வாக்கை பெறுவதற்கு அரசியல் கட்சியினர் அவர்களிடம் … Read more

போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…

டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர்  போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததா என்பதை விசாரிக்க வலியுறுத்தி கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம். பி. யுமான சோனியா காந்தி மீது  பாஜகவினர் குற்றம் சாட்டி உள்ளனர்.  முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏப்ரல் 1983 இல் முறையாக … Read more

ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 10நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இது அவரத 5வது வெளிநாடு பயணம். இந்த பயணத்தின்போது,   தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின கூறி உள்ளார். இதுகுறித்து,  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா … Read more

மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி – மம்தா முன்னிலையில் பாஜக கொறடாவுக்கு அடி உதை!

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது.  இந்த அமளியின்போது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய நிலையில்,  மம்தா முன்னிலையில் பாஜக கொறடா உள்பட பலருக்கு அடி உதை! விழுந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை குறித்த பேரவையில்  பாஜக  கடுமையாக விமர்சித்ததால்,  வங்காள சட்டமன்றம் பெரும் அமளியானது.  இதையடுத்த இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதுடன்,  பாஜக  கட்சியின் தலைமை கொறடாவை காயப்படுத்தியது. இதையடுத்து அவர் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் … Read more