பிள்ளைகளுக்கு உகந்த நாட்டை உருவாக்குவேன்! ஜனாதிபதி

6,000 உயர்தர மாணவர்களுக்கும் தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும். 100,000 மாணவர்களுக்கும் புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டம் ஆரம்பமானது. அடையாளமாக 5108 மாணவர்களுக்கு இன்று புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. உடனடியாக நிலுவைத் தவணையுடன் புலமைப்பரிசில் உதவித் தொகை மாணவர்களின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது. ஜனாதிபதி நிதியத்திலிருந்து கல்விப் புலமைப்பரிசில் வழங்குவதற்காக இவ்வருடத்தில் 04 பில்லியன் ரூபா ஒதுக்கீடு. நாட்டின் பிள்ளைகளுக்கு இன்னும் 05-10 வருடங்களில் சிறந்த நாடு உருவாக்கப்படும். ஜனாதிபதி என்ற … Read more

2025ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பாற்கான சுற்றறிக்கையில திருத்தங்கள்…

கடந்த வருடங்களில்; முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்கப்பட்ட போது எதிர்கொண்ட சிரமங்கள் மற்றும் பெற்றோரின் மனக்குறைகள் குறித்து முழு கவனம் செலுத்தி 2025ஆம் அண்டு முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கைக்கு தேவையான திருத்தங்களை முன்வைத்து நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் … Read more

இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்திய – இலங்கை உறவின் மைல்கல்லை அடையாளப்படுத்தும் வகையில் 03 அபிவிருத்தித் திட்டங்கள் மக்களுக்கு கையளிப்பு. இந்திய வௌிவிகார அமைச்சர் கலாநிதி. ஜெய்சங்கர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (20) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்தியாவில் புதிய ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் அந்நாட்டு பிரதிநிதியொருவர் வௌிநாட்டுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயத்தை அந்நாட்டு வௌிவிவகார அமைச்சர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ளர். ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த இந்திய வௌிவிவகார அமைச்சருக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் … Read more

உறுமய வேலைத்திட்டத்தை விரைவுபடுத்த இம்மாதம் 26 – 30 திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவை!

நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில், இம்மாதம் 26 – 30 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவையொன்றை நடத்த ஜனாதிபதி அலுவலகம் தீர்மானித்துள்ளது. அதன்படி காணி உறுதிகளை வழங்குவதற்கான சகல துறைசார் அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்பி அவர்கள் ஊடாக விரைவாக காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திரா ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற … Read more

பெருந்தோட்ட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் மலையக இளைஞர் மாநாடு….

மலையக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “நாம் 200” என்ற விசேட வேலைத்திட்டம் … Read more

கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி நியமனம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி அண்மையில் நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அண்மையில் (10) வழங்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றிய துஷார லொக்குகுமார அதன் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் இப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் சுரங்க பிரசாத் ஹிந்தல்ல ஆராச்சி தேசிய பெருந்தோட்ட கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும், இலங்கை துiமுக அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராகவும், பசுமைப் … Read more

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நிசாந்த விக்கிரமசிங்க நியமனம்

கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிசாந்த விக்கிரமசிங்க நேற்று (19) தமது அமைச்சில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றார். இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டது. முன்னாள் செயலாளர் செல்வி நயனாகுமாரி சோமரத்ன ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன், தெஹியோவிட்ட மற்றும் பசரை பிரதேச சபைகளில் உதவி பிரதேச செயலாளரகவும், பதுளை மாவட்ட சமுர்த்தி ஆணையாளராகவும், ஊவாபரணகம பிதேச … Read more

இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றிறிலிருந்து 3250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ கிராம் ஹெரோயின்…

இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் இரகசிய அறைகளில் மறைக்கப்பட்டுள்ள 3250 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 131 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் இலங்கை கடலோரக் காவல்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படையினர், தெவுந்தர இருந்து தெற்கு திசைக்கு சுமார் 356 கடல் மைல் (சுமார் 700 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரமபாஹு கப்பல் மூலம் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது … Read more

வீழ்ச்சி அடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்தது – கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத்

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ பி. ஹேரத் தெரிவித்தார். வலுவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களை சீர்குலைத்து, அனுபவமற்ற தரப்பினரிடம் கையளித்து நாட்டை மீண்டும் பாதாளத்திற்கு கொண்டு செல்வதா என்பதை மக்கள் நன்கு சிந்தித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19) … Read more

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூன் 20ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 20ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான … Read more