'ஜெயிலர்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி: வேகமெடுக்கும் 'தலைவர் 170'.!

‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளார் ரஜினி. யார் சூப்பர் ஸ்டார் என்ற விவாதத்துக்கு இடையில் கிடைத்துள்ள இந்த வெற்றி ரஜினிக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. படத்திற்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும் வசூல் காரணமாகவும் படக்குழுவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். ‘ஜெயிலர்’ வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. நெல்சன் திலீப்குமாரை தொடர்ந்து த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கவுள்ளது. ஆக்ஷன் படமான ஜெயிலரை … Read more

ஆளுநர் ரப்பர் ஸ்டாம்ப் இல்ல… காப்பியடித்த திமுக – அட்டாக்கில் இறங்கிய ஆளுநர் தமிழிசை

தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், ஆளும் அரசுக்கும் இடையே பனிப் போர் நிலவி வருகிறது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார் என திமுக தரப்பு குற்றம்சாட்டுகிறது. மேலும், நீட் உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநரின் பேச்சு பலத்த சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவையும் பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில், … Read more

Sony Xperia 5 V : செப்டம்பர் 1-ல் வெளியாகிறது சோனி எக்ஸ்பீரியா 5 V! டூயல் கேமரா, ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் மற்றும் முழு விவரங்கள்!

சோனி நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வர உள்ள Sony Xperia 5 V செப்டம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவலை தெரிவித்துள்ளது சோனி நிறுவனம். இந்நிலையில் அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ப்ரோமோ வீடியோ மூலமாகவும், Geekbench தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையிலும் சோனி எக்ஸ்பீரியா 5 V – ல் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ​Sony Xperia 5 V வெளியீடுஜப்பானை மையமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி டெக் நிறுவனமான … Read more

"மதவெறியை தூண்டுறீங்களா".. கர்ஜித்த பொன்முடி.. அலட்சியமாக டீல் செய்த அண்ணாமலை.. முரட்டு சம்பவம்

நெல்லை: தனது நடைப்பயணத்தை அமைச்சர் பொன்முடி கடுமையாக விமர்சித்த நிலையில், அதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்திருக்கும் பதிலடி தான் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைப்பயணத்தில் தான் செல்லும் ஊர்களில் எல்லாம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் அண்ணாமலை. அதுமட்டுமல்லாமல், ஐடி, அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கிய … Read more

'சிவசக்தி பாயிண்டில்' இருந்து 360 டிகிரியில் நிலவின் ரகசியங்களை தேடும் பிரக்யான் ரோவர்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்திற்கு சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியது. 41 நாட்கள் பயணம் செய்த சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் கடந்த 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கியது. அதனை தொடர்ந்து அதில் இருந்த பிரக்யான் ரோவரும் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்ததாக அறிவித்த பிரக்யான் நேற்று விக்ரம் லேண்டரில் ரோவர் இறங்கும் வீடியோவை வெளியிட்டது. தொடர்ந்து ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் அவற்றின் … Read more

'பீஸ்ட்' படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்.. விஜய் செய்த காரியம்: நெகிழ்ச்சியுடன் பேசிய நெல்சன்.!

‘பீஸ்ட்’ படத்தால் எந்தளவு நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தாரோ, அதை விட அதிகமாக தற்போது ‘ஜெயிலர்’ படத்திற்காக கொண்டாடப்பட்டு வருகிறார் நெல்சன் திலீப்குமார். அந்தளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை படைத்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது ‘ஜெயிலர்’. இந்தப்படத்தால் குவிந்து வரும் வாழ்த்தால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தனது முதல் படத்திலே வித்தியாசமான இயக்கத்தால் கவனம் ஈர்த்த … Read more

UPI மூலம் இணையம் இல்லாமலேயே கூட பணம் செலுத்தலாம்! ரிசர்வ் வங்கியின் அதிரடி அறிவிப்பு!

டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்திய சமீப காலங்களில் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது சிறிய பெட்டி கடைகளில் தொடங்கி பெரிய மால்கள் வரை இன்று டிஜிட்டல் பரிவர்த்தனை இல்லாத இடமே இல்லை என்றும் சொல்லுமளவுக்கு அந்த வளர்ச்சி உள்ளது. ரிசர்வ் வங்கி அதிரடி! என்னதான் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகள் அதிகமாக பயன்பாட்டில் இருந்தாலும் இணைய வசதி இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைந்த இணையம் இருக்கும் இடங்களிலோ பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில்தான் இணையம் இல்லாமலும் கூட குறிப்பிட்ட … Read more

தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மழை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் தமிழ்நாட்டில் அவ்வப்போது சில மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும … Read more

Rajinikanth: வசூலில் சாதனை படைக்க ரஜினி போட்ட ராஜதந்திரம்..செம பிளானா இருக்கே..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. நெல்சனின் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. மேலும் கடந்த சில படங்களாக வெற்றியை தவறவிட்ட ரஜினி இப்படத்தின் மூலம் தான் யாரென தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுவரை ஜெயிலர் திரைப்படம் 525 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் ரஜினி தற்போது தன் அடுத்த படத்தின் பூஜையை … Read more

ஏர்டெலின் OTT சலுகை ரீச்சார்ஜ் திட்டங்கள்! 499 ரூபாயில் தொடங்கி 3359 வரை எக்கசக்க ஆஃபர்ஸ்!

டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையில் இருக்கும் போட்டியில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு விதமான ரீச்சார்ஜ் ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் தான் தினம்தோறும் ஏதாவது ஒரு புதிய சலுகைகளை போட்டி போட்டுக் கொண்டு அறிமுகப்படுத்தி வருகின்றன. அதில், முக்கியமானது ரீசார்ஜோடு சேர்த்து பிரபல ஓடிடி தளங்களின் சப்ஸ்க்ரிப்ஷனையும் வழங்குவது. அப்படி, ஏர்டெல் நிறுவனத்தால் வழங்கப்படும் ரீச்சார்ஜ் சலுகை பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம். ​500 ரூபாய்க்கு குறைவான ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் … Read more