வல்லாட்சியில் சீனக் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாழில் இடமில்லை – கடற்றொழில் அமைச்சர்

கிடைக்கின்ற வாய்ப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி எமது மக்களை வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை அடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் சீனர்கள் கடலட்டை பண்ணை தொழிலில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அண்மையில் தெரிவித்த கருத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது கடலட்டை தொடர்பான தொழிலில் ஈடுபடுவதற்கு யாழ் மாவட்டத்தில் சீனர்கள் … Read more

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

2024 T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதற்சுற்றின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் நிக்கலெஸ் பூரன் அதிகபட்சமாக 98 … Read more

செந்தில் தொண்டமான் முயற்சி வினால் 20 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவை திறப்பு

திருகோணமலை மாவட்டத்தின் செல்வநாயகபுரத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல உட்பட அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார்

• சிறுதேயிலை தோட்டப் பிரச்சினைகளைத் தீர்க்க 50% நிவாரணம் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல். கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும். அவ்வாறன்றி தனிநபர்கள் அல்லது கட்சிகளினால் அதனைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார். சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 50% நிவாரணம் வழங்க ஜனாதிபதி … Read more

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் …

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூன் 18ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூன் 17ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை 19ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் … Read more

அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்

• அரசியல் தீர்வுகளைத் தேடும் இந்நாட்டு மக்கள் பொருளாதாரத் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தவில்லை – மன்னாரில் இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி. அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னாரில் நேற்று (16) இடம்பெற்ற இளையோர் மற்றும் வர்த்தகர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். “சுபீட்சமான எதிர்காலத்திற்கான பயணம்” என்ற பெயரில் இளைஞர் அமைப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்த … Read more

மகாவலி வளவ வலயத்தில் 45,253 பேருக்கு காணி உறுதி

• “உறுமய” வேலைத்திட்டத்தினால் நாட்டுக்கு சோறு தரும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துகிறோம் – ஜனாதிபதி. காணி உறுதிகள் இல்லாமல் நாட்டு மக்களுக்கு சோறு தந்த விவசாய மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே அரசாங்கத்தினால் உறுமய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சீ.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர இலவசக் கல்வியின் ஊடாக அறிவைப் பகிர்ந்தளித்தார். தற்போதைய அரசாங்கம் அறிவோடு, உரிமையையும் பகிர்ந்தளிக்கிறது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மகாவலி வளவ வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 45,253 … Read more

பிரதமர் அவர்களது ஹஜ் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) வாழ்த்துச் செய்தி

ஆன்மிக விழுமியங்களால் சமூகத்தை மேலும் வளப்படுத்துவோம். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் சமய வழிபாடுகளை நிறைவேற்றி தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.   அனைவரும் ஒன்றுபட்டு தமது சமயக் கிரியைகளை நிறைவேற்றி மகிழ்வது பழங்காலத்திலிருந்தே இடம்பெற்று வருகின்ற ஒன்றாகும். இந்த வகையில் இஸ்லாமியர்களும் ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம் பற்றிய செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கின்றனர். சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதே ஹஜ்ஜின் முக்கிய நோக்கமாகும்   அதன் ஆன்மிக விழுமியங்களால் இலங்கை சமூகத்தை மென்மேலும் வளம்பெறச் … Read more

மன்னார் மறை மாவட்ட ஆயருடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ அவர்களை இன்று காலை (16) மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளைப் பாராட்டிய மன்னாள் ஆயர், மன்னார் மாவட்ட அபிவிருத்தித் திட்டம் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார். மன்னார் – பருத்தித்துறை மற்றும் முல்லைத்தீவை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது. … Read more

எந்தவொரு சுற்றுச்சூழல் சட்டத்தையும் தலைகீழாக மாற்ற வேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்

• சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு மதிப்புமிக்க கனிம வளங்களைப் பங்களிப்பதற்கான துரித வேலைத்திட்டம் – மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர. • “சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்” பாதுகாப்பிற்கான செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைத்தது – அமைச்சின் செயலாளர். • முழு இலங்கையையும் உள்ளடக்கிய மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடு மேற்கொள்ளப்படும் – தலைவர் (மத்திய சுற்றாடல் அதிகாரசபை). • கனிம வள முகாமைத்துவம் தொடர்பான அனைத்து … Read more