கடன் மறுசீரமைப்பின் வெற்றி வலுசக்தித் துறையை பலப்படுத்தும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மின்சார நெருக்கடியைத் தீர்க்க இது பெரும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் எதிர்க்கட்சியில் உள்ள சில தரப்பினர் நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக … Read more

கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபராக  எஸ்.முரளிதரன் கடமைகளை பொறுப்பேற்பு

கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன்  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (04) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். கிளிநொச்சி மாவட்டத்தின் மேலதிக  அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த எஸ்.முரளிதரன், முன்னாள் அரசாங்க அதிபரான றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்றுச்சென்ற பின்னர் அமைச்சரவை அனுமதிக்கமைவாக 15.03.2024ம் திகதியிலிருந்து கடமை நிறைவேற்று அரசாங்க அதிபராக பணியாற்றிவந்தார். தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் நிரந்தர பதில் அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன்   நியமிக்கப்பட்டு, அவருக்கான நியமனக்கடிதம் நேற்று (03)  தினேஷ்குணவர்தனவினால் … Read more

கிழக்குப் பல்கலைக்கழகம் கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்ட விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை, கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் (Booster Grant Project) விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் (02) நடைபெற்றது. ஆசிய பசுபிக் மெப்பிங் ஹப் (Asia -Pacific Mapping HUB) அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற இவ்விழாவில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி … Read more

தென்மாகாணத்தின் முதலாவது பக்கவாத நோய்க்கு சிகிச்சை வழங்கும் பிரிவு மக்கள் பாவனைக்காக கையளிப்பு

தரமான மற்றும் பாதுகாப்பான சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட 75 மில்லியன் ரூபாய் செலவில் காலி கராபிட்டிய தேசிய வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பக்கவாத நோய்க்கான சிகிச்சை பிரிவு நேற்று முன்தினம் நோயாளர்களுக்கு குணப்படுத்தும் சேவையை வழங்குவதற்காக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரனவினால் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. தென் மாகாணத்தின் ஒரே ஒரு மற்றும் முதலாவது பக்கவாத நோய் சிகிச்சை பிரிவான இந்த பிரிவை நிர்மாணிக்கம் … Read more

மாத்தறைக்கு பல நன்மைகளைக் கொண்டு வரும் ஜயகமு ஸ்ரீலங்கா

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் மாத்தறை மாவட்ட நிகழ்வு நாளை (05) மற்றும் நாளை (06) மறுதினம் ஹக்மன டெனி அபேவிக்கிரம விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவவிக்கும் “ஹரசர திட்டம்” புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , பாடசாலை உபகரணங்களுடன் புத்தகப் பைகள் விநியோகம் செய்யப்படும் , பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் … Read more

யாழ் தெல்லிப்பளை பகுதியிலுள்ள மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு நடவடிக்கை –  வடமாகாண ஆளுநர்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இயங்கும் மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில்,  ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இரண்டு  இல்லங்களையும் உடனடியாக மூடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  நன்னடத்தை மற்றும் சிறுவர்  பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.    மகளிர் இல்லம் ஒன்றில் பொருத்தமற்ற இடத்தில் நிறுவப்பட்ட சி.சி.ரி.வி கமராக்கள் தொடர்பிலும், பதிவு செய்யப்படாத சிறுவர் இல்லம் தொடர்பிலும் அபயம் பிரிவிற்கு முறைப்பாடு கிடைத்தது. … Read more

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைக்கப்படுமே தவிர, விற்கப்பட மாட்டாது

• ஆர்ஜென்டீனா, , ஈக்வடார் ( Ecuador) மற்றும் கானாவில், இருதரப்புக் கடன்களுக்காக அன்றி, வர்த்தகக் கடன்களுக்கே ( Commercial Loans) 25% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. • ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அடுத்த வாரம் JICA உடன் கலந்துரையாடல் நடத்தப்படும் – துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை … Read more

காலஞ்சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்குப் பாராளுமன்றத்தில் அஞ்சலி

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான காலஞ்சென்ற கௌரவ இராஜவரோதயம் சம்பந்தன் அவர்களின் பூதவுடலுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆகியோர் பாரளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (03) இறுதி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஜனாதிபதி கௌரவ ரணில் … Read more

போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பவற்றை நிவர்த்திக்கவே அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்களுடன் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது

நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்து மக்கள் சிரமப்படும் வேளையில், ​​பிரதமர் பதவியை ஏற்காமல், பயந்து ஓடுவது நற்செய்தியா? துயர் செய்தியா?- ஜனாதிபதி. போஷாக்கு குறைப்பாடு, வறுமை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை நிவர்த்திக்கவே இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் மற்றும் அஸ்வெசும, உறுமய போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். போஷாக்கு குறைபாடு, வறுமை, வேலையின்மை என்பன நாட்டுக்கு நற்செய்தியா? துயர் செய்தியா? என்று பாராளுமன்றத்தில் நேற்று (02) எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் … Read more

வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால் மூன்று புதிய நியமனங்கள் இன்று வழங்கி வைப்பு.

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (03/07/2024) வழங்கிவைத்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி சி.சுஜீவா அவர்களும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக திருமதி கு.காஞ்சனா அவர்களும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) திருமதி.அ.யோ.எழிலரசி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான … Read more