இந்திய – இலங்கை கூட்டு அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்துவதில் கவனம்

• எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க முன்னுரிமை. • சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படும். • இந்நாட்டில் பால் உற்பத்தித் துறை மற்றும் உர உற்பத்தியை மேம்படுத்த இந்தியாவின் ஆதரவு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி … Read more

பொசன் நோன்மதி தின வாழ்த்துச் செய்தி

உன்னதமான பௌத்த தர்மத்தின் போதனைகளைச் சுமந்துகொண்டு எமது நாட்டுக்கு வருகைதந்த மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் பொசன் நோன்மதி தினம், இலங்கை வாழ் பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். அது குளங்கள், தூபிகள், கிராமங்கள் மற்றும் விகாரைகள் என்ற எண்ணக்கருவுடன் தூய சமய தத்துவத்தை தேசம் எங்கும் பரப்பி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயப் பொருளாதாரம் நிலவிய ஒரு சகாப்தத்தின் ஆரம்பமாகும். அது சமயம், சாசனம், கலாசாரம், சூழல், சமூக விழுமியங்கள் மட்டுமின்றி பல்வேறு புதிய எண்ணக்கருக்கள் … Read more

பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நேற்று (20) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. 2024 மே மாதம் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விதத்தின் ஒத்திவைக்கப்பட்ட இரண்டாவது நாள் விவாதம் இன்று நடைபெற்றதுடன், இது 04ஆம் திகதி விவாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.   இந்நாட்டிலுள்ள பெண்களை வலவூட்டும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டமூலத்தின் ஊடாக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் பற்றிய வலுவூட்டலுக்கு ஏற்பாடுசெய்வதற்கும், பெண்களின் முன்னேற்றம் மற்றும் வலுவூட்டல் … Read more

SLIC நிறுவனத்தினால் நீண்ட நாள் பழுதடையாத செமன் பக்கற் அறிமுகம்

இலங்கையில் முதல் தடவையாக தேசிய ரின்மீன் உற்பத்தி நிறுவனமான SLIC நிறுவனத்தினால் தனது நவீன தயாரிப்பான நீண்ட நாட்களுக்கு பழுதடையாமல் பாதுகாக்கக் கூடிய ஒருகிலோ எடை கொண்ட ஜக் மேக்கரல் செமன் பக்கற் ஒன்று சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு இன்று (21.06.2024) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. SLIC நிறுவனத்தின முகாமைத்துவப் பணிப்பாளரான கலாநிதி கபில பாலசூரியவினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வோனந்தாவிடம் சம்பிரததாயபூர்வமாக இந்த செமன் பக்கற் கைளிக்கப்பட்டதுடன் பேக்கரி … Read more

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கான உதவி கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்களை பூரணப்படுத்தும் செயற்திட்டம் முன்னெடுப்பு.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணைகளின் பின்னர் பரிந்துரைக்கப்பட்ட காணாமற்போன நபர்களின் குடும்பங்களுக்கான உதவி கொடுப்பனவு வழங்குவதற்கான விண்ணப்ப படிவங்கள் பூரணப்படுத்தும் செயற்திட்டம் 20.06.2024 இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. பகுதி பகுதியாக இடம்பெறும் இவ் செயற்பாட்டில் இன்றையதினம் 117 குடும்பங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் பூரணப்படுத்தப்பட்டன. அந்தவகையில் இதுவரை 460 குடும்பங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்று 117 குடும்பங்களுக்கான விண்ணப்பபடிவங்கள் பூரணப்படுத்தும் வேலைத்திட்டம் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

மலையக வீடமைப்பு திட்ட திறப்பு விழா

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் இலங்கை பயணத்தின்போது, ​​ஜனாதிபதி மாளிகையில்  மலையக வீடமைப்பு திட்ட திறப்பு விழா இடம்பெற்றது. இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் முழுமைப்படுத்தப்பட்ட 106 வீடுகளுக்கான நினைவுப் படிகங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் டொக்டர் ஜெய்சங்கர் கூட்டாக மெய்நிகர்(Virtual) ஊடாக 20.06.2024 நேற்று திறந்துவைத்தார். இதன்போது மலையக மக்களுக்கான தேவைப்பாடுகளை எங்ளுடைய வேண்டுகோளுக்கினங்க நிறைவேற்றிவரும் இந்திய அரசாங்கத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் … Read more

வவுனியா மாவட்டத்தில் 1305 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர்

வவுனியா மாவட்டத்தில் 1305 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குவதற்காக இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் 156 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா செலவிலான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு. மக்கள் நீண்ட காலமாக சுத்தமான குடிநீர் இன்றி படும் கஷ்டங்களை உணர்ந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் சுத்தமான குடிநீரை வழங்குவது தொடரான முயற்சிகளை மேற்கொண்டார்.   வட மாகாணத்தில் சுத்தமான குடிநீர் இன்றி சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 21ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூன் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு … Read more

“கந்துகர தசகய” வின் கீழ் 9,622 மில்லியன் ரூபா செலவில் 97 பிரதேச செயலகப் பிரிவுகளில் 14,088 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் தேவைகளில் 89% ஐ 2023 இறுதியில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த. கடந்த அரசாங்கங்களால் பூர்த்தி செய்யப்படாமல் இருந்த அனைத்து வீட்டுத் திட்டங்களின் பணிகளும் உடனடியாக முடிக்கப்படும் – தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி. திட்டமிடல் மற்றும் முதலீட்டு அனுமதியை துரிதப்படுத்த ONE STOP UNIT ஆரம்பிக்கப்பட்டுள்ளது – நகர அபிவிருத்தி அதிகார சபையின் … Read more

வீழ்ச்சி அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்தது

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார். வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களை சீர்குலைத்து, அனுபவமற்ற தரப்பினரிடம் கையளித்து நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு கொண்டு செல்வதா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) … Read more