கிராமிய பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக 2000மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி
கிராமியத் துறையில் சிறுகைத்தொழிலில் ஈடுபடும் பெண் சுயதொழில் முயற்சியாண்மையை வலுப்படுத்துவதற்காக மானிய அடிப்படையில் கடனுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி கிடைத்துள்ளது. அதன்படி இவ்வருடத்தில் அதற்காக 2000மில்லியன் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இளைஞர் விவசாயக் கிராம வாரத்தை ஆரம்பித்த முதலாவது கிராமமாக ஹங்குரன்கெத கலஉடகல கிராமத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் … Read more