பெருந்தோட்டத் துறையில் புதிய குடியிருப்பு கிராமங்களை அமைத்தல்

பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போது காணப்படும் தோட்ட வீடுகள் மற்றும் லயின் அறைகளை ஒன்றிணைத்து கிராமங்களாக மாற்றுவதற்கான புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது குறித்த சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெருந்தோட்ட பிரதேசங்களில் தற்போதுள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு அரச நிறுவனங்களால் வழங்கப்படும் கிராமிய மட்ட சேவைகள் முறையாக கிடைக்காதுள்ளது. அவர்களை மரியாதையுடனும், கௌரவத்துடனும் நடாத்துவதற்காக பெருந்தோட்ட வீடுகளை குடியிருப்பு கிராமங்களாக … Read more

கதிரவேலு சண்முகம் குகதாசன், பாராளுமன்ற உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் நேற்று (09) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் மறைவை அடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு கதிரவேலு சண்முகம் … Read more

வேலைநிறுத்தங்களால் நாட்டுக்கு வருமானம் வராவிட்டால் சம்பளம் வழங்க முடியாது – கலாநிதி பந்துல குணவர்தன

வேலைநிறுத்தம் காரணமாக நாட்டுக்கு வருமானம் கிடைக்காவிட்டால் சம்பளம் வழங்க முடியாது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் எவ்வாறாயினும் இன்று வழங்கப்படும் என திறைசேரி தெரிவித்துள்ளது. உள்நாட்டு இறைவரி திணைக்களம், கலால் திணைக்களம், சுங்க … Read more

சகல அரச ஊழியர்களுக்கும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு வருடாந்தம் 275 பில்லியன் ரூபாய் அவசியம் : வெற் வரியை 22 % ஆக அதிகரிக்க வேண்டும்

பதினைந்து இலட்சம் அரச ஊழியர்களுக்காக 20,000 ரூபாய் அதிகரிப்புடன் சம்பளத்தை வழங்குவதற்கு வருடாந்தம் 275 பில்லியன் ரூபா நிதி அவசியம் என்றும், அது தலா தேசிய உற்பத்தியில் 1% என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ஹேமசிங்க தெரிவித்தார். அந்த நிதியை உழைப்பதற்காக தற்போது காணப்படும் வெற் வரியை 4% ஆல், அதாவது வரி வீதத்தை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என்றும், அது தவிர நிறுவன வரி வீதத்தை 42% என்ற மட்டத்திற்குக் கொண்டு வர வேண்டும் … Read more

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்காத நிறுவனங்களின் குத்தகை ஒப்பந்தம் இரத்து செய்யப்படும்

பெருந்தோட்ட குடியிருப்பு பிரதேசங்கள் கிராமங்களாக மாற்றுவதற்கான வர்த்தமானி வெளியிடப்படும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக சில பெருந்தோட்டக் கம்பனிகள் நீதிமன்றத்தை நாடியமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் குழுவினர்கள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நேற்று (9 ) அமைச்சர் மனுஷ நாணயக்காரவைச் சந்தித்தனர் . குறிப்பிட்ட பெருந்தோட்டக் கம்பனிகள் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்க மறுப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து … Read more

வட மாகாண ஆளுநரால் கல்விமாணிப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விமாணி பட்டதாரிகள் 13 பேருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களால் ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு (08/07/2024) நடைபெற்றது. தாம் கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது ஆளுநர் தெரிவித்தார். அதனூடாக கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் இலகுவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான செயற்பாடுகளை … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்க வேண்டுமாயின் வெட் வரியை மீண்டும் அதிகரிக்க நேரிடும்

• பொதுமக்கள் மீது சுமையேற்றி இத்தகைய தேவையைப் பூர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு இயலாது.   • அரசாங்க ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வை வழங்க, வருடாந்தம் மேலும் 140 பில்லியன் ரூபா தேவை.   • 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க, வருடாந்தம் மேலும் 280 பில்லியன் ரூபா தேவைப்படும்   • ஐ.எம்.எப். உடன்படிக்கையின்படி மத்திய வங்கி பணத்தை அச்சிட முடியாது.   • நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, 2025 வரவு … Read more

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவராக தேசமான்ய கரு ஜயசூரிய தெரிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இவ்வொன்றியத்தின் தலைவராக முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய ஏகமானதாகத் தெரிவு செய்யப்பட்டார். முன்னாள் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால அவரது பெயரை முன்மொழிந்ததுடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி. ஜயசேன அதனை வழிமொழிந்தார். அத்துடன், ஒன்றியத்தின் அழைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பிரேமரத்ன அனைத்து உறுப்பினர்களினதும் ஏகோபித்த முடிவில் தெரிவு செய்யப்பட்டார். … Read more

அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15 முதல் 30 வரை

முதல் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சம் பேருக்கு மேலதிகமாக இரண்டாம் கட்டத்திற்கு மேலும் 450,924 விண்ணப்பங்கள். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 15 முதல் 30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. முதலாம் கட்டத்தில் தகுதி பெற்ற 18 இலட்சத்துக்கும் அதிகமானோரைத் தவிர இரண்டாம் கட்டத்திற்காக 450,924 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறப்பட்டுள்ளன. அவற்றில் நலன்புரி நன்மைகள் … Read more

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் – அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ்.சார்ளஸ் ஆகியோருடான கலந்துரையாடலில் இதனை வெளிப்படுத்தினார். மேலும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சுமூகமான சூழலை ஏற்படுத்துவதற்கு, குறித்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு விடுமுறை வழங்குவதுடன், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களை … Read more