பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக்கொள்ள முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் மேலதிக கொடுப்பனவு வழங்கவும் சம்மதம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளார்ந்த சம்பளம் மற்றும் உற்பத்தித்திறன் அடிப்படையில் வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையை வழங்குவதற்கு இன்று கூடிய 09 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளமாகத் தொகையை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்கள் அமைச்சரிடம் இணக்கம் தெரிவித்துள்ளன. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் … Read more

நாளை (12) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின்; தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 11ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாளை (ஜூலை 12) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின்; தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை … Read more

நாட்டில் புதிய பொருளாதார, அரசியலமைப்பைக் கட்டியெழுப்ப மகா சங்கத்தினரின் வழிகாட்டல் முக்கியமானது

அமரபுர நிகாய ஆரியவன்ச சத்தம்ம பீடத்தின் 44 ஆவது உபசம்பதா நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. தேரவாத பௌத்த நாடுகள் அனைத்தும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் அடிப்படையில் முன்னேற்றமடைந்துள்ளதாகவும், இறக்குமதிப் பொருளாதார முறையை பின்பற்றி இலங்கை மட்டுமே வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். எனவே, நாட்டில் புதிய பொருளாதார, அரசியல் முறைமைகள் விரைவில் உருவாக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டை புதிய பாதைக்கு கொண்டு செல்வதற்கு மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் மிகவும் முக்கியமானது எனவும் … Read more

இந்நாட்டில் முதன்முறையாக கறுவாச் செய்கை அபிவிருத்திக்காக புதிய திணைக்களம்

அதன் பிரதான அலுவலகத்தை காலி கரந்தெனியவில் ஜனாதிபதி திறந்து வைத்தார். சரியான பொருளாதார முறையின் மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டாலும் பெற்ற வெற்றிகளை இழக்க நேரிடும். நாட்டில் கறுவா பயிர்ச் செய்கையை மீண்டும் முன்னேற்றி ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் – ஜனாதிபதி. சரியான பொருளாதார முறை மூலம் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்லாவிட்டால் நாட்டுக்கு கிடைத்த வெற்றிகளை இழக்க நேரிடும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க சிலர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் … Read more

பிரச்சினைகளின் போது ஓடி ஒளிந்த தலைவர்கள் இன்று மேடைகளில் வீரவசனம் பேசுமளவுக்கு நாட்டின் நிலைமை மாறியுள்ளது

நாட்டில் நெருக்கடி ஏற்பட்ட போது ஓடி ஒளிந்தவர்கள் இன்று தேர்தல் மேடைகளில் வீர வசனம் பேசுமளவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பியுள்ளதாக வர்த்தக, சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தைரியமாக சவாலை ஏற்று நாட்டை கட்டியெழுப்ப பாடுபட்டதால் நாடு இந்த நிலைக்கு வந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இதனைத் தெரிவித்தார். இங்கு … Read more

தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற உர மானியத்தை விட மேலதிகமான மானியமொன்றை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்க திட்டம்

தேயிலை உற்பத்தியாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற உர மானியத்தை விட மேலதிகமான மானியமொன்றை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வழங்க திட்டமிட்டள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேயிலை உற்பத்தி அதிகரிப்புக்கு தடையாக இருப்பது உரம். உரங்களுக்கான விலை அதிகரிப்பை தொடர்ந்து, தேயிலை உற்பத்தியாளர்கள் தேயிலைக்கான உரங்களை பயன்படுத்துவதை மட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் கிடைக்கக் கூடிய விளைச்சலின் அளவு குறைவடைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். தேயிலை பயிர்ச்செய்கை தொடர்பாக, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட … Read more

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு..

பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் லங்கா சதொச நிறுவனமானது அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, பாசிப் பயறு 1 கிலோ கிராம் 998 ருபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு 1 கிலோ கிராம் 205 ருபாவாகவும், சிவப்பு சீனி 1 கிலோ கிராம் 375 ருபாவாகவும் மற்றும் வெள்ளை சீனி 1 கிலோ கிராம் 263 ருபாவாகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பணிப்புரைக்கு … Read more

இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒளிப்பதற்காக பல்துறைசார் தேசிய செயற்பாட்டுத் திட்டம்

இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்காக பல்துறைசார் தேசிய செயற்பாட்டுத் திட்டம் – ii (2024- 2028) இனை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான 2024.07.09 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: இலங்கையில் பால் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை ஒளிப்பதற்காக பல்துறைசார் தேசிய செயற்பாட்டுத் திட்டம் ii (2024-2028) வன்முறையற்றதும் … Read more

50,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டு உரிமைகளை வழங்கும் “ரன்தொர உறுமய” திட்டம் ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் 31 அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைந்துள்ள 130 வீடுகளின் உரிமை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில். இரண்டு வருடங்களுக்கு முன்பு என் வீட்டுக்கு தீவைக்கப்பட்ட நேரத்தில் ஒரு வீட்டின் மதிப்பை கடுமையாக உணர்ந்தேன். இருபது இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உரிமையும், இரண்டரை இலட்சம் பேருக்கு முழுமையான வீட்டு உரிமையும் வழங்க முடிந்ததில் மகிழ்ச்சி – ஜனாதிபதி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது வீடு தீவைத்து அழிக்கப்பட்ட போது, ஒரு வீட்டின் பெறுமதியை கடுமையாக உணர்ந்ததாகவும் … Read more

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தை செலுத்தாத பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசு செய்துள்ள காணிக் குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட சம்பளத்தை செலுத்தாத பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுடன் அரசு செய்துள்ள காணிக் குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்குத் தேவையான சட்டத்தை வகுப்பதற்கான செயன்முறையை துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை செலுத்துவதற்கு ஒவ்வொரு பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளிடமுள்ள இயலுமையைத் தீர்மானிப்பதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக 09.07.2024 அன்று நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 23. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்குதல் தொடர்பாக சில … Read more