வாகன இறக்குமதி குறித்து விசேட செய்தி…

2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மிக நுணுக்கமான ஆய்வுகளின் பின்னரே, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீட்டிக்கப்பட்ட கடன் … Read more

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளார்…

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு (26) நாளை உரை நிகழ்த்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் தொலைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் நாட்டின் பொறுப்புள்ள தலைவராக சர்வதேச நிதி தொடர்பாக விளையாட முடியாது. இது அனைவரதும் நாடு. இந்த நாடு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் இல்லாவிட்டால் யார் என்ன விதமாக … Read more

பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல்

பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரிவெனாக் கல்வியை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஒரு பிரிவெனாவுக்கு குறைந்தது இரண்டு கணணிகள், ஸ்மார்ட் திரை மற்றும் அச்சு இயந்திரமொன்றையும் வழங்குவதற்கும் இயலுமான வகையில் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவத்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று (24.06.2024) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை தீரமானம் பின்வருமாறு: 01. பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தல் பிரிவெனாக் கல்வி முறையில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் … Read more

வளங்கள் சமமாக கிடைக்கும் வகையில் கல்வி முறையில் செலவினத் தலைப்புகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்… – பிரதமர் தினேஷ் குணவர்தன

23.06.2024 அன்று கொட்டாவ ஆனந்த வித்தியாலயத்தின் புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்- புதிய அறிவையும், புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவது இன்றைய மாணவர் தலைமுறைக்கு மிகவும் அவசியமான சவாலாக உள்ளது. அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அந்த சவாலின் மூலம், நம் பிள்ளைகள் எதிர்காலத்திற்கு பயணிக்கக்கூடிய பாதையை வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு சாதனையுடனும், எதிர்காலத்தை திட்டமிடும் ஆர்வத்துடனும், … Read more

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் கூட்டம் (ISTRM) மொனராகலையில்

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM), 1983 – 2009 வரையிலான மோதலின் காரணமாக ஏற்பட்டுள்ள சமூக சவால்கள் மற்றும் அவதானிப்புகளை சேகரித்து அதற்கான தீர்வுகளை கண்டறியும் நோக்கத்துடன் 2024 ஜூன் 05 – 08 வரையில் மொனராகலை மாவட்டத்தில் பல்வேறு தரப்பினருடனான சந்திப்புகளை நடத்தியிருந்தது. அந்த காலப்பகுதியில், உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலக பணிக்குழுவினர் மொனராகலை மாவட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அடையாளம் காண்பதற்காக பல்தரப்பட்ட தரப்பினருடன் … Read more

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வேன் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

2024 T 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் நலனுக்காக அரசாங்கம் பாரிய செலவீனத்தை மேற்கொள்ளும் நிலையில், சர்வதேச அளவில் சாதனை படைத்த 60 விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு மாதாந்தம் தலா 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் தெரிவு செய்யப்பட்ட … Read more

இலங்கை பாடசாலை மாணவர்கள் “கேம்பிரிட்ஜ் காலநிலை ஆய்வு” சுய கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு

இந்நாட்டு மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்து நோக்கில் பிலிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் இலங்கையில்! தெற்காசியாவில் அதிநவீன எதிர்காலத்தை நோக்கமாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், இலங்கை மாணவர்களுக்கு ‘Cambridge Climate Quest’சுயக் கற்கை நெறியை இலவசமாக கற்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இலங்கையில் அவுஸ்திரேலிய பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் கிளை வளாகம் ஒன்று நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்கு கிட்டியுள்ளது. அதற்கமைய, தரம் 8 … Read more

சவால்களைக் கண்டு ஒருபோதும் தப்பியோட வேண்டாம்

மட்டக்களப்பு இளையோருக்கு ஜனாதிபதி அறிவுரை. • அடுத்த ஐந்து வருடங்களில் கிழக்கில் பரந்த அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவதற்கான வேலைத் திட்டத்துடன் இணைந்துகொள்ளுமாறு மட்டக்களப்பு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு.   எதிர்கால சந்ததியினர் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொண்டு கொள்கைகளுக்கு மதிபளிக்க வேண்டும் என்றும் சவால்களை கண்டு ஒருபோதும் தப்பியோட கூடாது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தினார்.   நாட்டில் வெற்றிகரமான தலைமைத்தும், தலைசிறந்த அரசியல்வாதி என்ற வகையில் ஜனாதிபதி கொண்டிருக்கும் அனுபவங்களுக்கமைய எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் அறிவுரை … Read more

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது

• நாட்டின் எதிர்காலத்திற்காக உண்மையைச் சொல்ல வேண்டும் -ஜனாதிபதி. நாட்டின் நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களிடமிருந்து நாட்டுக்கு நன்மையை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நாடு அராஜகமாக இருந்த போது தான் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால், இன்று நாட்டின் நிலைமையை நினைத்துப் பார்க்க முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.   மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் … Read more

ரி20 உலகக் கிண்ண தொடர் சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

ரி20 உலகக் கிண்ண தொடர் சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மஅணி வெற்றிரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடியமேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் … Read more