டிஆர் பாலு மனைவி ரேணுகாதேவி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி (80) உடல்நலக் குறைவால் காலமானார். நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று காலை ரேணுகாதேவி உயிர் பிரிந்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டில் ரேணுகாதேவியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகாதேவி மறைவுக்கு முதல்வர் … Read more

சொத்து பத்திரப்பதிவு : தமிழ்நாட்டில் இனி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரடியாக செல்ல வேண்டிய தேவையில்லை

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பு அல்லது வீட்டுமனை பத்திரப் பதிவு செய்ய வாங்குபவர்களோ அல்லது டெவலப்பர்களோ முதல் விற்பனை பதிவுகளுக்கு இனி நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய ஆளில்லா பத்திரப் பதிவுக்கான செயல்முறையை மாநிலப் பத்திரப்பதிவுத் துறை உருவாக்கி வருவதை அடுத்து இந்த நடைமுறை விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக விருப்பத்திற்கிணங்க இந்த சேவையைத் தேர்வு செய்யலாம் என்றும் படிப்படியாக இது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 36 … Read more

நாமக்கல் கிட்னி திருட்டு: தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்னி திருட்டுக்கு உடந்தையாக இருந்த திமுகவினரின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்ய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கிட்னி திருட்டு மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி  தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,   தமிழகத்தில் கிட்னி திருட்டு உள்ளிட்ட மனித உறுப்புகள் விற்பனையை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  … Read more

இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக சுதர்ஷன் ரெட்டி அறிவிப்பு – பாஜகவுக்கு சிக்கல்…

டெல்லி: இண்டியா கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி  சுதர்ஷன் ரெட்டி  பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் வெற்றியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மீண்டும், காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து,  எதிர்க்கட்சிகளின் சார்பில்,  துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று கார்கே அறிவித்தார். ரெட்டி தெலுங்கு இனத்தை சேர்ந்தவர் என்பதால், ஆந்திர மாநில … Read more

உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாதது தான் திமுக அரசின் சாதனை! அன்புமணி ராமதாஸ்

சென்னை; தமிழ்நாட்டு மக்களின்  உடல் உறுப்புகளுக்குக் கூட பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியது தான் திமுக அரசின் சாதனையா? என்று  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிட்னி திருட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்துஅங்கு கல்லீரல் திருட்டும் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவினருக்கு சொந்தமான இரு மருத்துவமனைகள் சம்பந்தப்பட்டுள்ளது அம்பலமான நிலையில், அந்த மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

திமுக எம்.பி. டி.ஆர். பாலுவின் மனைவி காலமானார்…

சென்னை: திமுக பொருளாளர், மக்களவை குழுத்தலைவர் டி. ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர்டி. ஆர். பி. ராஜா அவர்களின் தாயாருமான ரேணுகா தேவி (79) உடல்நலக்குறைவால்  இன்று காலமானார். ரேணுகா தேவி  நுரையீரல் பாதிப்பு காரணமாக,  உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக   சிகிச்சை பெற்று வந்த  நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட திமுக … Read more

தமிழ்நாட்டில் எண்ணூர் உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்..!!

சென்னை:  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், சென்னை உள்பட 8 துறைமுகங் களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை … Read more

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள்! விவரம்…

விழுப்புரம்: பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்   ஆகஸ்டு 17ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது. இதில் அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது. பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு அன்புமணி பா.ம.க தலைவர் பதவியில் … Read more

ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம்! அரசாணை வெளியீடு…

சென்னை: ரூ.500 கோடியில்   தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு குறைக்கடத்தி மிஷன் 2030 (TNSM 2030) இன் கீழ், ரூ.500 கோடி மதிப்பீட்டில் குறைக்கடத்தி வடிவமைப்பு ஊக்குவிப்பு திட்டத்தை தமிழ்நாடு தொடங்கியுள்ளது. இது, கற்பனையற்ற வடிவமைப்பு நிறுவனங்களுக்கு இலக்கு மானியம் மற்றும் முன்மாதிரி மானியங்களை வழங்குவதாகவும், TIDCO (தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்) தலைமையிலான பொது-தனியார் கூட்டாண்மை மூலம் சிறப்பு மையங்களை (CoEs) அமைப்பதாகவும் மாநில அரசு  … Read more

வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் சுரங்க பாதையை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை:  வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி  போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள  சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று  திறந்து வைத்தார். சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில்  ரயில்வே வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை துணைமுதல்வர் ஸ்டாலின் இன்றுதிறந்து வைத்தார். வடசென்னையின் முக்கிய பகுதியான வண்ணாரப்பேட்டை , ராயபுரத்தின்  மூன்று பக்கமும் ரயில்வே … Read more