குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது – சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

குற்றவாளிகளை ஊடகங்களுக்கு முன் கொண்டுவந்து கேள்வி கேட்கக் கூடாது என சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த பாராளுமன்றத்தில் (11) தெரிவித்தார். நாட்டில் நிலவும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்து தெளிவான நிலைபேறான தீர்வொன்று அவசியம். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், தற்போது பாதாள உலகத்தினரால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தாக்கம் மற்றும் பயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தேக … Read more

டி20 கிரிக்கட் அணியின் தலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

இலங்கை டி20 கிரிக்கட் அணியின் தலைவராக கடமையாற்றிய சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சங்கம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அணித்தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னரும், அணியின் நன்மை கருதி இலங்கை அணியின் வீரராகவே அணியில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார் ‘ஒரு வீரராக நான் எப்போதும் இலங்கைக்கு சிறந்ததை வழங்க முயற்சிக்கிறேன். எனது அணியையும் அணித் தலைவரையும் நான் எப்போதும் ஆதரிக்கிறேன்’ எனபதாக வனிந்து தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் … Read more

இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22ஆம் திகதி இலங்கை வரவுள்ளது…

இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 2 வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதுடன், முதலாவது போட்டி ஜூலை 26 ஆம் திகதி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் … Read more

கொழும்புத் தொடர் மாடிகளில் வசிக்கு 50,000 பேருக்கு ரண்தொர உறுமய அளிப்புக்கள் கையளிப்பு ஆரம்பம்

கொழும்புத் தொடர் மாடி வீடுகளின் உரிமையாளர்கள் 50,000 பேருக்கான ரண்தொர உறுமய அளிப்புப் பத்திரங்களைக் கையளிக்கும் நடவடிக்கைகள் ஜூலை 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன்படி கொழும்புத் தொடர்மாடி வீட்டு உரிமையாளர்களின் அளிப்புப் பத்திரங்களை வழங்குவதற்கு முத்திரை மற்றும் நொத்தாரிசுக் கட்டணமாக 515 மில்லியன் ரூபா நிதியை வழங்குவதற்கு திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட வரையறைக்கு இணங்க சம்பந்தப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியு. … Read more

கிளிநொச்சியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக நடமாடும் சேவை இன்று

வெல்வோம் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நடமாடும் சேவை இன்றும் நாளையும் (ஜூலை மாதம் 12- 13ம் திகதிகளில்) கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது “வெல்வோம் ஸ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தின் நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நாடு முழுவதும் நடாத்தப்பட்டு வருகின்றமைக்கமைவாக இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் ஊழியர்களை பதிவு செய்தல், B பத்திரங்களை வழங்குதல், பின்னுரித்தாளிகள் மாற்றம் செய்தல், ஓய்வுக்கு முன்னரான … Read more

ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி நியமிக்கப்படுவார் – அமைச்சர் பந்துல குணவர்தன

எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும் காலம் தொடர்பாக (11) பாராளுமன்றத்தை ஒத்திப்போடுதல் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட சகல தேர்தல்களும் நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குத் அறிவித்துள்ளார். அதன்படி முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படும். அதற்காக இம்முறை வரவு செலவுத் … Read more

சிறுவர் இல்லங்கள் தொடர்பாக ஆளுநர் செயலகத்தின் அறிக்கை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் சிறுவர் மற்றும் மகளிர் இல்லங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலும், பிரதேச செயலாளரின் விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கள விசாரணை அறிக்கைக்கு அமைவாகவும், துறைசார் திணைக்கள ஆணையாளருக்கு ஆளுநரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஆளுநரினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழு மீண்டும் களவிஜயம் மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் சம்பந்தப்பட்ட இல்லம் ஒன்றில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றிய … Read more

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளனர்

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் அதிகாரிகளுடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன மேற்கொண்ட இணக்கப்பாட்டின் பிரகாரம், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி இன்று (11) நள்ளிரவு 12 மணிக்குள் பணிக்கு சமூகமளிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அமைச்சர் தொழிற்சங்க அதிகாரிகளிடம் தெரிவித்தார்.   அத்துடன், பணிக்கு வராத அதிகாரிகள் … Read more

கிழக்கு மாகாண ஆளுநருக்கு மலேசியா பாராளுமன்றத்தில் வரவேற்பு!

மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று (11) வியாழக்கிழமை சென்ற கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு அந்நாட்டு சபாநாயகர் ஜோஹாரி அப்துல், பாராளுமன்ற உறுப்பினர் Y B துவான் சோங் சியெங் ஜென், டத்தோஸ்ரீ சரவணன் முருகன் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். 1959ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மலேசியா பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர் ஒருவருக்கு முதன் முறையாக மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட சந்தர்ப்பமாக இது காணப்படுகிறது

மக்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் தொடர்பாகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் 

புகையிரத சேவையை அத்தியவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்களை அழுத்தத்திற்கு உட்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளினால் மக்களுக்கு அழுத்தம் ஏற்படுத்தப்படுவதாகவும், இவ்வாறான தொழிற்சங்க தலைவர்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அவசியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஆளும் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணத்துங்க இன்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று புகையிரதத்தில் இருந்து விழுந்து மரணம் அடைந்தவர் கம்பஹா பெம்முள்ள பிரதேசத்தைச் சேர்ந்தவர். நாட்டின் பொருளாதார சிக்கல்களுடன் இவ்வாறானவைகளை மேற்கொள்ள முடியாது என்று … Read more