அஸ்வெசும திட்டத்தின் இரு பிரிவினருக்கு கொடுப்பனவுகளை வழங்க 11.6 பில்லியன் ரூபாய் விடுவிப்பு

• அந்த இரு பிரிவுகளுக்கும் வழங்கப்படும் விசேட கொடுப்பனவை செப்டெம்பர் வரையில் நீடிக்கத் தீர்மானம். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024 ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளின் கீழான கொடுப்பனவுகளை 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்வதற்காக நலன்புரி நம்பிக்கைச் சபை 11.6 பில்லியன் ரூபாவை (28) விடுவித்துள்ளது.   இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தில், பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா என்ற அடிப்படையில் 2023 ஜூலை … Read more

கிளிநொச்சியில் தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பம்

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்தும் 48வது தேசிய விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இன்று (28) கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. குறித்த போட்டித் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 8.00மணிக்கு கிளிநொச்சி நகர் பகுதியில் அமைந்துள்ள வட மாகாண உள்ளக விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகின. இதன்போது விருந்தினர்கள், மேற்கத்தேய இசை முழங்க அழைத்துவரப்பட்டு, தேசியக் கொடி, மாகாண கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய … Read more

நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது

அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர். நாட்டை முன்னேற்றிச் செல்வதற்கான இயலுமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது. எனவே நாட்டின் முன்னேற்றத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த மகா சங்கத்தினதும் ஆசி கிட்டும் என கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் தலைவரும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி அக்கமஹா பண்டித வண.இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (27) பிற்பகல் கொட்டாவ ருக்மலே … Read more

வெள்ள நிலைமை ஏற்பட்டமை குறித்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் அறிக்கையின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையைத் தயாரிக்கவும் – சாகல ரத்நாயக்க. கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை கோருமாறும், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் ஆரம்ப அறிக்கையை தயாரித்து இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அதன் பிரகாரம், … Read more

மதத் தளங்களுக்கு ஜனாதிபதி பயணம் செய்து ஆசி பெற்றார்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களையும் சந்தித்தார். நாட்டின் பிள்ளைகள் கல்வியை இழக்க இடமளியோம். ஆசிரியர் சமூகத்தின் மதிப்பைப் பாதுகாப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். சம்பள பிரச்சினைகள் ஏற்படாதவாறு அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான முறைமையொன்று அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் – மகா நாயக்க தேரர்களைச் சந்தித்து ஜனாதிபதி எடுத்துரைத்தார். ஜனாதிபதியின் விசேட உரை எதிர்காலம் மீதான நம்பிகையை தந்துள்ளது. அதற்காக மகா சங்கத்தினரின் ஆசி ஜனாதிபதிக்கு கிட்டும் – அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் முருந்தெனியே தம்மரதன தேரர். … Read more

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை அடைந்துள்ள வெற்றி நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் ஒரு நற்செய்தி!

சிலர் ஜனாதிபதி பதவிக்காக பாடுபடும்போது, நான் நாட்டுக்காக பாடுபடுகின்றேன். ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன். ‘ஹுனுவட்டயே’ நாடகத்தில் வருவது போல் குழந்தையைக் காப்பாற்ற ஆதரவளிக்காத குழுக்கள் இன்று குழந்தையின் உரிமையைப் பெற போராடுகின்றன. பாதை தவறினால் ஏற்படும் ஆபத்துகளை நாம் அனைவரும் அறிவோம். சரியான முடிவை எடுக்க மக்களுக்கு உரிமை உள்ளது. எந்த நிபந்தனையுமின்றி நாட்டைப் பொறுப்பேற்கையில் , பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற … Read more

அடுத்த இரண்டு பெரும்போக நெல் பயிர்ச்செய்கைக்கு MOP உரம் இலவசம்

ஜூலை 01 முதல் இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராமத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேசிய வாரம் – கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர. ஜூலை 01ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை இளைஞர் விவசாய தொழில்முனைவோர் கிராம வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேசிய வாரமொன்று அறிவிக்கப்படவுள்ளதாக கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். நெற் பயிச்செய்கைக்குத் தேவையான MOP உரத்தை அடுத்த இரண்டு பெரும் போகங்களுக்கு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க … Read more

உத்தேச உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின் வரைவு : விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல்கள்

இலங்கையில் தேசிய நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் நோக்கில் உத்தேச “உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தின்” வரைவு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கலந்துரையாடல்கள் நேற்று (25) மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றன. 1983 – 2009 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மோதல்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையைக் கண்டறிய பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்படும் ஒரு சுயாதீனமான நிறுவனமாக உண்மை, … Read more

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்த்தல் தொடர்பான கல்வி அமைச்சின் அறிவித்தல்

2021 மற்றும் 2022 க.பொ.த (உ.த) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2023 (2024) தொடர்பான விபரங்களையும், நேர்முகப்பரீட்சைக்கான நேரம் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியலையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. மேலதிக விபரங்களை https://moe.gov.lk என்ற இணையத்தளத்தில் அல்லது https://shorturl.at/6br30 என்ற லிங்கை அழுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

வடபிராந்திய கடற்படை கட்டளைத் தளபதிக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் சிநேகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் வடக்கு பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அத்மிரல் ரோஹித்த அபேசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை, ஆளுநர் செயலகத்தில் நேற்று (26/06/2024) சிநேகபூர்வ ரீதியாக சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். யாழ் குடாநாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தீவு பகுதி மக்களுக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் தொடர்பில்இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.