இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைய இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் முன்னேறுவதே நோக்கமாகும்

• வலுசக்தித் துறை சார்ந்து இலங்கைக்கும் இடையில் செயற்படுத்தப்படும் கூட்டுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் கையளிக்கப்படும். • 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் – 2024 – அகில இந்திய பங்காளித்துவக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது … Read more

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) முற்பகல் அங்கு விஜயம் செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற ஜனாதிபதி, தேவாலயத்தின் பிரதான போதகர் ரொஷான் மகேசனுடன் கலந்துரையாடினார். தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகள் இதுவரை ஏன் நிறைவடையவில்லை என்பது தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.   அத்துடன், தேவாலயத்தின் திருத்தப் பணிகளை … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு உறுமய திட்டத்தின் கீழ் முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள்

• 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்.   • மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு.   • மக்களுக்கு “உரிமை” வழங்கப்பட வேண்டும் என்பதே எனது ஒரே குறிக்கோள்.   • திருகோணமலை முக்கிய ஏற்றுமதி மையமாக அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி. நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி … Read more

சீரற்ற காலநிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க. சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அதேநேரம், பகுதியளவில் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, இடம்பெற்றுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து … Read more

மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. • இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், இலவச சுகாதார சேவையை பாதுகாக்க வரலாற்றில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது – கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண. • ஜனாதிபதி நாட்டில் செய்த பொருளாதார அதிசயம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது – பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன. • கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது தப்பித்து ஓடாமல் அதனை எதிர்கொண்டு நாட்டுக்காக தமது … Read more

சூழல் சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை உறுதிபூண்டுள்ளது

• காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் வெளிநாட்டு நிதிக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை.   • சூழல் சார் வர்த்தகத் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நிதியைப் பெற்றுக்கொள்ள வெப்பமண்டல நாடுகள் செயற்பட வேண்டும் – 1st WLI Asia Oceania Conference 2024 உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் சூழல் சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு மட்டு.சிறையிலிருந்த 7 கைதிகள் விடுதலை!!

பொசன் பூரணை தினத்தினை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 7 ஆண் கைதிகள் நேற்று (21) பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இக்கைதிகள் இன்று காலை 10.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   சிறைச்சாலையின் பதில் பிரதம ஜெயிலர் ஜே.சி.ஹென்றி உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.   சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக … Read more

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ கப்பல் டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘SAMIDARE’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது இந்திய கடற்படையின் ‘SAMIDARE (DD – 106)’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட (2024 ஜூன் 20) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது, வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.   கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘SAMIDARE (DD – 106)’ என்ற கப்பல் 150.5 மீற்றர் நீளமும், மொத்தம் … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான பலத்த மழை பெய்யக்கூடும்..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 22ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 21ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலஇடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.காற்று :   நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் … Read more