ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மக்களுக்கு தெரிவிக்கவுள்ளார். அதனை இரவு 8.00 மணிக்கு ஊடகங்கள் ஊடாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் – கடற்றொழில் அமைச்சருக்கிடையில் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ரூ பிரன்ச் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்தகப்பு கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (25.06.2024) இடம்பெற்றது. இதன்போது கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தமிழ் பொது வேட்பாளர் விடயங்கள் தொடர்பிலும் இருவருக்கிடையே கலந்துரையாடப்பட்டது. அதிகரித்திருக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை ,தொடரும் கைதுகள் தொடர்பாக அமைச்சர் … Read more

வடக்கு  மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நோக்கமாகும்  – வடக்கு மாகாண  ஆளுநர்

மாகாணத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நோக்கமாகும் என்று  வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.   மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் மக்களோடு இணைந்து  பிரதேச சபைகள் செய்யற்பட வேண்டும்.  அதற்கமைய பல சிறப்பான வேலைத்திட்டங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள் ஊடாகவும், மாகாண சபையினூடாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.     யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை  நேற்று (25/06/2024) திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே வடக்கு … Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!!

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக … Read more

43 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட சங்கர்புரம் பாடசாலை வீதி இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு!!

கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப்பிரதேசத்திற்கு இன்றயத்தினம் விஜயம் மேற்கொண்டு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார். முதலில் சங்கர்புரம் பாடசாலை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கொங்றீட் வீதியாக புனரமைக்கப்பட்ட ஒரு கிலோ மீற்றர் வீதியைத் திறந்து வைத்து அப்பகுதி மக்களின் குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டார். பின்னர் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள வாயிற் கோபுரத்திற்குரிய அடிக்கல்லை நட்டு வைத்தார். தொடர்ந்து வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப் பற்றுப் … Read more

ஹிங்குராக்கொட விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவைகளின் தரநியமங்களுக்கமைய அபிவிருத்தி செய்வதற்கு அனுமதி

ஹிங்குராக்கொட விமான நிலையம் சர்வதேச சிவில் விமான சேவைகளின் தரநியமங்களுக்கமைய அபிவிருத்தி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஹிங்குராக்கொட விமான நிலையத்திற்கான பிரதான திட்டத்தைத் தயாரித்தல் மற்றும் அதற்குரிய ஏனைய பணிகளுக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் விதந்துரைகளுக்கமைய ஹிங்குராக்கொட விமான நிலையத்தை முழுமையான விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக … Read more

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை மறுசீரமைத்தல்

தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தின் கனிஸ்ட விளையாட்டரங்கு மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டுத் திடலின் இரண்டாவது பார்வையாளர் அரங்கின் கூரைகளை அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கட்டுமானப் பணிகளை இலங்கை இராணுவத்தினர் மூலம் மேற்கொள்வதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று (24.06.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீரமானம் பின்வருமாறு: 01. தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கை மறுசீரமைத்தல் தியகம மஹிந்த ராஜபக்ஷ … Read more

2025 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து சம்பள முரண்பாடுகளும் நீக்கப்பட்டு, சம்பள உயர்வுகள், கொடுப்பனவுகள் மற்றும அதற்கான தீர்வுகள் வழங்கப்படும்

2025 வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து சம்பள முரண்பாடுகளையும் நீக்கி அந்த சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்; மேற்கண்டவாறு தெரிவித்தார். சில சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள … Read more

இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மன்ற கலந்துரையாடல்

இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மன்ற கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தலைமையில் பாசிக்குடாவில் நேற்று (24) இடம் பெற்றது. இலங்கை மத்திய வங்கியினால் முன்னேடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேடுப்புக்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலையில் தேசிய பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட உபாயங்கள் தொடர்பாக இதன் போது தெளிவூட்டப்பட்டது. மேலும் இதன் போது கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் … Read more

க.பொ.த சாதாரண தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதறற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழு அனுமதி..

க.பொ.த சாதாரண தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் பரிசீலிப்பதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க உபகுழுவின் பரிந்துரை கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அந்த பரிந்துரையை அமைச்சரவைக்கு முன்வைத்து அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், ஆசிரிய சேவையில் தற்போதுள்ள ஆசிரியர்களுக்கான ஆழனரடயச முறையை மாற்றுமாறு ஆசிரியர் சங்கங்களுக்கு அறிவித்து அரச சேவை ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட யோசனை ஆணைக்குழுவினால் பரிசீலிக்கப்பட்டு கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதேவேளை, கல்விக்கான அத்தியாவசிய பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலையை 2022 … Read more