சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2888 கிலோகிராம் பீடி இலைகளுடன் 03 சந்தேகநபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து மன்னார் வங்காலை பகுதியில் நேற்று (2024 ஜூலை 08,) மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து எண்ணூற்று எண்பத்தி எட்டு (2888) கிலோகிராம் பீடி இலைகளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள், ஒரு கெப் வண்டி மற்றும் லொறி வண்டியொன்று கைது செய்தனர். கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் … Read more

இந்த வருட இறுதிக்குள் ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான பயணச்சீட்டு வழங்க இலத்திரனியல் முறைமை அறிமுகப்படுத்தப்படும்

• கொம்பனித்தெரு மேம்பாலம் அடுத்த வாரம் மக்கள் பாவனைக்காக திறக்கப்படும் : கொஹுவல மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளும் நிறைவு – வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம். • இந்திய அரசாங்கத்தால் 20 புகையிரத இன்ஜின்கள் நன்கொடை: பெலியத்தை-கொழும்பு விசேட சரக்குப் போக்குவரத்திற்கான ரயில் ஆரம்பிக்கப்படும் – புகையிரத பதில் பொது முகாமையாளர். • முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்து சேவைகள் மற்றும் டெக்ஸிகளை ஒழுங்குபடுத்தக்கூடிய வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டம் … Read more

அநீதியான வகையில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தங்களால் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் மக்களின் நிம்மதியான வாழ்க்கை நிலையை சீர்குலைப்பது தான் நோக்கமா என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக … Read more

புத்தரின் போதனைகளில் உள்ள விடயங்கள் தான் இன்று உலகில் புதிய சிந்தனைகளாக முன்வைக்கப்படுகின்றன

• இன்று நாம் அறிவியலும் மதமும் ஒன்றாகச் சந்திக்கும் ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.   • புத்தரின் போதனைகளுக்கும் அறிவியல் உலகத்திற்கும் உள்ள தொடர்பை ஆராய ஒரு புதிய நிறுவனம்-அமரபுர தின நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி தெரிவிப்பு.   • அமரபுர மகா நிகாயவை பிரதிநிதித்துவப்படுத்தும் 22 மகா சங்கத்தினர் ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர். பௌத்த மதத்திற்கும் நாம் தற்போது பயணித்துக்கொண்டிருக்கும் நவீன விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப உலகிற்கும் இடையில் பாரிய தொடர்பு இருப்பதாகவும், உலகம் எதிர்நோக்கும் எதிர்கால … Read more

சேவைகளின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை – கடற்றொழில் அமைச்சர்

வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர் அடிப்படையில் சிற்றூழியர்களாக பணியாற்றுபவர்களது நிரந்தர நியமனம் தொடர்பில் விரைவில் தீர்வு காணப்படும் என கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறிப்பாக நீண்டகால சேவை சிரேஸ்டதுவத்தின் அடிப்படையில்   வைத்தியசாலையால் உறுதிப்படுத்தப்படும்  சுகாதார தொண்டர்களின் பட்டியல் உறுதிப்படுத்தப்பட்டு நியமனம் வளங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவுன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் தமது தொழிலில்  நிரந்தர நியமனம்  இன்றிப் பல வருடங்களாக கடமையாற்றி வருகின்ற நிலையில் நிரந்தர … Read more

வெளிநாட்டு வேலைக்குச் சென்று நாட்டிற்குஅபகீர்த்தியை ஏற்படுத்துபவர்கள் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படுவார்கள்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச்  செல்லும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் தொழில் மாற்றட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று 08  நடைபெற்றது. அண்மைக்காலமாக இஸ்ரேலிய விவசாயத் துறையில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இஸ்ரேலிய விவசாயத் துறை பணிகளுக்கான வாய்ப்புகளை இலங்கையர்கள் பெறுவது மகிழ்ச்சியான செய்தி எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் ” நாங்கள் … Read more

கதிர்காமத்திற்கு பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடற்படையின் ஆதரவு

யாழ்ப்பாணத்திலிருந்து செல்ல கதிர்காமம் ஆலயத்திற்கு வருடாந்த பாத யாத்திரையில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு, குமண தேசிய வனப் பூங்காவின் நுழைவாயிலில் இருந்து கும்புக்கன் ஓயா வரையிலான பாதையில் தேவையான வசதிகளை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் கடற்படையினரால் வழங்கப்பட்டதுடன், குறித்த நடவடிக்கைகளையும் அவதானிக்கும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, 2024 ஜூலை 03 ஆம் திகதி, கதிர்காமத்திற்கான பாத யாத்திரையில் பங்கேற்றார். இதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் … Read more

இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படைக் கப்பல் ருஹுண நிருவனத்தில் வசதிகளை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு மாடிகளைக் கொண்ட இந்த புதிய கட்டிடம் நேற்று (2024 ஜூலை 07) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை கடற்படை கப்பல் ருஹுண நிறுவனத்தில் நிர்வாக மற்றும் நலன்புரி வசதிகளை விரிவுபடுத்துவதற்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்த கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் 2019 ஆம் ஆண்டு தெற்கு கடற்படை கட்டளையின் சிவில் பொறியியல் துறையின் தொழில்நுட்ப … Read more

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா கடமைகளைப் பொறுப்பேற்றார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சந்திம சில்வா இன்று (2024 ஜூலை 08) கட்டளைத் தலைமையகத்தில் பதவியேற்றார். கடற்படையின் மரபுப்படி ரியர் அட்மிரல் சந்திம சில்வாவை தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்ற பின்னர், குறித்த கடற்படை கட்டளையின் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.   மேலும், தென் கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களுக்குப் பின்னர், ரியர் அட்மிரல் சிந்தக … Read more

நாளை (09) வழமை போன்று சகல அரச பாடசாலைகளும் செயற்படும்

நாளை (09) பாடசாலைகள் செயற்படுவது தொடர்பாக கல்வி அமைச்சு அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.  அதற்கிணங்க நாளை வழமை போன்று சகல அரச பாடசாலைகளும் செயற்படும் என்றும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.