தற்போதைய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம் இந்த நாட்டில் கல்வித்துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கம்

நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் கௌரவத்துக்குரிய சேவையாக ஆசிரியர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார். தற்போதைய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, இந்த நாட்டில் கல்வித் துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்தார்.   இந்நாட்டின் வருங்கால சந்ததியை உருவாக்கும் கௌரவமான சேவையாக ஆசிரியர்களுக்கு பாரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் அதனை சரியாக புரிந்துகொண்டு மனசாட்சிப்படி செயற்படுமாறு இராஜாங்க அமைச்சர் … Read more

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ. பாரிந்த ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

புதிய சட்டமா அதிபராக ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ.பாரிந்த ரணசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று (12) பிற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அரசியலமைப்பின் 61 ஈ (ஆ) பிரிவின் பிரகாரம் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.   ஜனாதிபதி சட்டத்தரணி கே. ஏ. பாரிந்த ரணசிங்க இலங்கையின் 49ஆவது சட்டமா அதிபர் ஆவார்.   இந்த பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். … Read more

விவசாய தொழில் துணைவோர் கிராமம்' ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக ஆரம்பம்..

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வழிகாட்டலில் இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக மாற்றும் திட்டத்தில்  ‘விவசாய தொழில் துணைவோர் கிராமம்’ என்ற திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் காகிதநகர் கிராம சேவகர் பிரிவு ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் சிபாரிசின் பேரில் தெரிவு செய்யப்பட்டுள்ளது.   இதற்காக … Read more

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை நவீனமயமாக்கும் (Digital) நடவடிக்கை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உள்ளக செயற்பாடுகளை நவீனமயமாக்கும் (Digital) நடவடிக்கை 09.07.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஆவண நடவடிக்கைகள் மற்றும் உள்ளக செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நவீனமயமாக்கும்(Digital) செயற்பாட்டு வலையமைப்பு ஒன்றினை அறிமுகப்படுத்துதல் மற்றும் தேசிய ரீதியில் அந்நடவடிக்கையை மிக வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, JICA நிறுவனம் மற்றும் Cyclomax International (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் … Read more

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நானே ஆரம்பம் “வெல்வோம் சிறீலங்கா” நடமாடும் சேவை கிளிநொச்சியில் ஆரம்பம்.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையினை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர்கள்,பணிப்பாளர் நாயகம்,அமைச்சின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)மற்றும் மாவட்டச்செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் வேலைநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ள குடும்பத்தினர் மற்றும் வேலைவாய்ப்பை … Read more

கிழக்கு மாகாண வீதி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 1 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு…

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான மக்கள் சந்திப்பு வேலைத்திட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சித் தொடரின் விசேட கூட்டமானது நேற்று (12) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து இவ்விசேட கூட்டம் ஆரம்பமானது. பொருளாதார நெருக்கடியில் இருந்து, மூச்செடுக்க முடியாத நாட்டை படிப்படியாக, மீட்டெடுப்பதற்கு, செலவை குறைத்து வருமானத்தை அதிகரிப்பது … Read more

பிரதமரின் பங்குபற்றலுடன் யாழ் மாவட்ட விசேட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 

யாழ்ப்பாண மாவட்ட விசேட  ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது பிரதமர்  தினேஸ் குணவர்த்தன  தலைமையிலும் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா  மற்றும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (12.07.2024) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.  யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய … Read more

போக்குவரத்துச் சட்டத் திருத்தின் போது புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம

போக்குவரத்துச் சட்டத் திருத்தத்தின் போது ஜி. பி. எஸ் தொழில்நுட்பம், கூகுல் மெப் போன்ற நவீன தொழில்நுட்ப முறைகள் அறிமுகப்படுத்தப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்தார்.   அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) இடம்பெற்ற செய்தியாளர்களுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்துத் தெளிவுபடுத்தி அது தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடலின் போதே ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.   தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 1991ஆம் ஆண்டு 37ஆம் இலக்க சட்டத்தின் கீழ் … Read more

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவற்கான கலந்துரையாடல்

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை சுற்றுலாத் தளமாக மாற்றுவற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்  ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மண்புராதன இடமாக ஒல்லாந்தர் கோட்டை காணப்படுவதனால் இக்கோட்டையை நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாகவும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. கோட்டை வளாகத்தில் புராதன நூதனசாலை ஒன்றை அமைத்தல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான  உணவுகளை சுற்றுலா பயணிகளுக்கு வழங்கல், பாரம்பரிய கலை, கலாசார விடயங்களை சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான … Read more

வேகக் கட்டுப்பாடு விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்..

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு, உண்மையான தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி, அரசியல் தேவைகளுக்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். வீதி விபத்துக்களை குறைப்பதற்கு வேகக் கட்டுப்பாடு தொடர்பில் தேவையான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானியை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் லநந்த அழகியவன்ன இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, “போக்குவரத்துத் … Read more