இன்று வெளியாகிறது ஹே சினாமிகா ட்ரெய்லர்…!உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், மதன் கார்க்கி எழுத்தில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை படம் ஹே சினாமிகா.இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் , காஜல் அகர்வால், அதிதி ராவ் , ஷியாம் பிரசாத் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். 2015 ஆம் ஆண்டில்ல் வெளியான ஓ காதல் கண்மணி படத்திலுள்ள ஒரு பாடலின் வரி தான் … Read more

இனி போன் தேவையில்ல – WhatsApp கொண்டு வரும் பெரிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பேஸ்புக்கில் உள்ள வசதியை போல, கவர் இமேஜ்-ஐ கொண்டு வர வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக வணிக ரீதியிலான வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த வசதி, அடுத்தடுத்து பீட்டா பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. உலகளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பயனர்களுக்கு அளித்து வருகிறது. தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை … Read more

கே.சி.ஆரின் எழுச்சி… ஆஹா.. இந்த டிவிஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லையே.. மோடி குஷிதான்!

தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ் சமீப காலமாக சந்தேகத்திற்கிடமான வகையில் பேசத் தொடங்கியுள்ளார். இதை பலரும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்துள்ளனர். அவரு தற்போதைய நோக்கம் தேசிய அரசியில் புகுவது, மாநிலத்தை தனது மகனிடம் ஒப்படைப்பது என்பதுதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இத்தனை நாட்களாக மத்திய அரசையோ அல்லது பிரதமர் மோடியையோ திட்டாமல் அமைதியாக தான் உண்டு, தனது தெலங்கானா உண்டு என்று இருந்து வந்தவர் கே.சி.ஆர். ஆனால் சமீப … Read more

கனடா படகு விபத்து: 10 பேர் பலி; 11 பேர் மாயம்!

கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது. நியூஃபவுண்ட்லேண்ட் என்ற இடத்திலிருந்து கிழக்கே 250 கடல் மைல் தொலைவில் படகு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான படகில் 24 பேர் சென்ற நிலையில், படகு விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் மாயமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் கனடா நாட்டு கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். கடுமையான வானிலை, தேடுதல் பணிக்கு சவாலாக இருப்பதாகவும், ஹெலிகாப்டர், ராணுவ … Read more

சிம்பு இப்படி செய்வாருன்னு எதிர்பாக்கல..! நடிகரின் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

திரைக்கு முன் நடிக்க தெரிந்த சிம்புவிற்கு திரைக்கு பின் நடிக்கத்தெரியாது என்பதே பல ரசிகர்களின் கருத்து. தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் சிம்பு. அதன் காரணமாக பல பிரச்சனைகளிலும் சிக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிம்புவை பற்றி நடிகர் ஒருவர் கூறியிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் TRP ரேட்டிங்கை குறிவைத்தே பல விளம்பரங்களை செய்துவருகின்றன. பொதுவாக டிவி நிகழ்ச்சியில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு அழுதாலோ, … Read more

காங்கிரசில் வீழ்ந்த அடுத்த விக்கெட் – முன்னாள் மத்திய அமைச்சர் ராஜினாமா!

காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சருமான அஸ்வனி குமார், அக்கட்சியில் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக பாஜகவுக்கு எதிராக கட்சியை வலுவாக கட்டமைக்க முடியாமல் அக்கட்சி திணறி வருகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கட்சியில் இருந்து மூத்தத் தலைவர்கள் ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி … Read more

அவர் எனக்கு வழிகாட்டி.. தனுஷ் குறித்து பேசிய மால்மோ..!

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன் . சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர், தன்னை பற்றி வரும் நக்கல் மீம்களுக்கும் விளையாட்டாக எடுத்து கொண்டு பதிலளிப்பார். பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாளவிகா மோகனன், விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்துள்ளார். இவர் சினிமாவை காட்டிலும் கவர்ச்சி போட்டோஷூட் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார். தற்போது … Read more

ஆயிரக்கணக்கில் போலீஸ் புகார்.. பெரும் சிக்கலில் ராகுல் காந்தி.. பாஜக வார்னிங்!

ராகுல் காந்தி போட்ட ஒன்றிய அரசு என்ற ட்வீட்டைத் தொடர்ந்து அவர் மீது அஸ்ஸாம் பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் சரமாரியாக போலீஸில் புகார் கொடுத்து வருகின்றன. ராகுல் மீது 1000க்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் பாஜக கூறியுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது வீடியோ உரையின்போது உ.பி. மக்கள் வாக்களிக்கும்போது தவறு செய்து விட்டால், உ.பி. ஒரு கேரளாவாகவோ அல்லது காஷ்மீராகவோ அல்லது மேற்கு வங்காளமாகவோ மாறி விடும் என்று … Read more

ரிலீசுக்கு முன்பே தெறிக்கவிடும் 'வலிமை': செம்ம குஷியில் அஜித் ரசிகர்கள்…!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார் அஜித். ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக், டிரெய்லர் உள்ளிட்டவை … Read more

வெளிநாட்டில் குஜராத் குடும்பம் மரணம்: புலம்பெயர்வின் சோகப் பின்னணி!

ஒருமுறை சென்னையில் முடிவெட்டும் கடைக்குச் சென்றபோது கடையில் இருபது வயதுக்குள் இருக்கும் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குத் தமிழ் தெரியாது. எனக்கு இந்தி தெரியாது. இருவரும் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிக்கொண்டோம். ஜார்க்கண்டைச் சேர்ந்த அந்தப் பையனின் பெற்றோர் கொல்கத்தாவில் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். அங்கே முடிவெட்டும் தொழிலில் போதிய வருமானமில்லை. தரகர் மூலம் சென்னை வந்திருக்கிறான். இங்கே உரிமையாளர் தமிழர். ஊதியம் பத்தாயிரம் ரூபாய். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். இலவசமென்றால் அது ஒரு தீப்பெட்டி சிறைக்கூடம். அந்த இளைஞனுக்குத் … Read more