குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய மத்திய அமைச்சர்…

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே  நட்பு  இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற  தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த … Read more

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல வேறு சிலருக்கும்  முறையான அனுமதியின்றி மற்ற பாகங்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக நபர்களின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று … Read more

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்  என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் பதில் அளித்துள்ளனர். ஏற்கனவே வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு CEC ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் அல்லது கருத்துக்களை திரும்பப் பெறவும் என கூறிய நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், வாக்குதிருட்டு என  எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி … Read more

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த  உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சராக இருந்து வரும்,  ஐ.பெரியசாமி மீது, கடந்த  அதிமுக ஆட்சியில் 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. … Read more

தனியார் நிறுவனத்தின் சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை: சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார்  தொழில்துறை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபன்ஸ் காலனியில் உள்ள இன்டர் ஆர்க் பில்டிங் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிரபல இரும்புப்பொருள் தயாரிக்கும் தொழில்நிறுவனத்திற்குச்சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (18.08.2025) காலை முதல் … Read more

பீகார் எஸ்ஐஆர்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் 16 நாட்கள் வாக்குரிமைப் பேரணி….

பாட்னா: பீகார் மாநிலத்தில், தேர்தல்ஆணையத்தின் தீவிர வாக்காளார் பட்டியல் சீர்திருத்தம் நடைபெறுவதற்கு எதிராக, மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை யில் மாநில எதிர்க்கட்சிகளின் 16 நாட்கள் சுமார் 1300 கிமீ தூரம்  நடைபெற உள்ளது. இநத  மெகா  வாக்குரிமை பேரணி (‘Vote Adhikar Yatra’ ) நேற்று (ஆகஸ்டு 17)ந்தேதி அன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இங்குள்ள வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளை அகதிகள் … Read more

சம்மத உறவு குற்றமாகாது…

சம்மத உறவு குற்றமாகாது… மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் இன்னும் எத்தனை நாளைக்கு தான் 18 என்ற நம்பருடன் மாறி மாறி வயசுடன் விளையாடிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை. 18 வயது பூர்த்தியாகாத ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக போக்சோ வழக்கில் ஒருவனுக்கு (காதலனுக்கு) ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். ஆனால் சம்பந்தப்பட்ட பெண் 18 வயது பூர்த்தியாக வெறும் 19 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதோடு பெண்ணின் சம்மதத்தின் பெயரிலேயே உறவு நடந்திருக்கிறது … Read more

வாஜ்பாய் நினைவுதினம்: டெல்லி ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் அஞ்சலி

டெல்லி: இந்திய முன்னாள் பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள  ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினமான இன்று டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் … Read more

ஜிஎஸ்டி குறைப்பு – முதல்வேலைக்கு ரூ.15ஆயிரம்: பிரதமர் மோடியின் 79வது சுதந்திர தின பேச்சின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகள்…

டெல்லி:  நாட்டின் 79வது சுதந்திரதினத்தை முன்னிட்டு 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி யின் சுதந்திர தின உரையின்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு இரட்டை தீபாவளி என்றும் கூறினார். தீபாவளியையொட்டி ஜிஎஸ்டியில் திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும், வரவிருக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை மக்களுக்கான “இரட்டை தீபாவளி” என்று குறிப்பிட்ட பிரதமர், ஜிஎஸ்டி வரி குறைப்பு மட்டுமின்றி, புதிதாக வேலைக்கு சேரும் எல்லா இளைஞர்களுக்கும் ரூ.15,000 ஊக்க … Read more

மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்! மத்தியஅரசு பதில்….

டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும்  என  குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில்,  மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மூன்று மாத காலக்கெடுவும், ஆளுநர்களுக்கு ஒரு மாத காலக்கெடுவும் ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது. இந்த விவகாரத்தில் மாநிலஅரசுகள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், மத்தியஅரசு … Read more