ஆப்கானிஸ்தானில்  நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது… தொடரும் மீட்பு பணி…

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,411ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அரசு நேசக்கரம் நீட்டி,  நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாநிலத்தை மையமாகக் கொண்டு, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் நேற்று அதிகாலை (செப்டம்பர் 2ந்தேதி)  ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பலமுறை நில அதிர்வுகளும் … Read more

இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன்! முதல்வர் ஸ்டாலின் பதிவு…

லண்டன்:  இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். ஜெர்மனி பயணத்தை முடித்துவிட்டு, இன்று காலை இங்கிலாந்து சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், #இங்கிலாந்தில் கால் பதித்தபோது, ​​நான் அரவணைப்புடனும் பாசத்துடனும் அரவணைக்கப்பட்டேன், தொலைதூரக் கரைகளைக் கடந்து வீட்டின் நறுமணத்தை எடுத்துச் சென்ற வரவேற்பு என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டள்ளது. லண்டனில் … Read more

காதலி போன் எடுக்காததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான வீடியோ… உண்மையென்ன…

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது காதலியின் போன் பிஸியாக இருந்ததை அடுத்து காதலியின் ஊருக்குச் செல்லும் மின்சார ஒயரை துண்டித்ததாக காணொளியுடன் ஒரு செய்தி வெளியானது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரபல ஊடகங்களும் கடந்த ஒரு வாரமாக இதை வெளியிட்டு வந்தது. ஆனால் இந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பார்த்தவர்கள் இந்த தகவலில் உண்மையிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கையில் மின்சார ஊழியர்கள் வைத்திருக்கும் உபகரணங்கள் வைத்திருந்ததாகக் காரணங்களைப் பதிவிட்டனர். தவிர, … Read more

ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோடு அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

ஓசூர்: தொழில்நகரமான ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் ஒரு ரிங் ரோட அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி,   ஒசூர் புதிய பேருந்து நிலையம் அருகே துவங்கி ஜெனாபெண்டா வரை 6 கி.மீ. தூரத்துக்கு ரிங் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.138 கோடியில் ரிங் ரோடு அமைக்க நெடுஞ்சாலைத் துறை கருத்துரு தயார் செய்து ஆட்சியருக்கு அனுப்பி உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44ல் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஓசூர் அவுட்டர் … Read more

சிப்கள் ‘டிஜிட்டல் வைரங்கள்’: இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘சிப்’ உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று பிரதமர் மோடி கூறினார். சிப் சிறியதாக இருக்கலாம். ஆனால் உலகின் முன்னேற்றத்துக்கு தேவையான சக்தியை அது கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டை எண்ணெய் தீர்மானித்தது. அடுத்துவரும் நூற்றாண்டை சிப் தீர்மானிக்கப்போகிறது. எண்ணெய் கருப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் இந்த சிப்கள் டிஜிட்டல் வைரங்கள் என அழைக்கப்படும். சீர் திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தை … Read more

சிகரத்தை நோக்கி… தங்கத்தின் விலை! சவரன் ரூ.78ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது.  நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து  ஒரு சவரன் தங்கம்  ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது  நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், … Read more

லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு! முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

லண்டன்: லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், லண்டனில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழ்நாட்டைத்தான் சுற்றிச் சுழல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்துக்குத் துணை நிற்கும் ஐரோப்பியப் பயணம்! தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும் – ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து வந்தடைந்திருக்கிறேன். இந்தப் பயண அனுபவங்களை உடன்பிறப்புகளுடன் பகிர்கிறேன்… என புகைப்படங்களை பகிர்ந்து கடிதம் எழுதி  உள்ளார். தமிழக முதல்வரும் திமுக … Read more

தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்! தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்…

சென்னை; தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று பரவல் இல்லை என மறுத்துள்ள தமிழ்நாடு சுகாதாரத்துறை, தற்போது  பரவி வருவது இன்புளுன்சா ஏ வகை வைரஸ் காய்ச்சல்தான் என்று விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காய்ச்சல் தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வு நடத்துவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் பரவின. இநத் நிலையில்,   தமிழ்நாட்டில் பரவுவது … Read more

ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு

மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின்  முன்னிலையில்,  போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். ஸ்டாலின் ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாடு அரசு  பொய்யான தகவல்களை தந்து மக்களை ஏமாற்றுகிறது என கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தின்போது,  9ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 23 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள … Read more

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்பு

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் … Read more