பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது – ஜனாதிபதி வலியுறுத்தல். ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நீதித்துறை, நிறைவேற்றுத்துறை, சட்டத்துறை அல்லது எந்தவொரு நிறுவனமும் அந்த நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்று வலியுறுத்தினார். ஆண்களுக்கு நிகரான உரிமைகளை பெண்களுக்கும் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். … Read more

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது

உத்தேச வாடகை வருமானச் சட்டம் அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானது சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த வரி அறவிடப்பட மாட்டாதென ஜனாதிபதி உறுதி சமபாலின திருமணம் குறித்த விடயம் இந்தச் சட்டத்தில் இல்லை.பௌத்த மதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பெண்களின் உரிமையையும் பாதுகாக்கும் வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.உத்தேச வாடகை வருமானச் சட்டம், அதிக வாடகை வருமானம் ஈட்டுவோருக்கு மாத்திரமானதாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஒவ்வொரு நபரினதும் முதல் … Read more

இந்த தேர்தலில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய பலமான சக்தி கட்டியெழுப்பப்படும்… மஹஜன எக்சத் பெரமுனவின் தலைவர்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இந்த அரசாங்கத்தில் மிகவும் சக்திவாய்ந்த பங்குதாரர் ஆகும்.. இந்த நாட்டில் எப்பொழுதும் கூட்டணி அரசாங்கங்களே இருந்துவந்துள்ளன… “நாட்டின் எதிர்காலமும் எமது பொறுப்பும்” என்ற தலைப்பில் 17.06.2024 அன்று மஹஜன எக்சத் பெரமுனவின் (மக்கள் ஐக்கிய முன்னணி) கம்பஹா மாவட்ட சபையின் ஏற்பாட்டில் கிரில்லவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்- “எங்கள் நாட்டில் சில முக்கியமான தருணங்களை நாங்கள் கடந்து, எதிர்காலத்தை … Read more

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

  இலங்கை கடற்படையினரால் 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. … Read more

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எழுத்து மூல இணக்கம் – கல்வி அமைச்சர்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் என்று நேற்று கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு எழுத்து மூலம் இலக்கப் பாட்டு வழங்குவதற்கு தயாராக உள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக (18) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைக்கு பதிலளிக்கு முகமாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த இவ்வாறு தெரிவித்தார். … Read more

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைவதற்கு வினாப்பத்திரம் மாத்திரம் போதாது -கல்வி அமைச்சர்

போன்ற பாடப்பிரிவுகள் மூன்று காணப்பட்டாலும் தொழில்நுட்ப பீடத்தை ஆரம்பித்ததுடன் தொழில்நுட்ப தொழில்நுட்ப பாடங்களை ஆரம்பித்ததாகவும் இன்று கலைப் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதிக கேள்வி காணப்படுகின்றது. தொழிற்துறையுடன் தொடர்புபடும் தொழில்நுட்ப பாடங்களுக்கும் அதிக வரவேற்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் இடம்பெற்ற சிக்கல் நிலை ஏற்படாதிருக்க இரண்டு வருடங்கள் இந்த செயற்பாடு களை  நிறுத்துவதற்கு முடிந்ததாகவும் ஆசிரியர்கள் இரண்டு லட்சத்து 32 ஆயிரம் பேரை பயிற்சிகளை  எதிர்காலத்தில் வழங்க  வேண்டி இருக்கும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் … Read more

ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பம் – சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி

நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார். இதன்படி, மாதாந்தம் 67,500 ரூபாய் கொடுப்பனவுடன் ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அரசாங்கம் 320 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் … Read more

வரையறுக்கப்பட்ட சிகிச்சை பயிற்சிக்காக 85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு  நியமன கடிதம் கையளிப்பு

வரையறுக்கப்பட்ட பல் வைத்தியப் பயிற்சிக்காக 85 பல் வைத்திய பட்டதாரிகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (18)  சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சருமான வைத்தியர் ரமேஷ் பத்திரன தலைமையில் குடும்ப சுகாதார அலுவலகப் பணிமனை கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.   மருத்துவ பட்டதாரிகள் உள்நாட்டு   மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொள்வதுடன் நாடு பூராகவும் அமைந்துள்ள அரசாங்கத்தின் பிரதான வைத்தியசாலைகளில் விஷேட மருத்துவர்கள், நன்கு அனுபவம் பெற்ற சிரேஷ்ட வைத்தியர்களின் பூரண கண்காணிப்புடன்  ஒரு வருட … Read more

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள … Read more

அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் சேவையின் வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையின் தரம் I, II மற்றும் 111 ஆகிய உத்தியோகத்தர்களுக்கான விடைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதி பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் திருத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அதிகாரிகளுக்காக அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறித்த பரீட்சை 2024 ஜூன் மாதம் 30 நடைபெறவுள்ளதுடன் அதற்காக 52,756 விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் 353 நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளது. பரீட்சை அனுமதிப் பத்திரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் ஊடாக … Read more