மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய

அரச நிறுவனங்களில் அறவிடப்பட படவேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். “உலகில் ஆகக் குறைந்த வருமானம் கிடைக்கப்பெற்றாலும் ஏதோ ஒரு இடத்திற்கு வந்து நாட்டைக் கொண்டு செல்கிறோம். அறவிடப்பட வேண்டியவற்றை அறவிடாது புதியவற்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக எதிர்க் கட்சியினர் தற்போது சொல்ல முயற்சிக்கிறார்கள். அது ஒரு தர்க்கமாகும். ஆம், அறவிடப்பட வேண்டிய மீதி வரித்தொகை அரசாங்கமாக தெளிவுபடுத்த  வேண்டும் என்றார் இராஜாங்க அமைச்சர். … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடற்றவர்களுக்கு எதிர்காலத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்

இந்த வாரத்திலிருந்து முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை – மட்டக்களப்பு இளைஞர்,யுவதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்காக பல புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பது உட்பட அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பல புதிய திட்டங்களை எதிர்வரும் வருடங்களில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதேவேளை, முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை 2500 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி … Read more

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன்

வர்த்தக மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.  

ரி20 உலகக் கிண்ண தொடர் சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மஅணி வெற்றி

ரி20 உலகக் கிண்ண தொடர் சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மஅணி வெற்றிரி20 உலகக் கிண்ண தொடரில் இன்று (24) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடியமேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் … Read more

நேரில் ஆராய்ந்து தீர்வு தருவேன் : குருநகர் கடல்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு

பண்ணை கடல் பிரதேசத்தில் அதிகளவில்  கடலட்டை பண்ணைகள் அமைத்து தொழில் முயற்சிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடும் போது ஏற்படும் தொழில் சார் பிரச்சினைகள் மற்றும் தமக்கான தொழில்சார் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது தொடர்பில் நேரில் ஆராய்ந்து தீர்வு தருவேன் என்று குருநகர் கடல்றொழிலாளர் பிரதிநிதிகளிடம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை   யாழ்ப்பாணம் குருநகர் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் நேற்று (23) சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் … Read more

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்!

• அதனால், விவசாயிகளின் வாழ்க்கையிலும் புதிய மாற்றம் ஏற்படும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பவே தாம் நாட்டைப் பொறுப்பேற்றதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் விவசாயிகளின் வாழ்விலும் புதிய மாற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.   விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் 55 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு – கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கடலை பதப்படுத்தும் நிலையத்தை நேற்று (23) காலை திறந்து வைத்து … Read more

காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலிடமிருந்து 10 மில்லியனுக்கும் அதிகமான நன்கொடை

• காஸா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது.   • பாலஸ்தீன அரசு 5 வருடங்களுக்குள் நிறுவப்பட வேண்டும்.   • பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.   • வங்குரோத்து அடைந்த சிறிய நாடாக இருந்தும், இலங்கை காஸாவுக்கு ஆதரவு வழங்கியது. காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 5 வருடங்களுக்குள் பாலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் எனவும் ஜனாதிபதி ரணில் … Read more

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய நிருவாக கட்டட தொகுதி பொது மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு…

மட்டக்களப்பு மாவட்ட, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் திராய்மடு பகுதியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலக கட்டட தொகுதி நேற்று (22)  திறக்கப்பட்டு, பொது மக்கள் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டது. 1055 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கிட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாடா வெட்டி உத்தியோக பூர்வமாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வின் போது இவ்வாறு வழங்கப்பட்டது. இதன் போது 20 … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   மழை நிலைமை:   புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.   காற்று : … Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சித் தலைவர் உறுதி

• மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது.   • நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அதே வேளை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வும் வழங்கப்படும்.   • அடுத்த 05 வருடங்களில் கிழக்கு மாகாணத்தை ஒரு விரிவான அபிவிருத்திக்கு கொண்டு வருவதற்கான சவால் வெற்றி கொள்ளப்படும் – ஜனாதிபதி. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். … Read more