ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: ஜெர்மனி இங்கிலாந்து பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 10நாள் பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றுள்ளார். இது அவரத 5வது வெளிநாடு பயணம். இந்த பயணத்தின்போது,   தமிழ்நாட்டிற்கு ரூ.13,016 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாக முதல்வர் ஸ்டாலின கூறி உள்ளார். இதுகுறித்து,  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பா … Read more

மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி – மம்தா முன்னிலையில் பாஜக கொறடாவுக்கு அடி உதை!

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப்பேரவையில் வரலாறு காணாத அமளி ஏற்பட்டது.  இந்த அமளியின்போது, பாஜகவினர் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்பிய நிலையில்,  மம்தா முன்னிலையில் பாஜக கொறடா உள்பட பலருக்கு அடி உதை! விழுந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி நடவடிக்கை குறித்த பேரவையில்  பாஜக  கடுமையாக விமர்சித்ததால்,  வங்காள சட்டமன்றம் பெரும் அமளியானது.  இதையடுத்த இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதுடன்,  பாஜக  கட்சியின் தலைமை கொறடாவை காயப்படுத்தியது. இதையடுத்து அவர் காவலர்களால் வெளியேற்றப்பட்டார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் … Read more

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் உருவ படத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

லண்டன்: லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியர் உருவ படம் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு தொழில்முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு தற்போது இங்கிலாந்தில் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இதற்கிடையில்,   சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் உருவ படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். … Read more

உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களை அடித்து விரட்டுவதற்கா? அன்புமணி காட்டம் – காவல்துறை விளக்கம்…

சென்னை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவுவதற்கா? மக்களை அடித்து விரட்டுவதற்கா?  பாமக தலைவர்  அன்புமணி  ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ராணிப்பேட்டை அருகே செப்டம்பர் 3ந்தேதி நடைபெற்ற  “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மனு கொடுக்க வந்த வயதானவரை காவலர் ஒருவர் முகத்தில் குத்தியும், மார்பை பிடித்து தள்ளியும் கடுமையாக தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில்  வைரலானது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து,  சம்பவம்  குறித்து ராணிப்பேட்டை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் காவல்துறையினரால் தாக்கப்பட்ட முதியவர், … Read more

மிலாதுன் நபி: நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு…

சென்னை: இஸ்லாமியர்களின்  பண்டிகையான  மிலாதுன் நபி  நாளை கொண்டாடப்படும் நிலையில்,  நாளை மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு  தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. அதுவும் பண்டிகை நாட்களான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட நாட்களில் வந்துவிட்டால்  டாஸ்மாக் மது விற்பனை மூலம் பணம் கோடி கோடியாக கொட்டி வருகிறது. … Read more

பொதுச்செயலாளர் விவகாரம்: எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி…

சென்னை :  அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து,  எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3வது வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே இதுதொடர்பான இரு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது வழகை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது. ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக சிதறியது. இதையடுத்து, … Read more

லாக்-அப் மரணம் : காவல் நிலையங்களில் சிசிடிவி வேலை செய்யாதது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடர்ந்தது. “கடந்த எட்டு மாதங்களில், 11 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். இந்த நிலையங்களில் சிசிடிவி சரியாக வேலை செய்யவில்லை என்பது கவனிக்கப்பட்டது. எனவே, ‘காவல் நிலையங்களில் சிசிடிவி போதுமான அளவு செயல்படவில்லை’ என்ற தலைப்பில் ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் … Read more

தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி 7வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்

டெல்லி: மத்தியஅரசு நடப்பாண்டுக்கான (2025) தேசிய  கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. என்.ஐ.ஆர்.எஃப் (NIRF) தரவரிசை – சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. 2025 தேசிய நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையி்ல, இதில் சென்னை IIT மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம்  2வது இடம் பிடித்துள்ளது, மும்பை … Read more

துரோகம் தலைவிரித்து ஆடுகிறது: என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி, எடப்பாடி மீது கடும் தாக்கு…!

சென்னை: பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்த விலகிய டிடிவி தினகரன், துரோகம் தலைவிரித்து ஆடுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் , எடப்பாடியை கடுமையாக சாடியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் கடந்த முறை இருந்த ஓபிஎஸ் அணி, அமுமக கட்சி உள்பட சில கட்சிகள் வரும் தேர்தலில் கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி போன்றோர்களை அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி கடும் … Read more

உயர்ந்து வரும் கடல்நீர் மட்டம்: சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம்!

சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால்  சென்னை  உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. புவி வெப்பமாதல் கரியமில வாயு உமிழ்வு உள்பட பல்வேறு  காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால்,  சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2100ல் தமிழ்நாட்டின் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடல்நீர் மட்டம் எவ்வளவு உயரும் வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலையும் … Read more