இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்காமல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்.!

• அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களுக்கும் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு.   • பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் உதய செனவிரத்ன குழுவின் ஊடாக 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன். நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக … Read more

உரிய திகதியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளேன்

• இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு. உரிய திகதியில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்காக தேர்தல்கள் ஆணையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் விடயங்களை விளக்கியதாகவும், இலங்கை ராமன்ய நிகாயவின் மகாநாயக்க வண. மகுலேவே விமல நாயக்க தேரரிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு நேற்று (05) பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, இலங்கை … Read more

சமூக அபிவிருத்தி நிறுவனம் முன்னெடுக்கும் ஆங்கில Diploma பாடநெறி ஆரம்பநிகழ்வு

இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிவருகின்ற தேசிய அபிவிருத்தி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பாடநெறிகளோடு புதிதாக ஆங்கில பாடநெறியும் உள்வாங்கப்பட்டு நடாத்தப்படவுள்ளது. இவ் ஆங்கில பாடநெறியினை ஆரம்பிக்கும் ஆரம்பநிகழ்வு நேற்று (05) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.   ஆரம்ப நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் Hon .Anupa pasqual (State Minister Of social empowerment,தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் Dr.ரவீந்திரநாத்,கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி.நளாஜினி இன்பராஜ்,சமுர்த்தி திணைக்கள … Read more

கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் ஜனாதிபதி செயலகத்தில் 

கேகாலை, கேகலு வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றம் 2024.07.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகம் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் கலந்துகொண்டார். இதன்போது, ஜனாதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பாராளுமன்ற முறைமை தொடர்பில் புரிந்துகொள்வதற்கான இளையோரின் பங்கேற்பு தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளியிட்டார். மேலும், அரசியல் களத்தில் பிரவேசிக்கும் போது அரசியலில் நல்ல புரிதலுடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் … Read more

சீனாவில் இடம் பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில்  அமைச்சர் ஜீவன் ஆற்றிய உரை…

சீனாவின் டேலியன் நகரில் இடம்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாட்டில்  கலந்துக் கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இம்மாநாட்டில் கலந்துக்கொண்ட அவர் அங்கு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார். இதன் சிறப்பம்சமாக அங்கு வருகைத் தந்திருந்த ஏனைய நாட்டு பிரமுகர்கள் முன்னிலையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார். இலங்கையில் பெருந்தோட்டத் துறையில் தொழில் முனைவோர் … Read more

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 பேர் கடற்படையினரால் கைது

திருகோணமலை இரணைகேணி, நிலாவெளி, முல்லைத்தீவின் கொக்கிளாய், வெத்தலகேணியின் சளை, ஏறக்கண்டி மற்றும் திருகோணமலை எலிசபெத் முனை ஆகிய கடற்பரப்புகளில் 2024 ஜூன் 30 முதல் ஜூலை 03 வரை மேற்கொள்ளப்பட்ட தொடர் தேடுதல் நடவடிக்கைகளின் போது சட்டவிரோத வலைகள் மற்றும் மின் விளக்குகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 பேருடன் 07 டிங்கி படகுகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி … Read more

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடும்

இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஜூலை 09 விலங்கின நலம்பேணல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு விவாதம் ஜூலை 11 பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா தலைமையில் அண்மையில் (03) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள விடயங்கள் பற்றித் தீர்மானம் எடுக்கப்பட்டது.   … Read more

நாட்டின் பல பாகங்களில் அவ்வப்போது மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 05ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 04ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

கிளி. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜீலை மாத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நேற்று (04) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிமுக உரையுடன் ஆரம்பமாகியது. கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. வேரவில் கிராம அலுவலர் பிரிவில் காற்றாளை மின் உற்பத்தி திட்டம், புலோப்பளை காற்றாளை நிர்மாணத்திற்கான திட்டம், கோவில் … Read more

இஸ்ரேலுக்குச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறித்து அமைச்சரின் அறிக்கை

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் நவோர் கிலோனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (04) தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. இலங்கையர்களுக்கான இஸ்ரேலின் வேலை வாய்ப்புகள் மற்றும் தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் நிலைமை குறித்து கலந்துரையாடப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக இலங்கையில் இருந்து பயிற்சியற்ற தொழிலாளர்கள் கூட கோரப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் இஸ்ரேலுக்குச் சென்ற சில இலங்கையர்களின் நடத்தை மற்றும் … Read more