குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும் பிரதமர் முதலமைச்சர் உள்பட அனைவரையும் பதவி நீக்கும் வகையில் புதிய சட்டம்! மக்களவையில் இன்றுதாக்கல் செய்கிறர் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: குற்ற வழக்குகளில் சிறைக்கு செல்லும்  பிரதமர், முதலமைச்சர் மற்றும்  அமைச்சர்களை பதவி நீக்கும் வகையில் புதிய சட்டத்தை  மத்தியஅரசு கொண்டு வருகிறது. இந்த சட்டம் இன்று  நாடாளுமன்றத்தில்  உள்துறை அமைச்சர் அமித்ஷாவால்  தாக்கல் செய்யப்படுகிறது. இன்று நாடாளுமன்றத்தில்  உள்துறை சார்பில்   மூன்று மசோதாக்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களில் பாதிபேர்  குற்றவழக்குகளில் தொடர்புடையவர்களாகவே உள்ளனர். மேலும் பலர்  குற்ற வழக்குகளில் சிக்கி சிறைக்கு சென்ற நிலையில்,  … Read more

ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆளுநர் நீண்ட காலமாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தால், என்ன வழி? ஜனாதிபதியின் பரிந்துரையில் சட்டத் துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்ப உள்ளது. உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை மீண்டும் எழுத முடியுமா? ஆளுநரின் அதிகாரங்கள் குறித்த ஜனாதிபதி பரிந்துரை வழக்கில் அட்டர்னி ஜெனரல் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய அரசியல் சாசன அமர்வு,   ஏப்ரல் மாதம் தீர்ப்பை வழங்கிய அமர்வு, மசோதாக்கள் நீண்ட காலமாக ஆளுநரின் முன் நிலுவையில் இருந்ததால், தமிழ்நாடு வழக்கில் தலையிட்டிருக்கலாம் என்று … Read more

4வது முறையாக மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை? ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

சேலம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணை 4வதுமுறையாக மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளதால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்ட வருகிறது. தற்போது,  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 90,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. … Read more

ரூ.2,442 கோடி ஒதுக்கீடு: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு அரசு சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.2,442 கோடி ஒதுக்கியுள்ளது .  சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் … Read more

முன்னாள் படைவீரர்களின் நலன்: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை : முன்னாள் படைவீரர்களின் நலன் காக்கும் வகையில்,  முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்,   முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன்,   முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் … Read more

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,   டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவிப் பொறியாளர் பணிக்கு தேர்வான 45 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறைக்கு தேர்வானவர்களுக்கும் பணி ஆணை வழங்கினார்.

டிஆர் பாலு மனைவி ரேணுகாதேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை ரேணுகாதேவி உயிர் பிரிந்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ரேணுகாதேவியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் … Read more

சொத்து பத்திரப்பதிவு : தமிழ்நாட்டில் இனி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுமனை பத்திரப் பதிவு செய்ய வாங்குபவர்களோ அல்லது டெவலப்பர்களோ முதல் விற்பனை பதிவுகளுக்கு இனி நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய ஆளில்லா பத்திரப் பதிவுக்கான செயல்முறையை மாநிலப் பத்திரப்பதிவுத் துறை உருவாக்கி வருவதை அடுத்து இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக விருப்பத்திற்கிணங்க இந்த சேவையைத் தேர்வு செய்யலாம் என்றும் படிப்படியாக இது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 36 … Read more

நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,   தமிழகத்தில் கிட்னி திருட்டு உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  … Read more

இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு – பாஜகவுக்கு சிக்கல்…

டெல்லி: இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  சுதர்ஷன் ரெட்டி  பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் வெற்றியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து,  எதிர்க்கட்சிகளின் சார்பில்,  துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார். ரெட்டி தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் என்பதால், ஆந்திர மாநில … Read more